News June 6, 2024

இபிஎஸ் தலைமைக்கு சிக்கல் (3/3)

image

இபிஎஸ் ‘ஒற்றைத் தலைமை’க்கு எதிராக சசிகலா – ஓபிஎஸ் – TTV தினகரன் அடுக்கிய குற்றச்சாட்டுகளை இப்போது அடிமட்ட தொண்டர்களும் முன்வைக்க தொடங்கியுள்ளனர். தொடர் தோல்விகளால் மனந்தளர்ந்துள்ள அதிமுகவின் தொண்டர்களை நோக்கி, சசிகலா காய் நகர்த்தி வருகிறார். அரசியல் சதுரங்க ஆட்டத்தில் வெட்டப்படும் பரிதாபகரமான ‘ராஜா’வின் நிலையில், தற்போது இபிஎஸ்-இன் தலைமை இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News June 6, 2024

நீட் தேர்வில் இது எப்படி சாத்தியம்?

image

நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் பல குளறுபடிகள் இருப்பதாக கல்வியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். நாடு முழுவதும் 67 பேர் 720/720 பெற்று முதலிடம் பிடித்த நிலையில், அதில் 8 பேர் ஒரே தேர்வு மையத்தில் எழுதியவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அடுத்தடுத்த வரிசை எண் கொண்ட 6 பேர் முதலிடம் பிடித்திருக்கின்றனர். இவை அனைத்தும் நீட் தேர்வின் மேல் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

News June 6, 2024

தமிழகத்தில் அதிகபட்சமாக 9 செ.மீ மழை

image

கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மற்றும் செம்பரம்பாக்கத்தில் தலா 9 செ.மீ மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 8 செமீ மழையும், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல், பொன்னேரி, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, திருமங்கலம், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

News June 6, 2024

சேஸிங்கில் புதிய சாதனை படைத்தார் ரோஹித் ஷர்மா

image

அயர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா புதிய சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில், 4 Four, 3 Six என விளாசிய அவர், 37 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இதன் மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில், சேஸிங்கில் அரை சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார். நேற்று ஒரே நாளில் மட்டும் ரோஹித் ஷர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

News June 6, 2024

ஆதரவு தருகிறோம்… ஆனால்?

image

தேர்தலில் 240 இடங்களை வென்ற பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதை தீர்மானிக்கும் முக்கிய இடத்தில்
சந்திரபாபு நாயுடு & நிதிஷ்குமார் உள்ளனர். NDA கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்தபடியாக எம்.பிக்களை கொண்டுள்ள TDP (16) & JDU (12) இதன் காரணமாக பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. TDP சபாநாயகர் & 4 கேபினட் அமைச்சர் பதவிகளும், JDU 3 கேபினட் அமைச்சர் பதவிகளும் பாஜகவிடம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News June 6, 2024

‘காஞ்சனா 4’ படப்பிடிப்பு செப்டம்பரில் தொடக்கம்

image

‘காஞ்சனா 4’ பாகத்தின் படப்பிடிப்பு, வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. 3 பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து, 4ஆம் பாகத்தை இயக்க நடிகர் ராகவா லாரன்ஸ் முடிவெடுத்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்த ‘ஜிகர்தண்டா 2’ படம், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால், அவரது அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

News June 6, 2024

டெலிமானஸ் திட்டத்தைத் தொடங்கிய மத்திய அரசு

image

ராணுவ வீரர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்க மத்திய அரசு ‘டெலிமானஸ்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சகம் இதற்காக சிறப்பு மனநல ஆலோசனை மையங்களை திறந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 35 மாநிலங்கள் & 2 யூனியன் பிரதேசங்களில் 51 இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன; 20 மொழிகளில் ஆலோசனைகள் வழங்கும் இவை 24 மணி நேரமும் செயல்படும்.

News June 6, 2024

துணை நடிகை விஜயகுமாரி புற்று நோயால் மரணம்

image

புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த துணை நடிகை விஜயகுமாரி இன்று உயிரிழந்தார். ஈரோட்டைச் சேர்ந்த அவர், சென்னை வளசரவாக்கத்தில் தங்கியிருந்து படங்களிலும், சீரியல்களிலும் துணை நடிகையாக நடித்து வந்தார். அவர் புற்று நோயால் பாதிக்கப்படிருந்ததைத் தொடர்ந்து லாரன்ஸ், KPY பாலா போன்றோரிடம் உதவி கேட்டிருந்தார். ஆனால், இறுதியில் நோய் அவரது உயிரைக் குடித்துவிட்டது.

News June 6, 2024

எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனது ஏன்?

image

மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததற்கான காரணம் குறித்து பாஜக தலைவர் நட்டா தலைமையில் அக்கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தியுள்ளது. இக்கூட்டத்தில் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதிக தொகுதிகளை கொண்ட உ.பி., மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பாஜக பெரும் சறுக்கலை சந்தித்தது. இதன் காரணமாக 400+ இடங்கள் என்ற பாஜகவின் கனவு பொய்த்தது.

News June 6, 2024

ரஜினியுடன் நடிக்கும் பாலகிருஷ்ணா?

image

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாக பிரமாண்ட வெற்றிபெற்றது ஜெயிலர். அதன் 2ஆம் பாகத்திற்கான திரைக்கதை தயார் செய்யும் பணியை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மேற்கொண்டு வருகிறார். அத்துடன் ‘ஜெயிலர்-2’ படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவரோடு பேசி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!