India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகாராஷ்டிராவில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது.
இந்நிலையில், NDA கூட்டணி அரசு (பாஜக – சிவசேனா) உருவாக காரணமாக இருந்த அஜித் பவாரின் என்சிபி ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் மனநிலை மாறியுள்ளது. தொங்கு நாடாளுமன்றத்தில் அதிகாரம் இழந்து நிற்கும் பாஜகவை நம்புவதற்கு அவர்கள் தயாராக இல்லை. இதனால் மீண்டும் சரத் பவாரிடமே சரணடையலாம் எனப் புலம்பத் தொடங்கியதாகத் தெரிய வந்துள்ளது.
இபிஎஸ் – வேலுமணிக்கு இடையே உட்கட்சி பிரச்னை வெடித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுக தலைவர்களை தமிழக மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்பது தான் தேர்தல் தரும் பாடம். அதிமுக தனியாக போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை என விமர்சித்துள்ளார். பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால், 30 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் என எஸ்.பி.வேலுமணி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியினரால் ஆந்திராவில் வன்முறை வெடித்துள்ளதாக முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சி அமைக்கும் முன்பே TDP கட்சியினர் சட்டத்தை கையில் எடுத்துள்ளதால் பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டு அசாதாரண சூழல் நிலவுவதாகக் கூறியுள்ளார். YSR காங்., தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால் ஆளுநர் உடனடியாக தலையிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்
18ஆவது மக்களவைக்கு நாடு முழுவதிலும் இருந்து 41 அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் எம்.பி.,க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கு தேசிய கட்சிகள் (346) 64% பேரும் பேரும், மாநில கட்சிகள் (179) 33% பேரும் தேர்வாகியுள்ளனர். அங்கீகரிக்கப்படாத கட்சிகள் சார்பில் 11 பேரும், சுயேச்சையாக 8 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 17ஆவது மக்களவையில் 36 கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் இருந்தது.
பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில் வசிக்கும் ‘மருபோ’ பழங்குடி சமூகத்தினர், ‘ஸ்டார்லிங்க்’ மூலம் இணைய சேவையை பயன்படுத்தி வருகின்றனர். எலான் மஸ்க்கின் முயற்சியால், 9 மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட இந்த இணைய சேவையை, அவர்கள் தொடக்கத்தில் பெரிதும் கண்டுகொள்ளவில்லை. நாளடைவில் அதற்கு அடிமையாகி 24 மணிநேரமும் இணையத்தில் இருப்பது, ஆபாச வீடியோக்களை பார்ப்பது போன்ற தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது.
18ஆவது மக்களவைக்கு நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 280 பேர் புதுமுக எம்.பி.க்களாக காலடி எடுத்து வைக்கவுள்ளனர். அதிகபட்சமாக உ.பி.யில் இருந்து 45 பேரும், மகாராஷ்டிராவில் இருந்து 33 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவிலிருந்து 13 பேரும், தெலங்கானாவில் இருந்து 10 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட 18 பேர் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்த சத்யராஜின் மகள் திவ்யாவின் பதிவு பேசுபொருளாகியுள்ளது. தந்தையின் கொள்கை மற்றும் அரசியல் பார்வையால் ஈர்க்கப்பட்ட திவ்யா, அரசியலில் இறங்க ஆர்வம் காட்டி வருதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், திமுக கூட்டணியின் வெற்றி குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “40/40, இது திராவிட மண். எப்போதும் வெற்றி நமக்கே” எனக் குறிப்பிட்டிருப்பது கவனம் ஈர்த்து வருகிறது.
மக்களவைத் தேர்தலில் வெற்றியை இழந்திருக்கிறோமே தவிர களத்தை அல்ல என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே நமது இலக்கு 2026 சட்டப்பேரவை தேர்தல் தான் என்று கூறியிருந்ததை நினைவுப்படுத்திய அவர், அதை நோக்கி நம்முடைய வெற்றி பயணத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றார். 2026இல் வலுவான அணி அமைத்து பாமக தலைமையில் ஆட்சி அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாஜக 10 ஆண்டுகளாக பெரும்பான்மையோடு ஆட்சி செய்ததால், நாடாளுமன்றத்தில் அதிகாரம் மிக்கதாக இருந்தது. ஆனால், தற்போதைய நிலை தலைகீழாக மாறியுள்ளது. காங்., வலுவான எதிர்க்கட்சியாக இருப்பதோடு, பாஜக மைனாரிட்டி அரசு அமைக்க வேண்டிய சூழலில் உள்ளது. இந்நிலையில், அக்னிபாத் திட்டம், வேலையில்லாத் திண்டாட்டம், நீட் உள்ளிட்ட பல பிரச்னைகளை முன்வைத்து, நாடாளுமன்ற அவை களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் உயர் நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி தேமுதிக சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து பேசிய சத்யபிரத சாஹு, “விருதுநகர் வாக்கு எண்ணிக்கை தொடர்பான தேமுதிகவின் இதுவரை புகார் தேர்தல் ஆணையத்திற்கு வரவில்லை” என்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.