India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்கு சென்ற பின் 8 கிலோ எடை குறைந்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சிறைக்கு செல்லும் முன் அவர் 70 கிலோ எடை இருந்ததாகவும், தற்போது 68 கிலோவாக குறைந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், உடல் எடை குறைவதை கருத்தில் கொண்டு தான், மருத்துவர்கள் பல பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளதாக ஆம் ஆத்மி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில், நேற்று நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில், 13 சிக்ஸர்களை இந்திய அணி அடித்தது. முன்னதாக, கடந்த 2007ஆம் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 11 சிக்ஸர்களை இந்தியா அடித்திருந்தது. அந்த எண்ணிக்கையை கடந்து, தற்போது புதிய உச்சத்தை இந்திய அணி பதிவு செய்துள்ளது. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணியாக நெதர்லாந்து (19) முதலிடத்தில் உள்ளது.
✍உன் துன்பத்திற்கு எது காரணமாய் இருந்தாலும் இன்னொருவரைப் புண்படுத்தாதே. ✍எதையும் தனது என்று நினையாதவனுக்குத் துன்பங்கள் ஏற்படுவதில்லை. ✍மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும், செயல் புரிந்தாலும் வண்டிச்சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வதுபோல துக்கம் அவனைத் தொடர்ந்து செல்லும்.
✍துன்பம் இத்தகையது என்று உணர்ந்தால், துன்பப்படுவோர் அனைவரையும் நம் சகோதரர்களாகப் பாவிப்போம்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படத்தில் நடித்தவர் இஷா கோபிகர். இவர், தனது தொடக்க காலத்தில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். தனக்கு 18 வயது இருக்கும் போது, நடிகர் ஒருவர் பாலியல் தேவைகளுக்காக தன்னை அணுகினார் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், 23 வயது இருக்கும் போது, இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த ஒருவர், தனியாக வந்து சந்திக்கும் படி கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
ராமர் மற்றும் கிருஷ்ணரின் போதனைகளை பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க உள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திர பட்வாரி, கடவுள்களின் போதனைகள் கற்று கொடுப்பது நல்ல விஷயம் தான் எனவும், ஆனால் பாஜக ஆட்சியில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு யார் பொறுப்பேற்பது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வு முறைகேடு எதிரொலியாக NTA தலைவர் மாற்றப்பட்டார். இந்த நிலையில், அதிகாரிகளை மாற்றினால் தீர்வு கிடைக்காது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால், மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும், தன்னாட்சி அமைப்பாக இருக்க வேண்டிய NTA பாஜக, RSS-க்கு சேவை செய்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக கோரி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவரது ஆட்சியின் கீழ் ஜனநாயகம் மரணித்துவிட்டதாக கூறி, இஸ்ரேல் கொடி மற்றும் “Crime Minister”, “Stop the War” ஆகிய பதாகைகளுடன் சுமார் 1.50 லட்சம் பேர் பேரணி சென்றுள்ளனர். ‘நாட்டின் மிக மோசமான பிரதமர் நெதன்யாகு’ என இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் தலைவர் யுவல் டிஸ்கின் தெரிவித்துள்ளார்.
*1868 – தட்டச்சுக் கருவி கண்டுபிடிப்புக்கான காப்புரிமத்தை கிறிஸ்டோபர் சோலெஸ் பெற்றார்.
*1658 – இலங்கையில் போர்ச்சுக்கீசியரின் கடைசிப்பிடியாக இருந்த யாழ்ப்பாணக் கோட்டையை டச்சுக்காரர்கள் கைப்பற்றினர். *1942 – நாஜிக்களின் ஆஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சு வாயு அறையில் சேர்ப்பதற்காக, முதல் தொகுதி யூதர்கள் பாரிசில் இருந்து அனுப்பப்பட்டனர். *2010 – உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் ஆரம்பமானது.
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் 50ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. விஜய் தனது சொந்த குரலில் பாடிய THE GOAT படத்தின் 2ஆவது பாடல் ‘சின்ன சின்ன கண்கள்’ நேற்று வெளியானது. இந்த நிலையில், கோட் படத்தின் போஸ்டரை நடிகர் கார்த்தி இருக்குமாறு உருவாக்கம் செய்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் அவரது ரசிகர்கள். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
T20WC தொடரின் நேற்றைய போட்டியில், வங்கதேசத்தை இந்தியா வீழ்த்தியது. இந்த போட்டியில், அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், டி20 உலகக்கோப்பை தொடரில் 6ஆம் வரிசையில் களமிறங்கி அரைசதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையையும், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 300 ரன்கள் மற்றும் 20 விக்கெட்கள் எடுத்த ஒரே இந்திய ஆல்-ரவுண்டர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.