India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் மக்களவை எம்பிக்கள் குழுத் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும் ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்டார். இதனால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல்காந்தி பதவியேற்பது ஏறத்தாழ உறுதியாகி விட்டது. ராகுல் பதவியேற்கும்பட்சத்தில், அவர் வகிக்கும் முதல் அரசியல் ரீதியிலான பதவியாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் விலை நேற்று முன்தினம் குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹40 உயர்ந்து ₹53,600க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ₹5 உயர்ந்து ₹6,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசுகள் குறைந்து கிராம் ₹96.20க்கும், கிலோ ₹96,200க்கும் விற்கப்படுகிறது.
TNPSC குரூப் 2, 2 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. 2327 பணி இடங்களுக்கான இந்த அறிவிப்பில், சிலவற்றுக்கு மட்டும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு தேர்வர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வயது வரம்பை நீக்க வலியுறுத்தியுள்ளனர். இதனால், திருத்தப்பட்ட மறு அறிவிப்பு வெளியாகுமா? என தேர்வர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நவக்கிரகங்களில் ஒருவரான சூரிய பகவானை வழிபட்டால் எண்ணற்ற பலன் கிடைக்கும் என ஆன்மிகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “கண்கண்ட தெய்வம்’ என்று போற்றப்படும் சூரிய பகவானை தினமும் காலை சூரிய உதயத்தின் போதும், மாலை சூரிய அஸ்தமனத்தின்போதும் சூரியனுக்குரிய மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் சகல செல்வமும், சுகமான வாழ்க்கையும் கிட்டுமென்று ஆன்மிகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை சபாநாயகர் பதவிக்கு பொதுவாக மத்தியில் ஆளும் கட்சி அல்லது கூட்டணியைச் சேர்ந்த ஒருவர் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். ஆனால், இம்முறை துணை சபாநாயகர் பதவி அளிக்காவிடில் வேட்பாளரை நிறுத்துவோம் என எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இதனால் துணை சபாநாயகர் பதவி தொடர்பாக பாஜக கூட்டணி எடுக்கும் முடிவை பொருத்தே, சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடக்குமா, இல்லையா எனத் தெரிய வரும்.
தமிழக சட்டப்பேரவையின் 4ஆவது நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில், பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது. இதனிடையே, இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. மாநில அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுவதால் அதிமுகவினர் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. T20 WC தொடரின் சூப்பர் 8இல் முதலில் விளையாடிய WI, 135/8 ரன்கள் எடுத்தது. பிறகு SA களமிறங்கி விளையாடியபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, DLS விதிப்படி 17 ஓவர்களில் 123 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SA அணி தற்போதுவரை 6 ஓவர்களில் 50/3 ரன்கள் எடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10, +2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, நடிகரும், தவெக தலைவருமான விஜய் பரிசளிக்க உள்ளார். முதல்கட்டமாக ஜூன் 28ஆம் தேதி விழா நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க உள்ள மாணவர்கள், பெற்றோருக்கான அனுமதிச் சீட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் 2வது கட்ட விழா ஜூலை 3இல் நடைபெற உள்ளது.
இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மக்களவைத் தேர்தலில் வெற்றிப் பெற்ற எம்பிக்கள் பதவியேற்கவுள்ளனர். அவர்களில் 280 புதுமுகங்களும் எம்பிக்களாக பதவியேற்கவுள்ளனர். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 267ஆக இருந்த புதுமுக எம்பிக்களின் எண்ணிக்கை, இந்த முறை மேலும் 13 கூடியுள்ளது. அவர்கள் 280 பேருக்கும் இடைக்கால சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். இதேபோல் மற்ற எம்பிக்களும் பதவியேற்கவுள்ளனர்.
தொலைத்தொடர்பு சட்டம் 2023, நாளை மறுநாள் (ஜூன் 26) அமலுக்கு வர உள்ளது. இதன் கீழ், பேரிடர் போன்ற அவசர காலங்களில் நிகழும் குற்றங்களைத் தடுப்பதற்காகவும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், அரசு எந்தவொரு தொலைத்தொடர்பு சேவையையும் அதன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். அத்துடன், குற்றச்செயலுக்கான தூண்டுதலைத் தடுக்கும் வகையில், பயனாளர் அனுப்பும் செய்திகளை தடுத்து நிறுத்தவும் முடியும்.
Sorry, no posts matched your criteria.