News June 6, 2024

ஓமன் அணிக்கு 165 ரன்கள் இலக்கு

image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், ஓமன் அணிக்கு 165 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் ஆடிய ஆஸி., அணி, தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. ஹெட், மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, வார்னர் 56(50), ஸ்டாய்னிஸ் 67(36) பொறுப்புடன் விளையாடி அரை சதம் விளாசினர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் ஆஸி., அணி 164 ரன்கள் குவித்தது.

News June 6, 2024

ஜூன் 21 முதல் OTT-இல் ‘அரண்மனை 4’

image

சுந்தர் சி இயக்கி நடித்துள்ள ‘அரண்மனை 4’ திரைப்படம், வரும் 21ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகவுள்ளது. கடந்த மே 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், உலகம் முழுவதும் ₹100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம் புலி, விடிவி கணேஷ் நடித்த இப்படத்துக்கு, ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

News June 6, 2024

ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல முன் அனுமதி அவசியம்

image

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், “தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பணியாளர்களும் வெளிநாடு செல்வதற்கு பள்ளிக் கல்வி இயக்குநரிடம் கட்டாயமாக முன் அனுமதி பெற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விடுப்பு வழங்க மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

News June 6, 2024

டெல்லியில் தோல்வி குறித்து பேசிய ஆம் ஆத்மி எம்.பி.,

image

மக்களவைக்கு பாஜகவையும், சட்டசபைக்கு ஆம் ஆத்மியையும் தேர்வு செய்வதை டெல்லி மக்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக அக்கட்சியின் எம்.பி., சந்தீப் பதக் கூறியுள்ளார். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வென்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், டெல்லியில் இம்முறை குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் பாஜக வென்றுள்ளது. அதே நேரம் பஞ்சாப்பில் அதன் வாக்கு விகிதம் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தார்.

News June 6, 2024

T20: புதிய சாதனை படைத்த உகாண்டா வீரர்

image

பப்புவா அணிக்கு எதிரான T20 உலகக் கோப்பை போட்டியில், உகாண்டா வீரர் ஃப்ராங்க் நுசுகா புதிய சாதனை படைத்துள்ளார். அபாரமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம், T20 உலகக் கோப்பை வரலாற்றில் சிறந்த எகனாமியில் (எகனாமி-1) பந்துவீசிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன்பு, SA வீரர் பார்ட்மேன் (2.25) வீசியதே சிறந்த எகனாமியாக இருந்தது.

News June 6, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் காலை 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News June 6, 2024

இன்றுடன் முடிவுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிகள்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் மார்ச் 16ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் இன்று (ஜூன் 6) நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்ததைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் சோதனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை முதல் ₹50,000-க்கு மேல் பணம், பொருள்கள் கொண்டு செல்வதில் எந்தவித கட்டுப்பாடும் இருக்காது.

News June 6, 2024

77 ரன்களுக்கு சுருண்டது பப்புவா நியூ கினி

image

பப்புவா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், உகாண்டா அணிக்கு 78 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் ஆடிய பப்புவா அணி, உகாண்டாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே தடுமாறி வந்தது. இதனால், 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு, பப்புவா அணி 77 ரன்கள் மட்டுமே குவித்தது. அபாரமாக பந்துவீசிய, ராம்ஜானி, மியாகி, ஃப்ராங்க், கியூட்டா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

News June 6, 2024

தேர்தலில் இனி போட்டியில்லை: முரளிதரன்

image

தேர்தலில் இனிமேல் போட்டியிட மாட்டேன் என, திருச்சூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முரளிதரன் தடாலடியாக அறிவித்துள்ளார். அந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளரும், நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். முரளிதரன் 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனால், காங்கிரஸ் கட்சிக்குள் பூகம்பம் வெடித்த நிலையில், மூத்த நிர்வாகிகள் பதவி விலக வேண்டும் என கேரள இளைஞர் காங்கிரஸார் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

News June 6, 2024

வயநாடு தொகுதியா? ரேபரேலி தொகுதியா?

image

கேரளாவின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கும் ராகுல் காந்தி, எதனை விட்டுக் கொடுப்பது என்ற இக்கட்டான சூழலில் உள்ளார். ரேபரேலி, காந்தி பெயர் கொண்டவர்களின் குடும்பத் தொகுதியாக மாறிவிட்டது. ஆனால், கடந்த தேர்தலில் அமேதி கைவிட்டபோது வெற்றி பெறச் செய்து தூக்கிவிட்டவர்கள் வயநாடு மக்கள். எதனை விட்டுக் கொடுக்கப் போகிறார் ராகுல்?

error: Content is protected !!