News June 6, 2024

ராஜினாமாவை ஏற்க ஷிண்டே மறுப்பு

image

மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர ஃபட்னவிஸ் ராஜினாமா செய்த நிலையில் அதனை ஏற்க முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மறுத்துள்ளார். மஹாராஷ்டிராவில் பாஜக 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பொறுப்பேற்று அரசுப் பதவியில் இருந்து விலகுவதாக ஃபட்னவிஸ் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், தேர்தல் தோல்விக்கு அனைவருமே பொறுப்பு என்று ஷிண்டே அதனை ஏற்க மறுத்திருக்கிறார்.

News June 6, 2024

T20 உலகக் கோப்பையில் முதல் வெற்றி

image

பப்புவா அணிக்கு எதிரான T20 உலகக் கோப்பை போட்டியில், 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உகாண்டா அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய பப்புவா, 76 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய உகாண்டா, தொடக்கத்தில் தடுமாறி வந்தாலும் பின்னர் நிதானமாக விளையாடி வந்தது. ரிஷாத் அலி ஷா, 33 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். இது, டி20 உலகக் கோப்பையில் உகாண்டா பதிவு செய்யும் முதல் வெற்றியாகும்.

News June 6, 2024

தேமுதிக நிலை என்னவாகும்?

image

தேர்தல் விதிகளின்படி, 8% வாக்கு உள்ளிட்டவற்றை ஒரு கட்சி இழந்தாலும், அடுத்த 2 தேர்தல்களுக்குள் அவற்றை மீண்டும் பெற்றால் அங்கீகாரத்தைத் தக்க வைக்க முடியும். 2014 மக்களவைத் தேர்தலில், 5% வாக்கு பெற்ற அக்கட்சி தொடர்ந்து நடந்த தேர்தல்களில் 2016 (2.4%), 2019 (2%), 2021 (0.4%) வீழ்ச்சியைச் சந்தித்தது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 2.5% வாக்குப்பெற்ற தேமுதிக அந்தத் தகுதியை இழந்ததாகவே கருதப்படுகிறது.

News June 6, 2024

பாண்டிச்சேரியில் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு?

image

கமல் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு, முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடக்க உள்ளதாகவும், அங்குள்ள விமான நிலையத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன் நடிக்கும் முக்கியமான சண்டைக் காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. கேங்ஸ்டர் படமாக உருவாகும் இது, இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

News June 6, 2024

பாஜகவுக்கு புதிய தலைவர்

image

பாஜக தேசியத் தலைவர் பதவிக்கு ஜெ.பி.நட்டா 2020ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். 3 ஆண்டுகள் மட்டுமே தலைவராக இருக்கலாம் என்ற கட்சிக் கொள்கையின்படி, அவரது பதவிக் காலம் கடந்த ஆண்டு (2023) நிறைவு பெற்றது. ஆனால், தேர்தல் காரணமாக அவரது பதவிக்காலம் ஓராண்டுக்கு (ஜூன் 2024 வரை) நீட்டிக்கப்பட்டது. இந்த மாதத்துடன் அது நிறைவு பெறவுள்ளதால் புதிய தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளார்.

News June 6, 2024

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், விண்ணப்பப் பதிவு கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 2.35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 1.87 லட்சம் பேர் கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News June 6, 2024

ஓமன் அணிக்கு 165 ரன்கள் இலக்கு

image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், ஓமன் அணிக்கு 165 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் ஆடிய ஆஸி., அணி, தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. ஹெட், மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, வார்னர் 56(50), ஸ்டாய்னிஸ் 67(36) பொறுப்புடன் விளையாடி அரை சதம் விளாசினர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் ஆஸி., அணி 164 ரன்கள் குவித்தது.

News June 6, 2024

ஜூன் 21 முதல் OTT-இல் ‘அரண்மனை 4’

image

சுந்தர் சி இயக்கி நடித்துள்ள ‘அரண்மனை 4’ திரைப்படம், வரும் 21ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகவுள்ளது. கடந்த மே 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், உலகம் முழுவதும் ₹100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம் புலி, விடிவி கணேஷ் நடித்த இப்படத்துக்கு, ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

News June 6, 2024

ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல முன் அனுமதி அவசியம்

image

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், “தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பணியாளர்களும் வெளிநாடு செல்வதற்கு பள்ளிக் கல்வி இயக்குநரிடம் கட்டாயமாக முன் அனுமதி பெற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விடுப்பு வழங்க மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

News June 6, 2024

டெல்லியில் தோல்வி குறித்து பேசிய ஆம் ஆத்மி எம்.பி.,

image

மக்களவைக்கு பாஜகவையும், சட்டசபைக்கு ஆம் ஆத்மியையும் தேர்வு செய்வதை டெல்லி மக்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக அக்கட்சியின் எம்.பி., சந்தீப் பதக் கூறியுள்ளார். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வென்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், டெல்லியில் இம்முறை குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் பாஜக வென்றுள்ளது. அதே நேரம் பஞ்சாப்பில் அதன் வாக்கு விகிதம் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!