India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்காவில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட மூதாட்டி இறுதி சடங்கின்போது பிழைத்து எழுந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நெப்ராஸ்கா மாகாணத்தை சேர்ந்த கிளாண்ட்ஸ் (74) முதுமை காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, ஆதரவற்றோர் இல்லத்தில் அவருக்கு இறுதி சடங்கு ஏற்பாடுகள் நடந்த போது, அவர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து, சிகிச்சை அளித்த நிலையில், அவர் நலம் பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (மாலை 6 மணி வரை) 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், திருப்பூர், கோவை, தேனி, தி.மலை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்திக்கிறார். நேற்று மாலை INDIA கூட்டணி தலைவர்களின் சந்திப்பு நடைபெற்ற நிலையில், ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்பார் என கூறப்பட்டது. இந்நிலையில், எதிர்கட்சித் தலைவர் பதவி, வயநாடு, ரேபரேலி தொகுதிகளில் எந்தத் தொகுதியை விட்டுக்கொடுப்பது என்பது குறித்த கேள்விகளுக்கு இன்று அவர் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் கருத்துக்கணிப்புகள் மூலம் பங்குச்சந்தையில் முறைகேடு நடந்திருப்பதாக, திரிணாமுல் காங்., எம்.பி சாகேத் கோகலே, செபி தலைவர் மதாபி பூரி புச்சிற்கு கடிதம் எழுதியுள்ளார். பாஜக அமோக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு வெளியான நிலையில், பங்குச்சந்தை வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. ஆனால், முடிவுகள் மாறியதால் சந்தை பெருமளவு சரிந்தது. இதன் பின்னணியில் பாஜக இருக்கிறதா? என அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
ஒவ்வொரு எம்.பி.க்கும் மாதம் ₹1 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொண்டால் நாள் ஒன்றுக்கு ₹2,000 உதவித்தொகை வழங்கப்படும். தொகுதி உதவித்தொகை ₹70 ஆயிரம் & அலுவலக செலவுகளுக்கு மாதம் ₹60 ஆயிரம் வழங்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு எம்.பி.க்கும் மாதம் ஏறத்தாழ ₹2.30 லட்சம் கிடைக்கும். டெல்லியில் இலவச தங்குமிடமும், ஆண்டுக்கு 34 முறை இலவச விமானப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது.
நெல், பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 5 முதல் 10% வரை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 9ஆம் தேதி பிரதமராக மோடி பதவியேற்பதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையின் முதல் கூட்டத்தில், எண்ணெய் வித்துக்கள், தானியங்களுக்கான ஆதரவு விலையை உயர்த்துவதற்கு ஒப்புதல் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
‘வா வாத்தியார்’ படத்தில், நடிகர் கார்த்திக் போலீசாகவும், எம்.ஜி.ஆர் ரசிகனாகவும் நடிக்க உள்ளதாக இயக்குநர் நலன் குமாரசாமி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இப்படத்தில் நிறைய பாடல்கள், சண்டைக் காட்சிகள் இடம் பெற, 90களை பிரதிபலிக்கும் மசாலா படமாக இருக்கும் என்றும் கூறினார். மேலும், நீண்ட வருடங்களாக படம் இயக்காமல் இருந்த தன்னை, ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டெல்லியில் ஜெ.பி.நட்டா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், “பாஜக கூட்டணி அரசின் அமைச்சரவையில் தமிழ்நாட்டிற்கு பிரதிநிதித்துவம் தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த அமைச்சரவையில் தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், எல்.முருகன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், புதிய அமைச்சரவையில் தமிழ்நாட்டில் இருந்து இடம்பெறபோவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா அரசியலில் தனது இருப்பைத் தக்கவைக்க வேண்டிய நெருக்கடிக்கு அஜித் பவார் தள்ளப்பட்டுள்ளார். NCP கட்சி & சின்னத்தை தன்வசம் வைத்துள்ள அவரது அணி, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் NDA கூட்டணி சார்பில் 12 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. இதனால் சரத் பவாரிடம் இருந்து பிரிந்து சென்று, அவருடன் சென்ற NCP எம்.எல்.ஏ.,க்கள் தற்போது கலக்கமடைந்துள்ளனர்.
அஜித் பவார் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மீண்டும் சரத் பவார் அணியில் சேர ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தற்போது அஜித் பவார் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். ஆட்சி & கட்சிப் பதவியையும், ஆதரவாளர்களையும் தக்கவைக்க தனது அணியின் உயர்மட்ட குழுவுடன் மும்பையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.