India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை தலைவர் சுபோத்குமார் சிங் இன்று பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இன்று (ஜூன் 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
நடப்பு 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில், 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மெகா வெற்றியை பதிவு செய்தது. இதனால், அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்த போட்டியில், 27 பந்துகளுக்கு 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 50 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவிய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
*கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்வு *நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு *₹60 கோடி மதிப்பீட்டில் முழு நேரம் இயங்கும் 500 நியாய விலைக்கடைகள் கட்டப்படும் என அரசு அறிவிப்பு *டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில், 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
கள்ளச்சாராயத்தில் மட்டுமல்ல, உணவகங்களில் நாம் விரும்பி சாப்பிடும் உணவுகள், குளிர்பானங்கள், கார்பன் கலந்த பானங்களிலும் மெத்தனால் கலந்திருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உணவின் சுவையைக் கூட்டுவதற்காக பரிந்துரைக்கப்பட்ட அளவில் மெத்தனால் சேர்க்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். இதன் அளவு ஒரு டெசிலிட்டருக்கு 5 மில்லி லிட்டருக்கும் குறைவாக இருப்பதால், அவை நமக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
T20 WCயில் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்தியா நிர்ணயித்த 197 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய வ.தேசம் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியில் நஜ்முல் 40, தன்ஷித் 29, ரஷித் ஹொசைன் 24 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். குல்தீப் 3, பும்ரா, அர்ஷ்தீப் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இரவில் தாமதமாக தூங்குவது உடல் நலத்திற்கு நல்லதல்ல என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த Standfort பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இரவு 1 மணிக்கு மேல் தூங்குபவர்களுக்கு மனநல பாதிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது. மேலும், நோய் எதிர்ப்புத் திறன் குறைவு, ஞாபக மறதி, கவனக் குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.
அனைத்து கிரெடிட் கார்டு பேமெண்ட்டுகளும் ஜூன் 30ஆம் தேதிக்குள் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (BBPS) மூலம் இணைக்கப்பட வேண்டும் என்று RBI தெரிவித்திருந்தது. இருப்பினும், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் ஆகிய வங்கிகள் BBPS உடன் இன்னும் இணைக்கப்படவில்லை. இதனால், ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகு இந்த வங்கிகளின் கிரெடிட் கார்டு பில்களை PhonePe, Cred போன்ற செயலி மூலம் செலுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.
*மேஷம் – இன்பமடைவீர்கள், *ரிஷபம் – ஜெயம் உண்டாகும், *மிதுனம் – பண வரவு கிடைக்கும், *கடகம் – உயர்வு காண்பீர்கள், *சிம்மம்- வெற்றிபெறுவீர்கள் , * கன்னி – துன்பம் நேரிடலாம், *துலாம் – பகையை தவிருங்கள், *விருச்சிகம் – தாமதம் ஏற்படலாம், *தனுசு – ஆதாயம் அடைவீர்கள், *மகரம் – ஆதரவு கிடைக்கும், *கும்பம் – முயற்சி செய்யுங்கள் *மீனம் – சுகம் உண்டாகும்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி நள்ளிரவு 1 மணி வரை திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.