News June 6, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News June 6, 2024

T20 WC: ஆஸ்திரேலியா வெற்றி

image

ஓமன் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், 39 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய ஆஸி., அணி 20 ஓவர்கள் முடிவில் 164 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஓமன் அணி, 20 ஓவர்கள் முடிவில் 123 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. அபாரமாக பந்துவீசிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 3 மற்றும் சாம்பா, ஸ்டார்க், எல்லிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

News June 6, 2024

பாஜகவின் அடுத்த தலைவர் யார்?

image

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம் இந்த மாதத்தோடு நிறைவு பெறுகிறது. இதனையடுத்து, அடுத்த தலைவராக பியூஷ் கோயல் அல்லது சிவராஜ் சிங் சவுஹான் தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிராவைச் சேர்ந்த பியூஷ் கோயல், மத்திய அமைச்சராக இருக்கிறார். சிவராஜ்சிங் சவுஹான் மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்தவர்.

News June 6, 2024

நாட்டின் மிகப்பெரிய ரயில் விபத்து

image

இந்தியாவில் அதிக மக்களை பலி வாங்கிய பாக்மதி ரயில் விபத்து 1981ஆம் ஆண்டு இதே நாளில் நிகழ்ந்தது. இந்த விபத்தில் 800க்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. பயணம் செய்த 1000 பேரும் இறந்திருக்கலாம் என்ற தகவலும் உண்டு. பாலகோட் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது வீசிய சூறைக்காற்றல் மொத்த பெட்டிகளும் பாக்மதி நதிக்குள் கவிழ்ந்து விழுந்தது.

News June 6, 2024

துருவ் ராதியை ஞாபகம் இருக்கிறதா?

image

பாஜகவின் வீழ்ச்சிக்கு யூடியூபர் ஒருவர் காரணமாக இருப்பதாக எதிர்க்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். ஆம், அவரது பெயர் துருவ் ராதி. யூடியூபரான அந்த இளைஞர், தேர்தலுக்கு முன் பாஜக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பல கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் தகவல் வெளியானது. ஆனாலும் அவருடைய முயற்சி வெற்றியையே தந்திருக்கிறது.

News June 6, 2024

இன்றுடன் விடைபெறுகிறார் சுனில் சேத்ரி

image

2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில், இன்று இந்தியா-குவைத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியுடன் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு பெறுகிறார். அதனால், அவரை வெற்றியுடன் வழியனுப்ப இந்தியா முனைப்புடன் உள்ளது. ஜூன் 11ம் தேதி இன்னொரு தகுதிச்சுற்று போட்டி எஞ்சியுள்ளது. ஆனால், சொந்த மண்ணில் ஓய்வுபெற வேண்டுமென்பதால் அவர் இன்றைய ஆட்டத்துடன் ஓய்வு பெறுகிறார்.

News June 6, 2024

பதவியேற்பை ஒத்தி வைத்தார் சந்திரபாபு

image

ஆந்திராவின் புதிய முதல்வராக பொறுப்பேற்கவிருக்கும் சந்திரபாபு நாயுடு, இந்த வாரமே பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி 8ஆம் தேதி பதவியேற்கவுள்ளதால், தனது பதவியேற்பு விழாவை அவர் ஒத்தி வைத்திருக்கிறார். ஜூன் 12ஆம் தேதி ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, பிரதமர் பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

News June 6, 2024

தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவம்: ஓபிஎஸ்

image

இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு அதிமுக தொண்டர்களை பழக்குவது பாவக்காரியம் என்று ஓபிஎஸ் வேதனையுடன் கூறியுள்ளார். ஆட்சியையும் கட்சியையும் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம் எனக் கூறிய அவர், வெற்றியைப் பெற மனமாட்சியம், கருத்து வேற்றுமைகளை மறந்து ஒன்றாக வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். ராமநாதபுரத்தில் போட்டியிட்ட ஓபிஎஸ்ஸுக்கே 2ஆவது இடம்தான் கிடைத்தது என்பது கவனிக்கத்தக்கது.

News June 6, 2024

நாளை வெளியாகும் திரைப்படங்கள்

image

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீஎன்ட்ரி கொடுத்துள்ள நடிகர் மோகனின் ‘ஹரா’, விதார்த், வாணி போஜன், ரகுமான் நடித்துள்ள ‘அஞ்சாமை’, வசந்த் ரவி, சத்யராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வெப்பன்’ மற்றும் புது முகங்கள் நடித்திருக்கும் ‘எலிசாமி’ ஆகிய 4 திரைப்படங்கள் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. அதேபோல், யோகி பாபு நடித்துள்ள ‘பூமர் அங்கிள்’ ஆஹா ஓடிடியிலும், ‘அரண்மனை 4’ ஹாட்ஸ்டாரிலும் நாளை வெளியாகவுள்ளன.

News June 6, 2024

அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும்: ஓபிஎஸ்

image

மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்த நிலையில், ஆட்சி அதிகாரத்தை மீட்டெடுக்க ஒன்றிணைய வேண்டுமென அக்கட்சியின் தொண்டர்களுக்கு ஓபிஎஸ் அறைகூவல் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்ஜிஆர், ஜெயலலிதா கஷ்டப்பட்டு வளர்த்த இயக்கத்தை காக்க வேண்டிய கடமை அதிமுகவின் 1.5 கோடி தொண்டர்களுக்கு இருக்கிறது. தோல்வியில் இருந்து இயக்கத்தை மீட்க ஒன்றிணைவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!