India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி அருகே கார் மோதிய விபத்தில் உயிரிழந்த 3 பெண்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலா ₹3 லட்சமும், காயமடைந்தவருக்கு ₹1 லட்சமும் நிவாரண உதவி அறிவித்துள்ளார். முக்காணி பகுதியில் இன்று காலை சாலையின் ஓரம் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதியதில், 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன்-2 படத்தின் ட்ரெய்லர், நாளை மறுநாள் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படம், மிகப்பெரிய ஹிட் ஆனது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் படத்தின் 2ஆவது பாகம் தற்போது உருவாகியுள்ளது. சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் ஜூலை 12ஆம் தேதி திரையங்குகளில் ரிலீசாகிறது.
தூத்துக்குடி அருகே முக்காணி பகுதியில் இன்று காலை சாலையின் ஓரம் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் கார் மோதியதில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து, கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் வேகத்தடை அமைக்கப்படாததால் தான் விபத்து ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் உடனடியாக அருந்தக்கூடாது. பழங்களில் நிறைய சர்க்கரை, ஈஸ்ட் உள்ளதால், அவற்றை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது வயிற்று அமிலத்தை நீர்த்துப்போகச் செய்கிறது. இது ஈஸ்ட் செழித்து வளர வழிவகுப்பதுடன், வயிற்றில் வாயு பிரச்னையை உருவாக்கும். அத்துடன் வயிற்றில் செரிமானத்தை மெதுவாக்குவதோடு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டார் பகுதியில் 2 தீவிரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் உள்ளதாக தகவல் கிடைத்ததால் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
பாரதிய நியாய சங்கிதா எனும் புதிய கிரிமினல் சட்டம் வருகிற 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. முந்தைய கிரிமினல் சட்ட 377ஆவது பிரிவில், ஆண்கள், மூன்றாம் பாலினத்தவர், விலங்குகள் பாலியல் வன்கொடுமை குற்றங்கள், அவை கையாளப்பட வேண்டியவை குறித்த ஷரத்து இடம்பெற்றிருந்தன. புதிய சட்டத்தில் அது இல்லை. இதனால் அத்தகைய குற்றங்கள் எப்படி கையாளப்பட போகின்ற என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தோல்வி பயத்தால் அதிமுக புறக்கணித்ததாக கூறப்படுவது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறாது என்பதால் அதிமுக புறக்கணித்திருப்பதாகவும், சூழல் மற்றும் காலத்துக்கு ஏற்ப முடிவெடுப்பது ராஜதந்திரம் என்றும், அதன்படி இடைத்தேர்தல் புறக்கணிப்பு முடிவை இபிஎஸ் எடுத்துள்ளார் என்றும் உதயகுமார் கூறினார்.
தமிழக பாஜகவில் இருந்து 3 முக்கிய நிர்வாகிகளை நீக்கி அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத் தலைவர் பாஸ்கர், மாவட்டப் பொதுச்செயலாளர் செந்திலரசன், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் ஆகியோர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக, கல்யாணராமன், சூர்ய சிவா உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டி20, ஒருநாள் கிரிக்கெட் இல்லாத 1931ஆம் ஆண்டில் வெறும் 3 ஓவர்களில் அதிரடியாக சதமடித்துள்ளார் ஒருவர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகின் ஜாம்பவனாக வர்ணிக்கப்படும் மறைந்த டான் பிராட்மேன்தான் அவர். அப்போது ஒரு ஓவரில் 8 பந்துகள் வீசப்படும். இதன்படி 24 பந்துகளை எதிர்கொண்ட அவர், முதல் ஓவரில் 33, 2ஆவது ஓவரில் 40, 3ஆவது ஓவரில் 27 ரன் எடுத்து சதமடித்தார். அப்போட்டியில் அவர் மொத்தம் 256 ரன் விளாசினார்.
T20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆஃப்கன் அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. இதன்மூலம், அரையிறுதி செல்லும் வாய்ப்பு அந்த அணிக்கு குறைந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவுடன் நாளை நடைபெறவுள்ள போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் AUS உள்ளது. அதே சமயம் தோல்வியை தழுவுவதுடன், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஆஃப்கன் வெற்றி பெற்றால், உலகக் கோப்பை AUS அணிக்கு எட்டாக்கனியாகிவிடும்.
Sorry, no posts matched your criteria.