News June 6, 2024

சேஸிங்கில் புதிய சாதனை படைத்தார் ரோஹித் ஷர்மா

image

அயர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா புதிய சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில், 4 Four, 3 Six என விளாசிய அவர், 37 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இதன் மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில், சேஸிங்கில் அரை சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார். நேற்று ஒரே நாளில் மட்டும் ரோஹித் ஷர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

News June 6, 2024

ஆதரவு தருகிறோம்… ஆனால்?

image

தேர்தலில் 240 இடங்களை வென்ற பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதை தீர்மானிக்கும் முக்கிய இடத்தில்
சந்திரபாபு நாயுடு & நிதிஷ்குமார் உள்ளனர். NDA கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்தபடியாக எம்.பிக்களை கொண்டுள்ள TDP (16) & JDU (12) இதன் காரணமாக பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. TDP சபாநாயகர் & 4 கேபினட் அமைச்சர் பதவிகளும், JDU 3 கேபினட் அமைச்சர் பதவிகளும் பாஜகவிடம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News June 6, 2024

‘காஞ்சனா 4’ படப்பிடிப்பு செப்டம்பரில் தொடக்கம்

image

‘காஞ்சனா 4’ பாகத்தின் படப்பிடிப்பு, வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. 3 பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து, 4ஆம் பாகத்தை இயக்க நடிகர் ராகவா லாரன்ஸ் முடிவெடுத்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்த ‘ஜிகர்தண்டா 2’ படம், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால், அவரது அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

News June 6, 2024

டெலிமானஸ் திட்டத்தைத் தொடங்கிய மத்திய அரசு

image

ராணுவ வீரர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்க மத்திய அரசு ‘டெலிமானஸ்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சகம் இதற்காக சிறப்பு மனநல ஆலோசனை மையங்களை திறந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 35 மாநிலங்கள் & 2 யூனியன் பிரதேசங்களில் 51 இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன; 20 மொழிகளில் ஆலோசனைகள் வழங்கும் இவை 24 மணி நேரமும் செயல்படும்.

News June 6, 2024

துணை நடிகை விஜயகுமாரி புற்று நோயால் மரணம்

image

புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த துணை நடிகை விஜயகுமாரி இன்று உயிரிழந்தார். ஈரோட்டைச் சேர்ந்த அவர், சென்னை வளசரவாக்கத்தில் தங்கியிருந்து படங்களிலும், சீரியல்களிலும் துணை நடிகையாக நடித்து வந்தார். அவர் புற்று நோயால் பாதிக்கப்படிருந்ததைத் தொடர்ந்து லாரன்ஸ், KPY பாலா போன்றோரிடம் உதவி கேட்டிருந்தார். ஆனால், இறுதியில் நோய் அவரது உயிரைக் குடித்துவிட்டது.

News June 6, 2024

எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனது ஏன்?

image

மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததற்கான காரணம் குறித்து பாஜக தலைவர் நட்டா தலைமையில் அக்கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தியுள்ளது. இக்கூட்டத்தில் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதிக தொகுதிகளை கொண்ட உ.பி., மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பாஜக பெரும் சறுக்கலை சந்தித்தது. இதன் காரணமாக 400+ இடங்கள் என்ற பாஜகவின் கனவு பொய்த்தது.

News June 6, 2024

ரஜினியுடன் நடிக்கும் பாலகிருஷ்ணா?

image

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாக பிரமாண்ட வெற்றிபெற்றது ஜெயிலர். அதன் 2ஆம் பாகத்திற்கான திரைக்கதை தயார் செய்யும் பணியை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மேற்கொண்டு வருகிறார். அத்துடன் ‘ஜெயிலர்-2’ படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவரோடு பேசி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News June 6, 2024

தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹600 உயர்ந்து ₹54,400ஆக விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ₹6,725 என விற்பனையான நிலையில் இன்று ₹75 உயர்ந்து ₹6,800 என விற்பனையாகிறது. நேற்று ₹96.20 என்று விற்பனையான ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹1.80 உயர்ந்து ₹98க்கு விற்கப்படுகிறது.

News June 6, 2024

ரீ-ரிலீஸ் ஆகும் ‘துப்பாக்கி’

image

‘துப்பாக்கி’ திரைப்படம், வரும் 21ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கற்பக விநாயக பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2012இல் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு, விஜய்யின் திரைப் பயணத்தில் முக்கியமான படமாகவும் அமைந்தது. வரும் 22ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

News June 6, 2024

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி

image

நீட் தேர்வில் 180 கேள்விகள் கேட்கப்பட்டு தலா 4 மதிப்பெண்கள் என 720 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. தவறான பதிலுக்கு மைனஸ் 1 மதிப்பெண். ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வுகளில் பல மாணவர்கள் 709, 714, 717, 718, 719 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் இந்த மதிப்பெண்களை யாருமே எடுக்க வாய்ப்பே இல்லை. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது.

error: Content is protected !!