India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் தமிழகத்தில் அதனை அமல்படுத்த முடியும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி கேள்விக்கு பதிலளித்த அவர், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என பேரவையில் விரைவில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறினார். அத்துடன், பிஹாரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.
டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ஜிம்பாப்வே சென்று 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இத்தொடரில் ரோஹித், கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இளம்வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும், ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் உள்ளிட்டோர் அணியில் இடம்பெறுவர் என்றும் கூறப்படுகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியதில், இதுவரை 57 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக முக்கிய நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அண்ணாமலை, அது தொடர்பான ஆதாரங்களை ஆளுநரிடம் நேரில் சென்று அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வயதான ஆசிரியர்களுக்கான முழு உடல் பரிசோதனைத் திட்டத்தை அனைத்து ஆசிரியர்களுக்கும் விரிவாக்கம் செய்து தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது. வயதான ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்ட இத்திட்டத்தால் முதற்கட்டமாக 50 வயதிறக்கு மேற்பட்ட 35,600 ஆசிரியர்கள் பயன்பெற உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்த 55க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் வருகிற 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது. இதனை இடைத்தேர்தல் பிரசாரத்தில் திமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பயன்படுத்தினால், அது தேர்தல் முடிவை பாதிக்குமா, இல்லையா என்பதை பொறுத்திருந்து காணலாம்.
நடப்பாண்டு T20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடத்தப்படுகிறது. லீக் ஆட்டங்கள் அமெரிக்காவில் நடந்து முடிந்த நிலையில், சூப்பர் 8 ஆட்டங்கள் மே.இ.தீவுகளில் நடைபெற்று வருகிறது. இதனால் WI அணி, இறுதிப் போட்டிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் தோற்றதால், சூப்பர் 8 சுற்றுடன் WC தொடரிலிருந்து WI அணி வெளியேறியுள்ளது.
மக்களவைத் தேர்தலில், வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதமர் மோடி, எம்.பி.யாக பதவியேற்றார். புதிய நாடாளுமன்றத்தில் இன்று மக்களவை கூடிய நிலையில், இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாபு, மோடிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அவரைத் தொடர்ந்து அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்பட பாஜக உறுப்பினர் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக பதவியேற்கின்றனர். இன்று 280 எம்.பி.க்கள் பதவியேற்க உள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். சட்டப்படி 2 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே அவர் எம்பியாக பதவி வகிக்க முடியும். அதனால் வயநாடு தொகுதியை அவர் ராஜினாமா செய்தார். அந்த ராஜினாமா கடிதத்தை மக்களவையில் ராகுல் காந்தி அளித்திருந்தார். அதை தற்காலிக சபாநாயகராக பதவியேற்ற பத்ருஹரி மகதாப் ஏற்றுக் கொண்டார்.
ரேஷன் கடைகள் குறிப்பிட்ட நாள்களிலும், நேரத்திலும் திறந்திருக்க வேண்டும் என்பது விதியாகும். இதை மீறி பூட்டப்பட்டு இருக்கும் கடைகள் குறித்து எஸ்எம்எஸ் மூலம் புகார் அளிக்க பொதுவிநியோகத் துறை ஏற்பாடு செய்துள்ளது. 9773904050 என்ற எண்ணுக்கு தங்களது மொபைல் எண்ணில் இருந்து “PDS 102 மூடப்பட்டுள்ளது” என டைப் செய்து அனுப்பலாம். அதன் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வழிவகுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் குறித்து 1861ஆம் ஆண்டு போலீஸ் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தில், காவல்துறையில் பணிபுரிபவர் சீருடையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பணியில் இருப்பவராகவே கருதப்படுவார் என்றும், ஆதலால், அவரிடம் எந்நேரமும் பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்கலாம். சீருடையில் இல்லாததைச் சுட்டிக்காட்டி பணியில் இல்லை எனக்கூறி அவர் புகாரை வாங்க மறுக்கக் கூடாதென குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.