News November 4, 2025

USA முன்னாள் துணை அதிபர் டிக் செனி காலமானார்

image

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் டிக் செனி (84) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அதிபர் ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தில், 2001 முதல் 2009 வரை துணை அதிபராக பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் தான் உலக வர்த்தக மையம் மீதான தாக்குதல், ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு, சதாம் உசேனுக்கு மரண தண்டனை உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. அமெரிக்க வரலாற்றில் மிகவும் வலிமை வாய்ந்த துணை அதிபராக கருதப்பட்டவர்.

News November 4, 2025

இந்திய பங்குச்சந்தைகளின் இன்றைய நிலவரம்

image

நவம்பர் மாதத்தின் முதல் வர்த்தக நாளான நேற்று, சற்று ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தைகள், இன்று சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், 519 புள்ளிகள் குறைந்து 83,459 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 167 புள்ளிகள் குறைந்து 25,597 புள்ளிகளுடனும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. நாளை குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பங்குச்சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 4, 2025

நாளை வானில் அதிசயம்… மிஸ் பண்ணாதீங்க!

image

Beaver Moon என அழைக்கப்படும் சூப்பர் மூன் நாளை (நவ.5) வானில் தோன்றவுள்ளது. பூமிக்கு மிக அருகில் நிலவு வரவுள்ளதால் வழக்கமான பௌர்ணமியை விட 14% பிரகாசமாகவும், 30% பெரிதாகவும் தோன்றும். 2025-ன் மிகப்பெரிய சூப்பர் மூன் இது. பீவர் (எ) நீர்நாய்கள், இந்த மாதத்தில் மிக ஆக்டிவாக இருந்து பெளர்ணமி நிலவொளியில் தங்களின் வீடுகளை கட்டும் பணிகளை முடித்துவிடும். இதன் காரணமாகவே, பீவர் மூன் என அழைக்கப்படுகிறதாம்.

News November 4, 2025

கால்குலேட்டருக்கு அனுமதி: மாணவர்களுக்கு HAPPY NEWS

image

10, +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதியை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். இதில் சிறப்பம்சமாக, கணக்குப்பதிவியல் தேர்வின்போது மாணவர்கள் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிப்பது இதுவே முதல்முறை.

News November 4, 2025

டாப்-9 நகரங்கள்: இதிலுள்ள தமிழக நகரம் எது தெரியுமா?

image

கலை, இசை, உணவு, சினிமா, கைவினை, இலக்கியம், வடிவமைப்பு போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் நகரங்களை “படைப்பாற்றல் நகரங்கள்” என்று UNESCO அறிவிக்கிறது. சமீபத்தில் லக்னோவும் அந்த அங்கீகாரம் பெற்றது. இதனுடன் சேர்த்து இந்தியாவில், மொத்தம் 9 படைப்பாற்றல் நகரங்கள் உள்ளன. அவை எந்தெந்த நகரங்கள், அதன் சிறப்புகளை மேலே போட்டோக்களில் கொடுத்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT

News November 4, 2025

பிஹார் தேர்தல்: இன்றுடன் பிரசாரம் நிறைவடைந்தது

image

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் நவ.6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. 243 தொகுதிகளை கொண்ட பிஹாரில், முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எஞ்சிய தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நவ.11-ம் தேதி நடைபெற உள்ளது.

News November 4, 2025

BREAKING: நடிகை த்ரிஷா வீட்டில் குவிந்த போலீஸ்… பதற்றம்

image

சென்னையில் நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது. இதேபோல், நடிகர் விஷால், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

News November 4, 2025

BREAKING: பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன்

image

இன்று காலையில் திமுகவில் இணைந்த OPS ஆதரவாளர் மனோஜ் பாண்டியன், தனது MLA பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். 2021-ல் அதிமுக சார்பில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு மனோஜ் பாண்டியன் வெற்றி பெற்றிருந்தார்.

News November 4, 2025

கனமழை வெளுக்கப் போகுது… வந்தது அலர்ட்

image

தமிழகத்தில் 3 நாள்களுக்கு <<18195152>>கனமழைக்கான மஞ்சள் அலர்ட்<<>> கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை, சென்னை, திருவள்ளூர், திருவாரூர், கோவை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. ஆகையால், பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் முடிந்து வீடு திரும்புவோர் கவனமாக இருங்க!

News November 4, 2025

முருகனை தரிசித்த ‘ஜனநாயகன்’ இயக்குநர்

image

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ மீது எதிர்பார்ப்புகள் ஏராளம். இந்த படம் வரும் ஜன.9-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் H.வினோத், இயக்குநர் ரா.சரவணனுடன் இணைந்து பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். என்ன வேண்டிக் கொண்டிருப்பார் H.வினோத்? கமெண்ட்டில் சொல்லுங்கள்.

error: Content is protected !!