India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டி20 உலகக்கோப்பையில் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக விளையாடிய பாண்டியா 50*, விராட் கோலி 37, பண்ட் 36, டூபே 34 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து வங்கதேசம் அணிக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கதேசம் தரப்பில் ஹுசைன், தன்ஷிம் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இன்று எந்த அணி வெற்றிபெறும் என கமெண்ட் பண்ணுங்க.
ஆத்தூர் அருகே கள்ளச்சாராயத்தை விற்பனைக்கு கொண்டு சென்ற அதிமுக முன்னாள் நிர்வாகி கல்லாநத்தம் சுரேஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கையில் காவல்துறை தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், சுரேஷ் குமாரிடமிருந்த 40லி சாராயத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்
சாராயம் காய்ச்சும்போது மெத்தனால் (விஷம்), எத்தனால் (போதைப் பொருள்) இரண்டுமே உருவாகும். வெப்பநிலையை 64.7 டிகிரி செல்சியசுக்கு மேல் வைத்துவிட்டால் மெத்தனால் ஆவியாகிவிடும். தொழிற்சாலைகளில் இந்த வெப்பநிலை முறையாக கண்காணிக்கப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், வெப்பநிலையை கவனிக்காமல் விட்டுவிட்டால் மெத்தனால் அதிகமாகி குடிப்போருக்கு விஷமாகி விடுகிறது.
நடப்பாண்டில் இதுவரை 98,834 ஐடி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, Layoffs.fyi என்ற இணைய ஊடகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு நாளும் சுமார் 500 பேர் வேலையை இழக்கின்றனர். அழுத்தம் கொடுத்து பணியாளர்களை பணியில் இருந்து விலக செய்யும் ‘Silent Layoff’ அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டில் 20,000 இந்திய ஊழியர்கள் ‘Silent Layoff’ செய்யப்பட்டுள்ளனர்.
T20 உலகக் கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் (23), கோலி (37) பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த நிலையில், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். தற்போது இந்தியா 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் எடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி விவகாரத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்துள்ளனர். விஷச்சாராயம் அருந்தி 55 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும் என்றும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தி பாஜகவினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, கோவையில் போராடிய அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார்.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஆஸி., வீரர் வார்னர் 5 போட்டிகளில் 169 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக T20 WCல் இவர் இதுவரை 975 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 25 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் 1,000 ரன்கள் எடுத்த 4வது வீரர் என்ற பெருமையை பெறுவார். இதுவரை கோலி, ரோஹித், ஜெயவர்த்தனே மட்டுமே 1,000 ரன்களைக் கடந்துள்ளனர்.
நாடு முழுவதும் CNG கேஸ் விலையை கிலோ கிராமுக்கு ₹1 உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாநில வரிகளோடு சேர்த்து, இன்று முதல் கிலோ கிராமுக்கு ₹1 விலை உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில், CNG கேஸ் விலை ₹74.09இல் இருந்து, ₹75.09ஆக உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக, CNG மூலம் இயங்கும் ஆட்டோ, டாக்ஸி வாகனங்களின் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பதியில் தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்த பின் லட்டு விலை குறைந்துள்ளதாக வலைத்தளங்களில் பரவி வந்த தகவலுக்கு திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்துள்ளது. சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டின் விலை ₹300ல் இருந்து ₹200 ஆகவும், லட்டு விலை ₹50ல் இருந்து ₹25 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாக செய்தி பரவி வந்தது. இந்நிலையில், தரிசன டிக்கெட் மற்றும் லட்டு விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
எஃகு, அலுமினியம் உள்பட அனைத்து வகை பால் கேன்களுக்கும் ஒரே மாதிரியாக 12% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேசிய அவர், நடைமேடை டிக்கெட் உள்ளிட்ட அனைத்து ரயில் சேவைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும் என கூறியுள்ளார். மேலும், அட்டை பெட்டிகள், சோலார் குக்கர்களுக்கு 12% ஜிஎஸ்டி என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.