News June 24, 2024

இடைத்தேர்தலை சந்திக்கும் தைரியம் அதிமுகவுக்கு இல்லை

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இடைத்தேர்தலை சந்திக்கும் தைரியம் அதிமுகவுக்கு இல்லை என்றார். போட்டியிடுவோம் என முதலில் கூறிவிட்டு, பிறகு புறக்கணிப்பதாக இபிஎஸ் அறிவித்திருப்பது, விழுப்புரத்தில் கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே காட்டுவதாகவும் சாடினார்.

News June 24, 2024

APPLY NOW: மத்திய அரசில் வேலை

image

எல்லைப் பாதுகாப்புப் படையில் உள்ள 183 பணியிடங்கள் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை மத்திய அரசு கோரியுள்ளது. SI, Constable, Driver பணியிடங்களில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10, 12ஆம் வகுப்பு, டிப்ளமா. வயது வரம்பு: 20-28. சம்பளம்: ₹21,700 – ₹1,12,400. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 1. கூடுதல் தகவலுக்கு <>BSF<<>> இணைய முகவரியை கிளிக் செய்யவும்.

News June 24, 2024

ரோஹித், விராட் கோலியை நீக்க கம்பீர் நிபந்தனையா?

image

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவியை ஏற்க கம்பீர் 5 நிபந்தனைகளை விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒரு நிபந்தனையாக, பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் சரியாக விளையாடவில்லை எனில், மூத்த வீரர்கள் ரோஹித், கோலி, ஜடேஜா, ஷமியை நீக்க வேண்டுமென நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கோலி-கம்பீர் இடையே 2 முறை மோதல் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

News June 24, 2024

வாட்ஸ்ஆப்பில் விரைவில் DIAL வசதி அறிமுகம்

image

முன்னணி சமூகவலைதள செயலியான வாட்ஸ்ஆப் அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறது. அந்த வகையில், விரைவில் DIAL வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, வாட்ஸ்ஆப் செயலியில் இருந்து பிறருக்கு நேரடியாக எண்களை DIAL செய்து பேச முடியும். தற்போது அழைப்பு மேற்கொள்ள வேண்டுமெனில், அவர் எண்ணை சேமித்தபிறகே DIAL செய்து பேச முடிகிறது. அதற்கு மாற்றாக, இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

News June 24, 2024

புதிய ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்தது AIRTEL

image

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், புதிய ரீசார்ஜ் பிளான் ஒன்றை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ₹279க்கு ரீசார்ஜ் செய்தால் 2 GB டேட்டாவுடன், 45 நாள்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வரம்பின்றி இலவசம். இதேபோல 600 SMS, 3 மாதத்திற்கு இலவசமாக Apollo 24/7 Circle சேவை, இலவச காலர் டியூன் வசதி, Wynk Music ஆகிய அம்சங்களும், இந்த ரீசார்ஜ் பிளானில் இடம்பெற்றுள்ளன.

News June 24, 2024

சட்டப்பேரவையில் இருந்து பாமக வெளிநடப்பு

image

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாததைக் கண்டித்து, சட்டப்பேரவைக் கூட்டத்தில் இருந்து பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இது குறித்து பேட்டி அளித்துள்ள ஜி.கே.மணி, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தன்னை பேச அனுமதிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். மேலும், சமூக நீதி குறித்து கேள்வி எழுப்பினால், பாஜகவுடனான கூட்டணி குறித்து பதிலளிப்பதாகவும், திமுக அரசை அவர் விமர்சித்துள்ளார்.

News June 24, 2024

சிறார்களுக்கான ஆதாருக்கு விண்ணப்பிப்பது எப்படி? (3/3)

image

இதுபோல விண்ணப்பித்த 90 நாள்களில், சிறார்களுக்கு ஆதார் எண் வழங்கப்படும். வீட்டிற்கும் ஆதார் அட்டை தபாலில் அனுப்பி வைக்கப்படும். பிறகு சிறார்கள், 15 வயது பூர்த்தியானதும் ஆதார் சேவை மையம் அல்லது இ-சேவை மையம் சென்று தங்களது பயோ மெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும். அதுவரை எத்தகைய புதுப்பிப்பையும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. அதே ஆதாரை பயன்படுத்தலாம்.

News June 24, 2024

சிறார்களுக்கான ஆதாருக்கு விண்ணப்பிப்பது எப்படி? (2/3)

image

பயோ மெட்ரிக் விவரம் பதியப்பட்டதும், சிறார்களின் புகைப்படம் எடுக்கப்படும். பின்னர் அவர்களின் பெற்றோர் மொபைல் எண் பெறப்பட்டு, அதுவும் பதியப்படும். இதைத் தொடர்ந்து, ஆதாருக்கு விண்ணப்பித்தற்கான ரசீது எதிர்கால பயன்பாட்டுக்காக வழங்கப்படும். அதில் பதிவு செய்த தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதனைக் கொண்டு ஆதார் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

News June 24, 2024

சிறார்களுக்கான ஆதாருக்கு விண்ணப்பிப்பது எப்படி? (1/3)

image

5 முதல் 15 வயது வரையிலான சிறார்கள், ஆதார் கோரி விண்ணப்பித்து பெற முடியும். இதற்காக, அவர்கள் அருகிலுள்ள ஆதார் சேவை மையம் அல்லது இ-சேவை மையத்துக்கு சென்று அங்குள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். அவர்களின் முகவரி சான்றாக பெற்றோர் ஆதார் நகலில் உள்ள முகவரியை அளிக்கலாம். அந்த விண்ணப்பம் பெறப்பட்டதும், சிறார்களின் பயோ மெட்ரிக் எனப்படும் கைவிரல் ரேகை, கருவிழி ரேகை பதியப்படும்.

News June 24, 2024

நம்மை யாரும் பலவீனப்படுத்த முடியாது: அதானி

image

நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறுவதாக கெளதம் அதானி தெரிவித்துள்ளார். அதானி குழுமத்தின் 32ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திறமையின் மீதான நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புடன் நாம் செயல்படுவதால், எதுவும் நம்மை பலவீனப்படுத்த முடியாது என்றார். முன்னதாக அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் கூறியிருந்தது.

error: Content is protected !!