News June 24, 2024

5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோட் எடுத்துச்செல்லுங்கள்.

News June 24, 2024

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?

image

T20 WC சூப்பர் 8 சுற்றில் இன்று தென்னாப்பிரிக்கா-மேற்கிந்திய தீவுகள் மோதுகின்றன. முதலில் பேட்டிங் செய்து வரும் WI அணி, 15 ஓவர்களில் 97/5 ரன்கள் எடுத்துள்ளது. குரூப்-2இல் இந்த அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். இதனால், இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எந்த அணி அரையிறுதிக்கு செல்லும்?

News June 24, 2024

விஷச்சாரய விவகாரம்: அதிமுக இன்று போராட்டம்

image

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 55க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சியில் நடைபெறும் போராட்டத்தில் இபிஎஸ் பங்கேற்கிறார். சென்னையில் ஜெயக்குமார், கோவையில் செல்லூர் ராஜூ பங்கேற்க உள்ளனர்.

News June 24, 2024

10ஆம் வகுப்பு துணைத்தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூலை 2ஆம் தேதி துணைத் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை எழுதுவதற்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

News June 24, 2024

டி20 WC: இந்தியா, ஆஸி. அணிகள் இன்று மோதல்

image

டி20 WC சூப்பர் 8 சுற்றில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதவுள்ளன. இரவு 8 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் வென்றாலோ அல்லது சில ரன் வித்தியாசத்தில் தோற்றாலோ இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும். படுதோல்வி அடைந்தால் அரையிறுதி வாய்ப்பு பாதிக்கப்படும். ஆஸ்திரேலியாவோ இந்தியாவை வெற்றி பெறுவதுடன், வங்கதேசம் ஆஃப்கனை வென்றால் அரையிறுதிக்கு செல்லும்.

News June 24, 2024

மக்களவை புதிய எம்பிக்கள் இன்று பதவியேற்பு

image

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குகிறது. காலை 11 மணிக்கு முதலில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆகியோர் எம்பிக்களாக பதவியேற்கவுள்ளனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் பதவிபிரமாணம் செய்து வைப்பார். இதையடுத்து பெயரில் உள்ள எழுத்து வரிசைப்படி மற்ற எம்பிக்கள் பதவியேற்க உள்ளனர். முதலில் அசாம், கடைசியாக மேற்குவங்க எம்பிக்கள் பதவியேற்பர்.

News June 24, 2024

T20 WC தொடரிலிருந்து USA வெளியேறியது

image

T20 WC தொடரிலிருந்து அமெரிக்க அணி வெளியேறியுள்ளது. சூப்பர் 8 சுற்றில் நேற்று இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட USA, தோல்வியை தழுவியது. இதன்மூலம், சூப்பர் 8இல் 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த USA, முதல் அணியாக அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது. இதனிடையே, 3இல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ENG அணி, நெட் ரன் ரேட் (+1.992) அடிப்படையில் முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

News June 24, 2024

நடிகர் அர்ஜூனின் இளைய மகள் செம டான்ஸ்

image

நடிகர் அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் காதல் மலரவே, இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஐஸ்வர்யா திரைத்துறையில் பயணித்து வரும் நிலையில், தங்கை அஞ்சனா திரையுலகம் பக்கம் வராமல் இருக்கிறார். இந்த நிலையில், அக்காவின் வரவேற்பு நிகழ்ச்சியில் அஞ்சனா நடனமாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

News June 24, 2024

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காத்திருக்கும் பரபரப்பு

image

2024 பொதுத் தேர்தல் முடிந்த பின், முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப்க்கு ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். 26ஆம் தேதி நடைபெற உள்ள சபாநாயகர் தேர்தல், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு ஆகிய விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் விவாதிக்க வலியுறுத்தும் என்பதால், இன்றைய கூட்டத்தொடர் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News June 24, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

* நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. * நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், 17 மாணவர்களை தேசிய தேர்வு முகமை தகுதி நீக்கம் செய்தது. *ஒரு நாள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டசபை இன்று காலை 09.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. *டி20 உலகக்கோப்பையில், அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

error: Content is protected !!