News June 6, 2024

களைகட்டப்போகும் நாடாளுமன்ற அவை

image

பாஜக 10 ஆண்டுகளாக பெரும்பான்மையோடு ஆட்சி செய்ததால், நாடாளுமன்றத்தில் அதிகாரம் மிக்கதாக இருந்தது. ஆனால், தற்போதைய நிலை தலைகீழாக மாறியுள்ளது. காங்., வலுவான எதிர்க்கட்சியாக இருப்பதோடு, பாஜக மைனாரிட்டி அரசு அமைக்க வேண்டிய சூழலில் உள்ளது. இந்நிலையில், அக்னிபாத் திட்டம், வேலையில்லாத் திண்டாட்டம், நீட் உள்ளிட்ட பல பிரச்னைகளை முன்வைத்து, நாடாளுமன்ற அவை களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News June 6, 2024

தேமுதிகவின் புகார் தொடர்பாக விளக்கமளித்த சாஹு

image

தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் உயர் நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி தேமுதிக சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து பேசிய சத்யபிரத சாஹு, “விருதுநகர் வாக்கு எண்ணிக்கை தொடர்பான தேமுதிகவின் இதுவரை புகார் தேர்தல் ஆணையத்திற்கு வரவில்லை” என்று தெரிவித்தார்.

News June 6, 2024

அண்ணாமலை இன்று டெல்லி பயணம்

image

தமிழகத்தில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளதையடுத்து மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி புறப்படுகிறார். மேலிட அழைப்பைத் தொடர்ந்து இன்று மதியம் 2.30 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார் அண்ணாமலை. தேர்தல் தோல்வி குறித்து மேலிடத் தலைமைக்கு அண்ணாமலை விளக்கமளிக்கச் செல்வதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News June 6, 2024

பாஜகவால் தன்னிச்சையாக செயல்பட முடியுமா?

image

மத்தியில் கூட்டணி ஆட்சி அமைவதால் பாஜகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நெருக்கடி நிலை ஏற்படும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். 2014-2024 வரை பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் நீக்கம் உள்ளிட்டவற்றை அமல்படுத்தியது. ஆனால், பாரத் பெயர் மாற்றம், மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு ரத்து, சிஏஏ, அக்னிவீர் உள்ளிட்டவற்றை பாஜகவால் தன்னிச்சையாக நடைமுறைப்படுத்த முடியாது.

News June 6, 2024

கேங்ஸ்டர் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்

image

‘தங்கலான்’ படத்தைத் தொடர்ந்து, பா.ரஞ்சித் ‘வேட்டுவம்’ படத்தை இயக்கவுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில், அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும், அசோக் செல்வன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாகவும், இப்படம், கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து, ‘சார்பட்டா 2’ படத்தை அவர் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News June 6, 2024

அக்னிவீர் திட்டத்தை எதிர்க்கும் நிதிஷ்குமார்

image

அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பாஜகவுக்கு ஜேடியு தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ்குமார் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிஹார் மாநிலத்தில் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவோர் அதிகம். ஆனால், 2022இல் அக்னிவீர் திட்டத்தால் ராணுவத்தில் சேருவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகவே நிதிஷ், இந்த நிபந்தனையை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

News June 6, 2024

கட்சியை காப்பாற்றவே சபாநாயகர் பதவி: விசிக

image

சந்திரபாபு, நிதிஷ் குமார் ஆகியோருக்கு INDIA கூட்டணி கதவு திறந்திருப்பதாக விசிக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சொந்த கட்சியை பாஜகவிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள் சபாநாயகர் பதவி கேட்பதாகவும், பாஜகவுடன் பயணிப்பது ஆபத்து என்பதால், அக்கூட்டணி நீடிக்காது என்றும் கூறினார். அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற ஆசை INDIA கூட்டணிக்கு இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.

News June 6, 2024

மோடி அரசு மீது வரும் 21இல் நம்பிக்கை வாக்கெடுப்பு?

image

பாஜக அரசு மீது வரும் 21ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் 292 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான NDA கூட்டணி நாளை மறுநாள் ஆட்சி அமைக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து, அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளன.

News June 6, 2024

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி?

image

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறு தென்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதிமுக மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரின் பாஜக ஆதரவு பேச்சுகளும் இதையே உணர்த்துகின்றன. அதே நேரம், பாஜகவில் அண்ணாமலையின் தலைமையை மாற்ற அதிமுக தரப்பில் கோரிக்கை எழும் எனக் கூறப்படுகிறது.

News June 6, 2024

கூட்டணி தொடர்ந்திருந்தால் 30 தொகுதிகளில் வெற்றி: அதிமுக

image

அதிமுக, பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக கூட்டணி தொடர்ந்திருந்தால் 30 தொகுதிகளை வென்றிருப்போம் என்றார். எல்.முருகன், தமிழிசை ஆகியோர் தமிழக பாஜக தலைவர்களாக இருந்த போது தங்கள் கூட்டணியில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

error: Content is protected !!