India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி, 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அவரிடம் வழங்கினார். அந்தச் சான்றிதழுடன் சென்னை சிஐடி நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்த கனிமொழி, அதனை தனது தாயாரிடம் காண்பித்து ஆசி வாங்கி மகிழ்ந்தார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019இல் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பிறகு, கட்டுமானப் பணிகள் நடக்காத நிலையில், கடந்த மார்ச் மாதம் திடீரென பணிகள் தொடங்கின. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக கூட்டணி வெல்லவில்லை. இதனால், மதுரை எய்ம்ஸ் திட்டம் முழுமை பெறுமா? அல்லது மீண்டும் கிடப்பில் போடப்படுமா? என்பது வரும் நாள்களில் தெரியும் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
*1674–மராட்டிய பேரரசராக சிவாஜி முடிசூடினார்.
*1761–சூரியன்-பூமிக்கு இடையில் வீனஸ் கோள் நகர்ந்தது பூமியில் அவதானிக்கப்பட்டது.
1844–கிறித்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் அமைக்கப்பட்டது.
*1984 – அம்ரித்சரில் உள்ள பொற்கோயிலில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 576 பேர் கொல்லப்பட்டனர்.
2004 – இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
T20 WC தொடரில், நேற்று அயர்லாந்து அணியை இந்தியா வீழ்த்தியது. இந்தப் போட்டியில், ரோஹித் 5 சாதனைகளை படைத்துள்ளார். அதன் விவரம்.
*T20 தொடர்களில் 4000 ரன்களை கடந்தது.
*WC T20 தொடர்களில் 1000 ரன்களை கடந்தது.
*சர்வதேச கிரிக்கெட்டில் 600 சிக்ஸர் விளாசியது
*குறைந்த பந்துகளில் அதிவேகமாக 4000 ரன்களை கடந்தது
*ஐசிசி லிமிட்டெட் ஓவர் தொடர்களில் 100 சிக்ஸர்களை விளாசிய முதல் இந்திய வீரர்.
தமிழ் சினிமாவில் பன்முகத் தன்மை கொண்டவர்களில் பிரேம்ஜியும் ஒருவர். நடிப்பு, பாடல் பாடுவது என பல்வேறு திறமைகளைக் கொண்டவர். இந்த நிலையில், அவருக்கு ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக வெங்கட் பிரபு கூறியுள்ளார். மேலும், இரு வீட்டார் சம்மதத்துடன் காதலியை பிரேம்ஜி மணம் முடிக்க உள்ளதாகவும், குடும்பத்தினர் மட்டும் இந்தத் திருமணத்தில் பங்கேற்க உள்ளதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
உலகின் சராசரி வெப்பநிலை அடுத்த 5 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்சியஸ் உயரக் கூடும் என ஐ.நா., பொதுச்செயலாளர் குட்டரெஸ் கூறியுள்ளார். உலகின் மிக வெப்பமான மாதமாக ‘மே மாதம்’ பதிவாகியுள்ளதாக கவலை தெரிவித்த அவர், கடந்த ஓராண்டாகவே, வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். உலகில் பல்வேறு இடங்களில் சமீப நாள்களாக அதீத மழை, கடுமையான வெப்பம் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: நட்பியல்
▶அதிகாரம்: பெண்வழிச்சேறல்
▶குறள்: இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும்.
▶பொருள்: நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள, சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் அனுப்பப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கென்னடி ஏவுதளத்தில் இருந்து அட்லஸ்-வி ராக்கெட் மூலம் புறப்பட்ட அவர்கள் நாளை விண்வெளி நிலையத்தை அடைவார்கள். ஒரு வாரம் அங்கு ஆய்வு செய்த பின், ஜூலை 14இல் இருவரும் பூமிக்கு திரும்ப உள்ளனர். முன்னதாக, தொழில்நுட்பக் கோளாறால் 2 முறை பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வென்றுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது, திமுக சார்பில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. குறிப்பாக, விவசாயக் கடன், மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு, NHஇல் சுங்கச் சாவடிகள் அகற்றம் போன்றவை இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில், தற்போது அந்த வாக்குறுதிகள் என்னவாகும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இன்று (ஜூன் 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Sorry, no posts matched your criteria.