News June 24, 2024

முதல்வரின் செயலாளர் என கூறி ஏமாற்ற முயற்சி

image

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செயலாளர் என கூறி, அரசு உயர் அதிகாரிகளிடம் ஏமாற்ற முயன்ற பண்டு சவுத்ரி என்கிற விவேக் சர்மாவை போலீசார் கைது செய்தனர். அதிகாரிகளிடம் ஏமாற்றும் நோக்கத்தில் போன் செய்து பேசியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். முன்னதாக, இவர் மீது பல்ராம்பூர், மதுரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

News June 24, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶ஜூன்- 24 | ▶ஆனி – 10 ▶கிழமை: திங்கள் | ▶திதி: த்ரிதியை ▶நல்ல நேரம்: காலை 06:30 – 07:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை ▶கெளரி நேரம்: காலை 09:30 – 10:30 வரை, இரவு 07:30 – 08:30 வரை ▶ராகு காலம்: மாலை 07:30 – 09:00 வரை ▶எமகண்டம்: நண்பகல் 10:00 – 12:30 வரை ▶குளிகை: பிற்பகல் 01:30 – 03:00 வரை ▶சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்

News June 24, 2024

நீட் விவகாரம்: முன்னாள் பாஜக அமைச்சர் ஏமாற்றம்

image

சமீபத்தில் நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்தன. இந்த விவகாரத்தில் மாணவர்கள் பாதிக்கப்படுவது ஏமாற்றம் அளிப்பதாக, முன்னாள் மத்திய பாஜக அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும், பாதுகாப்பான முறையில் தேர்வுகளை நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது மாணவர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News June 24, 2024

மன்னிப்பு கோரினார் நாகர்ஜுனா

image

ஹைதராபாத் விமான நிலையத்தில் நடிகர் நாகர்ஜுனாவை காண வந்த வயதான ரசிகரை, பாதுகாவலர் கீழே தள்ளிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், சம்பந்தபட்ட நபரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நாகர்ஜுனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இப்படி நடந்திருக்கக் கூடாது எனவும், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.

News June 24, 2024

சேகுவேரா பொன்மொழிகள்

image

✍நான் சாகடிக்கப்படலாம், ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப்படமாட்டேன். ✍எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ, அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும். ✍எதிரிகள் இல்லாத வாழ்க்கை, முழுமையான வாழ்க்கை இல்லை. ✍நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய் தான் இருக்கும். ✍ஒருவரின் காலடியில் வாழ்வதைவிட, எழுந்து நின்று உயிரை விடுவது மேல். ✍விதைத்தவன் உறங்கினாலும் விதை உறங்குவதில்லை.

News June 24, 2024

ரயில்களில் கிடந்த பெண்ணின் உடல் உறுப்புகள்

image

மத்திய பிரதேசத்தில் 37 வயது பெண்ணை கொலை செய்து, உடல் உறுப்புகளை 2 ரயில்களில் போட்டு சென்ற கமலேஷ் படேல் (60) என்பவரை போலீசார் கைது செய்தனர். கணவருடன் சண்டை போட்டு உஜ்ஜயினி ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பெண்ணை, பாலியல் வல்லுறவு செய்ய முயன்று, அது முடியாததால் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண்ணின் கால்கள் மற்றும் கைகள் உத்தராகண்டிலும், மீதமுள்ளவை இந்தூரிலும் கண்டுபடிக்கப்பட்டுள்ளது.

News June 24, 2024

Ultra Model உடையில் கீர்த்தி சுரேஷ்

image

தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது இந்தி திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார். விஜய்யின் ‘தெறி’ படம் பாலிவுட்டில் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் சமந்தா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த நிலையில், மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.

News June 24, 2024

சூரஜ் ரேவண்ணாவிற்கு நீதிமன்ற காவல்

image

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களுடன் அந்தரங்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதையடுத்து கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது சகோதரர் சூரஜ் ரேவண்ணா, கட்சி உறுப்பினரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த புகாரில் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News June 24, 2024

ஜூன் 24 வரலாற்றில் இன்று!

image

*1597 – கிழக்கிந்தியத் தீவுகளுக்கான முதலாவது டச்சுப் பயணிகள் கப்பல், இந்தோனேசியாவின் ஜாவா தீவை அடைந்தது. *1939 – சியாம் நாட்டின் பெயர் தாய்லாந்து என மாற்றப்பட்டது. *2004 – நியூயோர்க்கில் மரண தண்டனை சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்டது.
*1921 – கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்.
*1928 – திரைப்பட இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் பிறந்தநாள்.

News June 24, 2024

சண்டை முடிவுக்கு வருகிறது: நெதன்யாகு

image

ரஃபாவில் ஹமாஸ் இயக்கத்திற்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் கடும் தாக்குதல், கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். தீவிர தாக்குதல் தான் முடிவுக்கு வருகிறதே தவிர, போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என அவர் கூறியுள்ளார். மேலும், சண்டை முடிந்த பின், படைகளை மீண்டும் வடக்கு பகுதியில் நிலை நிறுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!