India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி நகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மேலும், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதிகளிலும் ஒரு மணி நேரமாக சூறைக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. அதோடு, கோவை மாவட்டம் வடவள்ளி, பேரூர், தொண்டாமுத்தூர், ஆலந்தூர் ஆகிய பகுதிகளிலும் கடலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழை பெய்து வருகிறது.
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான லவுரா 61, தஸ்மின் 38 ரன்கள் அடித்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால் அந்த அணி 215 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா தரப்பில் அருந்ததி ரெட்டி, தீப்தி ஷர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவின் திருமணம் லண்டனில் உள்ள லேடி வாக் எஸ்டேட்டில் நேற்று நடைபெற்றது. சித்தார்த்தும் அவரது நீண்ட நாள் காதலி ஜாஸ்மினும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பிரமாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். லண்டனில் உள்ள 30 ஏக்கர் லேடி வாக் எஸ்டேட்டை விஜய் மல்லையா கடந்த 2015ல் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
T20 WCயில் வெஸ்ட் இண்டீஸ் அணி இல்லை என்றால், இந்திய அணிக்கு தான் ஆதரவு அளிப்பதாக அந்த அணியின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றியடைந்த இந்திய அணிக்கு பதக்கத்தை வழங்கிய அவர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். காயத்திலிருந்து மீண்டு வந்த பண்ட் சிறப்பாக ஆடிவருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆகாஷ் ஆனந்த் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். மேலும், அவரை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், தனது அரசியல் வாரிசாகவும் அறிவித்தார். ஏற்கெனவே அரசியல் வாரிசு என்று அறிவிக்கப்பட்டிருந்த ஆகாஷ் ஆனந்த், சில மாதங்களுக்கு முன் ‘முதிர்ச்சியற்றவர்’ என்று கூறி மாயாவதியாலேயே கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை தருவதாக ஆட்ட நாயகன் விருதை வென்ற ஆஃப்கன் வீரர் குல்புதீன் நயிப் தெரிவித்துள்ளார். ஆஸி., அணியை வெற்றிக்கொள்ள வேண்டும் என்ற இந்த தருணத்திற்காகத்தான் பல ஆண்டுகளாக காத்திருந்துள்ளதாக கூறிய அவர், ஆஃப்கன் நாட்டிற்கு இது பெருமைமிகு தருணம் என்றார். இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அவர், ஆஸி.,அணியின் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
காவல்துறை மற்றும் வருவாய் துறையில் உள்ள கருப்பு ஆடுகள் கைது செய்யப்பட வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். கல்வராயன்மலையில் சாராய உற்பத்தி தொடர் கதையாகி வருவதாக குற்றம் சாட்டிய அவர், சாராயம் காய்ச்சுவதற்கு உடந்தையாக இருந்த அனைத்து அதிகாரிகளும் கைது செய்யப்பட வேண்டும் என்றார். அதிமுக ஆட்சியிலும் இதே போல உயிரிழப்புகள் நடைபெற்றதாக அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், செங்கல்பட்டு, மதுரை, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
‘கங்குவா’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் சுஜித் சங்கர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சமீபத்தில் வெளியான ‘ரசவாதி’ படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முதுநிலை நீட் ஒத்திவைப்பால் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார். நீட் முறைகேடுகளை முதலில் ஏற்க மறுத்த மத்திய அரசு பின்னர் அதை ஒத்துக்கொண்டதாக கூறிய அவர், தேசிய தேர்வு முகமை தலைவரை நீக்கியதன் மூலம் தேர்வில் முறைகேடு நடைபெற்றது வெளிப்படையாக தெரியவந்துள்ளது என்றார். முதுநிலை நீட் தேர்வு இன்று நடைபெற இருந்த நிலையில், திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.