News June 22, 2024

உச்சத்தில் பங்குகளை வாங்கலாமா?

image

இந்திய பங்குச்சந்தை உச்சத்தில் இருப்பதால், முதலீட்டாளர்கள் சிலர் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர். ஆனால், தற்போதும் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் தைரியமாக முதலீடு செய்யலாம் என கூறும் நிபுணர்கள், மொத்தமாக முதலீடு செய்யாமல், ’Buy on Dips’ முறையில் முதலீடு செய்ய அறிவுறுத்துகின்றனர். அதாவது, சந்தை இறங்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்ய பரிந்துரைக்கின்றனர்.

News June 22, 2024

கேரளா, கர்நாடகாவுக்கு ரெட் அலர்ட்

image

அதி கனமழை எச்சரிக்கை காரணமாக கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் மேற்கு கடலோர மாநிலங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் கேரளா, தெற்கு கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News June 22, 2024

பலியானவர்கள் பட்டியலில் 2 பேர் மிஸ்ஸிங்

image

விஷச்சாராயம் குடித்து பலியானவர்கள் பட்டியலில் 2 பேர் இடம்பெறாது தெரிய வந்துள்ளது. ஜூன் 20இல் இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், விஷச்சாராயம் குடித்த இளையராஜா மற்றும் ஜெயமுருகன் என்ற இருவர் 19ஆம் தேதியே இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்கள் பட்டியலில் அவர்கள் பெயர் விடப்பட்டுள்ளதால், நிவாரணம் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இது குறித்து விசாரிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News June 22, 2024

கம்பீர் சிறந்த போராட்ட குணம் கொண்டவர்: அஸ்வின்

image

கவுதம் கம்பீர் ஒரு சிறந்த போராட்ட குணம் கொண்ட வீரர் என இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் புகழாரம் சூட்டியுள்ளார். கம்பீர் குறித்து பேசிய அவர், கிரிக்கெட்டை பற்றி நன்கு புரிதல் கொண்ட கம்பீர், அணியின் வெற்றிக்காக எப்போதும் பாடுபடக் கூடியவர் என்றார். மேலும், அவரது நடத்தை பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், அவர் மீது தனக்கு மிகுந்த மரியாதை உள்ளதாகவும் கூறியுள்ளார்.

News June 22, 2024

நிதி தராததால் மாநில அரசுக்கு சுமை: அமைச்சர்

image

மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட திட்டத்துக்கு விரைந்து நிதி அளிக்க வேண்டுமென, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்துள்ளார். நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்படுவதால், மாநில நிதியில் பெரும் சுமை ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், மத்திய அரசின் நிதியுதவியோடு கூடிய திட்டங்களின் நிதிச்சுமையை, மாநில அரசுகள் மீது மத்திய அரசு சுமத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

News June 22, 2024

22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

இன்றிரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நீலகிரி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், நெல்லை மற்றும் குமரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News June 22, 2024

2030க்குள் குடிசை இல்லா தமிழகம்: ஐ.பெரியசாமி

image

மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சமத்துவபுரங்கள் இந்தாண்டு அமைக்கப்படும். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ஓராண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி தரப்படுவதோடு, 2030ஆம் ஆண்டுக்குள் குடிசை இல்லா தமிழகம் அமையும் வகையில், திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

News June 22, 2024

தமிழகத்தில் 4 புதிய மாநகராட்சிகள்

image

தமிழ்நாட்டில் அடுத்த 20 நாள்களுக்குள் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என, சட்டப்பேரவையில் அமைச்சர் KN.நேரு அறிவித்துள்ளார். தற்போது 490 ஆக உள்ள பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்த்தப்படும் என்றும், 21 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். நகராட்சிகளின் எண்ணிக்கையும் 139ல் இருந்து 159 ஆக உயர்த்தப்படும் என்றார்.

News June 22, 2024

காவல்துறை முதல்வரின் ஏவல் துறை: ஹெச்.ராஜா

image

விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாத கோழையாக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். கள்ளச்சாராய விற்பனையை திமுக அரசு தடுக்கவில்லை எனக் கூறிய அவர், காவல்துறை முதல்வர் ஸ்டாலினின் ஏவல் துறையாக மாறியுள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் சாராய சாம்ராஜ்யத்தை நிறுவிய கருணாநிதி வழியில், அவரது மகன் ஸ்டாலின் நடப்பதாகவும் விமர்சித்தார்.

News June 22, 2024

தொலைத்தொடர்புத் துறையில் ஜூன் 26இல் புதிய விதி அமல்

image

தொலைத்தொடர்புத் துறையின் புதிய விதிகள் ஜூன் 26ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய விதியின்படி, பேரிடர், குற்றங்களை தடுத்தல், மக்கள் பாதுகாப்பு போன்ற அவசர காலங்களில் எந்தவொரு தொலைத்தொடர்பு சேவைகள் அல்லது நெட்வொர்க்கையும் மத்திய அரசு அல்லது மாநில அரசு தற்காலிகமாக தனது முழு கட்டுப்பாட்டில் எடுக்க முடியும். அவசர காலங்களில் அரசு எச்சரிக்கை செய்திகளையும் பகிர முடியும்.

error: Content is protected !!