News April 29, 2025

மகள் முன் தாய் பாலியல் வன்கொடுமை..இளைஞர் கைது

image

டெல்லியில் மகள் முன்பு, அவரின் தாய் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ஸ்வரூப் நகரில் உள்ள பண்ணை வீட்டில் பெண்ணும், மகளும் இரவில் முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த பக்கத்து வீட்டுக்காரர் தர்மேந்தர், அந்தப் பெண், மகளை கயிற்றால் கட்டிப் போட்டார். பின்னர் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். புகாரின்பேரில் தர்மேந்தரை போலீஸ் கைது செய்துள்ளது.

News April 29, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News April 29, 2025

மதுபிரியர்களே, எச்சரிக்கை!

image

மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தலால் மனநலம் பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மது அருந்துவதால் மூளையின் அமிக்தாலா மற்றும் ஹிப்போகேம்பஸ் பகுதி சுருங்குகிறதாம். புகைப்பிடித்தலாலும் ஹிப்போகேம்பஸ் அளவு குறைகிறதாம். மொத்தத்தில் தீவிரமான மதுப்பழக்கமும், புகைப்பழக்கமும் சேர்ந்தால், மூளையின் செயல்திறன் குறைவதுடன், மனநலம் பாதிப்பது உறுதி என்கின்றனர் விஞ்ஞானிகள்.

News April 29, 2025

முட்டை விலை மீண்டும் உயர்வு

image

மீன்பிடி தடைகாலம் இருப்பதால், முட்டைக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. அதனால், நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்துள்ளது. 420 காசுகளாக இருந்த ஒரு முட்டையின் கொள்முதல் விலை 430 காசுகளாக அதிகரித்துள்ளது. இதனால், சில்லறை விற்பனையில் முட்டை விலை அதிகரிக்கும். அதேநேரத்தில், முட்டைக்கோழி(₹85), கறிக்கோழி(₹88) விலையில் மாற்றமில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News April 29, 2025

பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மாவோயிஸ்டுகள்

image

பேச்சுவார்த்தைக்கு தங்களை அழைக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி மாவோயிஸ்டுகள் மீண்டும் கடிதம் எழுதியுள்ளனர். மாவோயிஸ்டுகளை வேட்டையாடும் ‘ககர்’ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளதுடன், பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்கும்படியும் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. இது பேச்சுவார்த்தைக்கு அழைத்து மாவோயிஸ்டுகள் வெளியிட்டுள்ள 2-வது கடிதமாகும்.

News April 29, 2025

படுக்கையறையில் இவை வேண்டாமே…

image

*படுக்கையறைக்குள் செல்போன், லேப்டாப், கணினி, புத்தகங்கள், சார்ஜர், இவற்றை எப்போதும் அனுமதிக்கக் கூடாது. இதனால் உங்கள் அந்தரங்க நேரம், தூங்கும் நேரம் எல்லாமே தரமாக அமையும். *உறங்குவதற்கும், இளைப்பாறுவதற்கும் தான் படுக்கையறை. இதை உணர்ந்து செயல்பட்டாலே, படுக்கையறை பரவசமூட்டும் இடமாகும்.

News April 29, 2025

IPL BREAKING: RR அசத்தல் வெற்றி

image

இன்றைய ஐபிஎல் போட்டியில், 210 என்ற இமாலய இலக்கை அசால்ட்டாக எட்டியிருக்கிறது RR அணி. முதலில் பேட்டிங் செய்த GT அணி, 209 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். அதன்பின், பேட்டிங் செய்த GT அணியின் வைபவ் சூர்யவன்ஷி, 38 பந்துகளில் 101 அடித்து ருத்ரதாண்டவம் ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்து ஜெய்ஸ்வாலும் கலக்கியதால், வெறும் 15.5 ஓவர்களில் RR வெற்றி பெற்றது.

News April 29, 2025

ராணுவத்திற்கு நிதியுதவி செய்யுங்கள்: Scam Alert

image

இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இதை பயன்படுத்தி மோசடி நடைபெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர் பதற்றம் காரணமாக இந்திய ராணுவத்திற்கு நிதி அளித்து உதவுங்கள் என வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, இதுபோன்ற தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.

News April 29, 2025

ராசி பலன்கள் (29.04.2025)

image

➤மேஷம் – களிப்பு ➤ரிஷபம் – இன்பம் ➤மிதுனம் – வெற்றி ➤கடகம் – சுகம் ➤சிம்மம் – கவலை ➤கன்னி – வரவு ➤துலாம் – பயம் ➤விருச்சிகம் – புகழ் ➤தனுசு – போட்டி ➤மகரம் – மேன்மை ➤கும்பம் – ஆக்கம் ➤மீனம் – கடன்தீரல்

News April 29, 2025

திராவிட அரசியலே மத வெறி தான்: எச்.ராஜா விமர்சனம்

image

வெறுப்பு அரசியலின் மூலதனமாக இருப்பது திராவிட இயக்கங்கள் என்று எச்.ராஜா கடுமையாக சாடியுள்ளார். திமுகவில் 2 விக்கெட்டுகள் விழுந்திருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பால் முதல்வர் உளறிக் கொண்டிருக்கிறார். திராவிட அரசியலே மத வெறி தான். முதல்வர் பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். திராவிட கட்சியான அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டே அவர் இவ்வாறு பேசியது சர்ச்சையாகியுள்ளது.

error: Content is protected !!