India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீட் யுஜி தேர்வு ஒத்திவைக்கப்பட்டதில், மாணவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு மத்திய மோடி அரசே பொறுப்பு என்று கார்கே தெரிவித்துள்ளார். அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும் பாஜகவால் கல்வியில் உருவாக்கப்பட்ட பிரச்னையை சரி செய்ய முடியாது என்றும், தேசிய தேர்வு முகமை சுதந்திரமான அமைப்பாக கூறப்பட்டாலும், உண்மையில் பாஜக, ஆர்எஸ்எஸ்ஸின் வஞ்சகத் திட்டங்களுக்கு சேவை செய்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூலை 2ஆம் தேதி துணைத் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை எழுதுவதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படுகிறது. இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலில், www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தேர்வர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களது நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற சூப்பர் 8 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஐசிசி உலகக்கோப்பைத் தொடர்களில் ஆஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிக்கு ஆஃப்கன் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி ஐசிசி உலகக்கோப்பைத் தொடர்களில் தொடர்ந்து இதுவரை 14 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. இன்றைய போட்டியிலும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அந்த அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகரும், சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்று மகிழ்ந்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மாற்றம் அறக்கட்டளை தொடங்கியது தொடர்பாக ரஜினியை நேரில் சந்தித்து, அவரிடம் வாழ்த்து பெற்றதாக கூறியுள்ளார். ஏழை, எளியோர், குழந்தைகளுக்கு லாரன்ஸ் உதவிவரும் நிலையில், அவருடன் இணைந்து KPY பாலாவும், பலருக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.
பாஜக ஆட்சியில் ஊழல்வாதிகள், மாஃபியாக்கள் வசம் கல்வித்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வு குளறுபடி, UGC-NET, PG NEET தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் கல்வி முறை, மாணவர்களின் எதிர்காலம் ஆகியவற்றை பாஜக சிதைத்துவிட்டதாக விமர்சித்தார். மேலும், நியாயமான முறையில் ஒரு தேர்வை கூட பாஜக அரசால் நடத்த முடியாது எனவும் அவர் சாடினார்.
டி20 WC சூப்பர் 8 சுற்றில் இந்தியா அடுத்து ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இதில் வென்றாலோ, சில ரன் வித்தியாசத்தில் தோற்றாலோ இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி விடும். ஆனால் படுதோல்வி அடைந்தால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பாதிக்கப்படும். ஆஸ்திரேலிய அணியோ இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெறுவதுடன், வங்கதேசம் அணி ஆஃப்கனை வென்றால் மட்டுமே அரையிறுதிக்குள் வர முடியும்.
தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, இன்று நீலகிரி, கோவையில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இரவு வேளையில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதிய தூக்கமின்மை, தூசு, புகையால் ஏற்படும் அலர்ஜி, மதுப்பழக்கம் உள்ளிட்டவையால் கண்கள் சிவப்பு நிறமாக மாறக்கூடும். பொதுவாக இப்பிரச்னை சில மணி நேரத்தில் சரியாகிவிடும். ஆனால் திரும்பத் திரும்ப இப்பிரச்னை வந்தால் தாமதிக்காமல் நல்ல கண் மருத்துவரை அணுகுவது நல்லது. விழித்திரை காயம் போன்றவற்றால் நிறம் மாறுவது தெரிந்தால் சிகிச்சை பெறுவது நலமாகும். இல்லையேல் பார்வை குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
ரஜினிக்கு வயதாகிவிட்டதால், அவருக்கு ஏற்ற கதாநாயகிகள் கிடைப்பதில்லை என மன்சூர் அலிகான் கூறியுள்ளார். சூரியனும், சூரியகாந்தியும் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ஐஸ்வர்யா ராய் போன்ற மூத்த நடிகைகள் தான் அவருக்கு ஜோடியாக நடிக்க முடியும். இவர்களுக்காகத் தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவழிக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் சிறிய பட்ஜெட் படங்களின் நிலைமை படுமோசமாகிவிடும் என அச்சம் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 57ஐ கடந்துள்ளது. தொடர்ந்து, 100க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
Sorry, no posts matched your criteria.