News June 6, 2024

இந்திய அணி அபார வெற்றி

image

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. நியூ யார்க்கில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 16 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் Gareth Delany 26 ரன்கள் எடுத்தார். IND தரப்பில் ஹர்திக் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து களமிறங்கிய IND அணி, 12.2 ஓவர்களில் 97/2 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

News June 6, 2024

தோனியின் சாதனையை முறியடித்த ரோஹித்

image

ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டிகளில், அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற சாதனையை இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா படைத்துள்ளார். இதுவரை 55 போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ள அவர், 42 போட்டிகளில் வெற்றிவாகை சூடி இந்த சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார். இதன் மூலம், 72 போட்டிகளில் விளையாடி 41 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்த முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை ரோஹித் முறியடித்துள்ளார்.

News June 6, 2024

இன்றைய முக்கியச் செய்திகள்

image

*மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பது குறித்து ஜூன் 7இல் முடிவு: NDA கூட்டணி.
*தொடர் தோல்வி காரணமாக மாநிலக் கட்சி அந்தஸ்தை இழந்தது பாமக.
*முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு ஜூன் 26க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: கல்வித்துறை
*நடிகர் பிரேம்ஜிக்கு ஜூன் 9ஆம் தேதி திருமணம்: வெங்கட் பிரபு தகவல்
*உலகக் கோப்பை T20 தொடர்: அயர்லாந்து அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி.

News June 6, 2024

வியாழக்கிழமைகளில் இதை செய்யலாம்

image

வியாழக்கிழமை என்பது குரு பகவானுக்கு உகந்த நாள். இன்றைய நாளில் கோயிலுக்குச் சென்று தட்சிணாமூர்த்தியை வணங்குவது பல்வேறு நற்பலன்களை பயக்கும் என்பது ஐதீகம். கோயிலுக்குச் செல்ல முடியாதோர் மனதில் யாரை வேண்டுமானாலும், குருவாக நினைத்து அவர்களை வழிபடலாம். இதேபோன்று, தொடர்ந்து 11 வாரங்கள் வழிபாடு செய்து வருவதால், நாள்பட்ட துன்பங்கள், கடன் தொல்லைகள் விலகி ஓடும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

News June 6, 2024

சச்சின், கோலியுடன் இணைந்த ரோஹித்

image

இந்தியா-அயர்லாந்து இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியில், பல்வேறு சாதனைகள் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில், சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மா 300 வெற்றிகளை பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலம் 300 வெற்றிகளைப் பதிவு செய்த 3ஆவது இந்திய அணி வீரர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரரானார். இதற்கு முன், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் 300 வெற்றிகளை பூர்த்தி செய்துள்ளனர்.

News June 6, 2024

சீமான் ஒரு பிரிவினைவாதி: செல்வப்பெருந்தகை

image

சீமான் ஒரு பிரிவினைவாதி என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 8% வாக்குகளுக்கு மேல் கிடைத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஏமாந்த இளைஞர்கள் நாதகவுக்கு வாக்களிப்பது மிகவும் ஆபத்தான விஷயம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர் சீமான் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

News June 6, 2024

T20 WC: உகாண்டா அணி பந்துவீச்சு

image

உலகக் கோப்பை T20 கிரிக்கெட் தொடரின் 9ஆவது லீக் போட்டியில் இன்று பப்புவா நியூ கினியாவை உகாண்டா அணி எதிர்கொள்கிறது. Providence மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற உகாண்டா அணி கேப்டன் பிரையன் மஸபா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். C பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளும், இதுவரை ஒரு போட்டியில் விளையாடி தோல்வியை கண்டுள்ளன. இதனால், இரு அணிகளுக்கும் இன்றைய போட்டி முக்கியமானதாக இருக்கும்.

News June 6, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜூன் – 6 ▶வைகாசி – 24 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM வரை ▶கெளரி நல்ல நேரம்: 11:30 AM – 12:30 AM, 06:30 PM – 07:30 PM வரை ▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM வரை ▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM வரை ▶குளிகை: 06:00 PM – 07:30 PM வரை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶ திதி: அமாவாசை

News June 6, 2024

மனம் மாறுவாரா இபிஎஸ்?

image

மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், கருத்து வேறுபாடுகளை மறந்து அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என சசிகலா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பை இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் ஏற்பார்களா? குறிப்பாக, ஒற்றைத் தலைமையாக உள்ள இபிஎஸ், மனம் மாறிச் செல்வாரா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

News June 6, 2024

அசத்திய இந்திய அணி பவுலர்கள்

image

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய முதல் போட்டியிலேயே, இந்திய அணி பவுலர்கள் பல சாதனைகளை புரிந்துள்ளனர். அந்த வகையில், ஒரு ஓவர் வீசி 3 ரன்கள் விட்டுக்கொடுத்த அக்‌ஷர் படேல், ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் T20 போட்டிகளில் caught & bowled முறையில் 50 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். இதேபோல, 3 ஓவர்கள் வீசி 6 ரன்களுக்கு 2 விக்கெட் வீழ்த்திய பும்ரா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

error: Content is protected !!