India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் அமெரிக்கா 115 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து இப்போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் புள்ளிப் பட்டியலில் முன்னேறும். அதேநேரம் இங்கி., இப்போட்டியில் 18.4 ஓவரில் வெற்றிபெற்றால் எளிதாக அரையிறுதிக்கு சென்று விடும். மாறாக 18.5 ஓவரில் வெற்றிபெற்றால், மற்ற அணிகளை நம்பி இருக்கவேண்டிய சூழல் ஏற்படும்.
சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற வருவோர் மது அருந்தியிருந்தால் ரத்த பரிசோதனை கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் இந்த அறிவிப்பாணையை சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேசி அனுப்பியுள்ளார். விபத்து வழக்குகளில் இழப்பீடுகளை தீர்மானிக்க முடியாத நிலை இருப்பதாக ஐகோர்ட் கூறியிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பையில் இரண்டாவது முறையாக ஹாட்ரிக் எடுத்த ஆஸி., வீரர் பேட் கம்மின்ஸ் ஒரு முக்கிய சாதனையை தவற விட்டுள்ளார். ஆஃப்கன் அணிக்கு எதிராக இன்றைய போட்டியில், ஹாட்ரிக் எடுத்த அவர், தொடர்ந்து 4 விக்கெட்டை எடுக்க வாய்ப்பிருந்தும், ஆஃப்கன் வீரர் கொடுத்த கேட்சை வார்னர் தவறவிட்டார். இதன் மூலம் 4 பந்தில் 4 விக்கெட்டை வீழ்த்திய மலிங்காவின் சாதனையை அவரால் சமன் செய்ய முடியவில்லை.
தஜிகிஸ்தான் அரசு அந்நாட்டு பெண்கள் பொதுவெளியில் ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த ஹிஜாப் தடையை மீறும் பெண்களுக்கு இந்திய மதிப்பில் ₹5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, தங்களின் தேசிய உடையான தாஜிக்கை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. தஜிகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் கடைசி 6 பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளது இங்கிலாந்து அணி. 18வது ஓவரை வீசிய சாம் கரண் கடைசி பந்தில் ஒரு விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 19வது ஓவரை வீசிய ஜோர்டன் W 0 W W W என ஐந்து பந்துகளில் ஒரு ஹாட்ரிக் விக்கெட் உட்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இங்கிலாந்தின் வேகத்தில் USA அணி 115 ரன்களில் சுருண்டுள்ளது.
T20 WCயில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா 115 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இங்கிலாந்தின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் USA அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் நிதிஷ் குமார் (30), ஆண்டர்சன் (29) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். USA 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் எடுத்து. ENG தரப்பில் ஜோர்டன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
மக்களவையில் உதவி தற்காலிக சபாநாயகர் பொறுப்பு பதவியை நிராகரிப்பதாக INDIA கூட்டணி அறிவித்துள்ளது. தேர்தலுக்குப் பின் மக்களவையின் முதல் கூட்டம் நாளை தொடங்குகிறது. அதில் புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகரான பாஜக எம்பி பர்த்ருஹரி பதவிப்பிரமாணம் செய்துவைக்க உள்ளார். இந்நிலையில், INDIA கூட்டணி கட்சிகள் இப்பதவியை நிராகரிப்பதாக தற்போது நாடாளுமன்ற விவகாரத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளன.
நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் மேலும் 400 கிளைகள் திறக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் தினேஷ் காரா அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு 137 கிளைகள் திறக்கப்பட்ட நிலையில், அதில் 59 கிளைகள் கிராமப்புறங்களில் தொடங்கப்பட்டது. இந்நிலையில், தங்களின் சேவை தேவைப்படும் பகுதிகளில் கிளைகள் திறக்கப்படும் என SBI தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் நிலவரப்படி, நாடுமுழுவதும் மொத்தம் 22,542 SBI கிளைகள் உள்ளன.
விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்ட விடுத்த சிறுவனை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். டெல்லி விமான நிலையத்துக்கு சில நாள்கள் முன்பு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை செய்த போலீசார், 13 வயது மாணவன் தான் இதற்கு காரணம் என்பதை கண்டறிந்தனர். சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவன் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், சிறுவனை எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் படைத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் 1 விக்கெட்டை எடுத்ததன் மூலம், அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். 2 ஆவது இடத்தில் 39 விக்கெட்டுக்களை எடுத்து பாகிஸ்தானின் ஷாகித் அஃப்ரிடியும், 3ஆவது இடத்தில் 38 விக்கெட்டுகளுடன் இலங்கையின் மலிங்காவும் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.