News June 24, 2024

வாழ்வா? சாவா? கட்டத்தில் ஆஸி., ஆஃப்கன், வங்கதேசம்

image

T20 WC தொடரில் குரூப் 1இல் இடம்பெற்றுள்ள இந்தியா, அரையிறுதி வாய்ப்பை 90% உறுதி செய்துவிட்டது. ஆஃப்கன், ஆஸி., வங்கதேசம் அணிகள் வாழ்வா? சாவா? சூழலில் உள்ளன. இந்தியாவுடனான இன்றைய போட்டியில் AUS தோல்வியடைந்து, BANக்கு எதிரான போட்டியில் AFG வெற்றி பெற்றால் AUS அணி தொடரிலிருந்து வெளியேறும். ஒருவேளை, BANக்கு எதிரானப் போட்டியில் AFG தோற்றால், நெட் ரன் ரேட் அடிப்படையில் AUS அணி அரையிறுதிக்கு தகுதிபெறும்.

News June 24, 2024

எதிர்க்கட்சித் தலைவர்: 10 ஆண்டுகால ஏக்கம் முடிந்தது

image

2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் முறையே 44 மற்றும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றதால் அக்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கவில்லை. ஆனால், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களில் வென்றுள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு 55 தொகுதிகளில் வென்றால் மட்டும் போதுமானது. இதனால் அக்கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து கிடைக்கவுள்ளது.

News June 24, 2024

ராமதாஸ், அன்புமணிக்கு திமுக எம்எல்ஏக்கள் வக்கீல் நோட்டீஸ்

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் தொடர்புபடுத்தியதற்கு மன்னிப்பு கோரி, ராமதாஸ், அன்புமணிக்கு திமுக எம்எல்ஏக்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில் அவர்கள், தங்களது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி செலுத்த வேண்டும், 24 மணி நேரத்தில் இதை செய்யாவிடில், வழக்கு தொடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.

News June 24, 2024

WI-SA ஆட்டம் மழையால் பாதிப்பு

image

T20 WC தொடரின் சூப்பர் 8 சுற்றில், தென்னாப்பிரிக்கா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் தடைபட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த WI அணி 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. 136 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய SA அணி, 2 ஓவரில் 15 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்துள்ளது. அதிரடி ஆட்டத்தை தொடங்கிய டி-காக் 12 ரன்களிலும், ஹென்றிக்ஸ் டக்கவுட்டும் ஆகினர். ரஸ்ஸல் 2 விக்கெட் வீழ்த்தினார்.

News June 24, 2024

தமிழக எம்.பி.க்கள் நாளை பதவியேற்பு

image

தமிழகத்தைச் சேர்ந்த MPக்கள் நாளை பதவியேற்க உள்ளதாக விசிக MP ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் வென்ற MPக்கள் இன்று பதவியேற்க உள்ளனர். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தைச் சேர்ந்த 39 MPக்களும், நாளை பிற்பகல் 1 மணி முதல் 3 மணிக்குள் பதவியேற்க உள்ளோம் எனக் கூறியுள்ளார். இன்று மகாராஷ்டிராவைச் சேர்ந்த 15 MPக்கள் உள்பட 280 பேர் பதவியேற்கின்றனர்.

News June 24, 2024

ஒருநாள் WC தோல்விக்கு பழிதீர்க்குமா இந்தியா?

image

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் அனைத்து போட்டிகளிலும் வென்ற இந்திய அணி, இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பை சூப்பர் 8இல் இன்று 2 அணிகளும் மோதுகின்றன. இப்போட்டியில் ஒருநாள் உலகக் கோப்பை இறுதி ஆட்ட தோல்விக்கு இந்திய அணி பழிவாங்குமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

News June 24, 2024

மத்திய அரசின் அறிவிப்பால் அதிருப்தி

image

தொடர்ந்து 2 நாள்கள் தாமதமாக வரும் ஊழியர்களின் சாதாரண விடுப்பிலிருந்து (casual leave), அரை நாள் பிடித்தம் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சில நாள்களில் பணி நேரத்தை கடந்து வேலை செய்வதாகவும், விடுமுறை நாள்களில் வீட்டிலிருந்தும் பணிபுரிந்து வருவதாகக் கூறியுள்ள அவர்கள், இந்த அறிவிப்பை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

News June 24, 2024

பதவி உயர்வு இடமாறுதல் இல்லை

image

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில், பதவி உயர்வு இடமாறுதல் வழங்கப்படாததால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அட்டவணை நேற்று முன்தினம் வெளியானது. இதில், இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாகவும்; பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு இடம் பெறவில்லை என ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.

News June 24, 2024

விக்கிரவாண்டி தேர்தல்: வேட்புமனுக்கள் பரிசீலனை

image

விக்கிரவாண்டி தொகுதியில் வருகிற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி. அன்புமணி, நாதக சார்பில் அபிநயா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதேபோல் மேலும் 53 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறவுள்ளது. அதையடுத்து எத்தனை மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது என தெரியவரும்.

News June 24, 2024

தென்னாப்பிரிக்காவுக்கு 136 ரன்கள் இலக்கு

image

T20 WC சூப்பர் 8 சுற்றில், தென்னாப்பிரிக்காவுக்கு 136 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கிந்திய தீவுகள் அணி. முதலில் பேட்டிங் செய்த WI வீரர்கள், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குறிப்பாக, நட்சத்திர வீரர்களான ஹோப் 0, பூரன் 1, பவல் 1, ரதர்ஃபோர்ட் 0 ரன் என அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. SA தரப்பில் சம்ஸி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

error: Content is protected !!