News June 5, 2024

குமரியில் லேசான நிலநடுக்கம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. குமரிமுனை, விவேகானந்தபுரம், குண்டல், கொட்டாரம், அஞ்சுகிராமம் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து, பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நில அதிர்வின் ரிக்டர் அளவு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

News June 5, 2024

அசைக்க முடியாத சக்தி பாஜக: எல்.முருகன்

image

தமிழ்நாட்டில் பாஜக அசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபித்துள்ளோம் என முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நீலகிரி தொகுதியில் வெற்றிபெற முடியவில்லை என்றாலும், அத்தொகுதிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்ற அவர், பாஜக கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ளார். திமுக அரசின் அதிகார பலம், பண பலத்தை பாஜக வென்றுள்ளதாகவும் அவர் சூளுரைத்தார்.

News June 5, 2024

மோடியின் வெற்றியை பாகிஸ்தான் எப்படி பார்க்கிறது?

image

எல்லை தாண்டிய அரசியல் நிகழ்வுகளில் பாகிஸ்தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரம், மோடி மீண்டும் ஆட்சி அமைப்பது இந்திய முஸ்லிம்களுக்கு நல்லதல்ல என்ற கருத்து பாகிஸ்தான் மக்களிடையே பரவலாக காணப்படுவதாக கூறுகின்றனர். பிரசாரத்தின் போது மோடி முஸ்லிம்களை குறி வைத்து பேசியதாக வெளியான செய்தி, அவர்களிடையே இந்த சிந்தனையை விதைத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

News June 5, 2024

பாமக முடிவை மாற்றியிருந்தால் என்ன நடந்திருக்கும்?

image

அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, தேர்தல் நெருக்கத்தில் பாஜக கூட்டணிக்கு மாறியது. ஒரு வேளை அதிமுக கூட்டணியில் தொடர்ந்திருந்தால், செளமியா வெற்றி பெற்றிருக்க அதிக வாய்ப்பிருந்ததாக கள ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், சொற்ப வாக்குகளில் தோல்வியை தழுவிய விஜய பிரபாகரன் வென்றிருக்கவும் வாய்ப்பிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், பாஜக கூட்டணியை பாமக தொண்டர்கள் விரும்பவில்லையா? என்ற கேள்வி எழுகிறது.

News June 5, 2024

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

image

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 WC போட்டியில் இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரில் 20 அணிகள் 4 குழுக்களாக விளையாடி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து உள்ளிட்ட 5 அணிகள் ஏ குரூப்பில் இடம் பெற்றுள்ளன. இதுவரை அயர்லாந்து அணி இந்தியாவுடன் மோதிய 7 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில், தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்ய இந்தியா முனைப்பில் உள்ளது.

News June 5, 2024

சூர்யா பிறந்தநாளில் டைட்டில் அறிவிப்பு

image

‘கங்குவா’ படத்தை தொடர்ந்து, ‘சூர்யா 44’ படத்தில் சூர்யா பிசியாக நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் அந்தமானில் தொடங்கியது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இம்மாத இறுதியில் படத்தின் டைட்டிலையும், சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 22 அன்று ஃபர்ஸ்ட் லுக்கையும் படக்குழு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

News June 5, 2024

இணைந்து செயல்பட சசிகலா அழைப்பு

image

அதிமுகவின் வளர்ச்சிக்காக, தமிழக மக்களின் வாழ்வுக்காக ஒன்றிணைவோம் என, தொண்டர்களுக்கு சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். ஒருசிலரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்காக இயக்கம் அழிவதை இனியும் வேடிக்கை பார்க்க இயலாது எனக் கூறிய அவர், இணைந்து செயல்பட தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ், சசிகலா நீக்கப்பட்டதே, தேர்தல் தோல்விக்கு காரணம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News June 5, 2024

வீழ்ந்து எழுந்த அதானி நிறுவன பங்குகள்

image

மோடி தலைமையிலான பாஜக, பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியானது. ஆனால், அதற்கு நேர்மாறாக தேர்தல் முடிவுகள் அமைந்ததால், நேற்று பங்குச்சந்தை கடுமையாக சரிந்தது. குறிப்பாக, அதானி குழும பங்குகள் 25% வரை சரிவை சந்தித்தன. தற்போது, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மோடி மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளதால், இன்று அதானி குழும பங்குகள் உத்வேகத்தோடு எழுச்சி கண்டன.

News June 5, 2024

அதிக வாக்குகள் பெற்றும் தனி மெஜாரிட்டி பெறாத பாஜக

image

கடந்த தேர்தலை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றும், அதனால் தனி மெஜாரிட்டி பெற முடியவில்லை. 2019 தேர்தலில் 36.36% வாக்குகளை பெற்ற பாஜக, 303 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்தது. ஆனால், நடந்து முடிந்த 2024 தேர்தலில் 36.56% வாக்குகளை பெற்றிருந்தும், பாஜகவால் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய இடங்களை பெற முடியவில்லை. பாஜகவின் தனி மெஜாரிட்டி கனவை கனவை, INDIA கூட்டணி தகர்த்துள்ளது.

News June 5, 2024

இந்தியாவின் இளம் எம்.பி.க்கள்

image

நடந்து முடிந்த 18ஆவது மக்களவைத் தேர்தலில், வென்ற 25 வயதிற்குட்பட்ட நான்கு இளம் எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்திற்குள் கால்பதிக்க உள்ளனர். அவர்களின் விவரம் இதோ:- ராஜஸ்தானின் பாரத்பூர் தொகுதி எம்.பி., சஞ்சனா ஜாதவ் (காங்கிரஸ்) , பிஹாரின் சமஸ்திபூர் தொகுதி எம்.பி., ஷாம்பவி சவுத்ரி (எல்.ஜே.பி), உ.பி., மச்சில்சாஹர் தொகுதி எம்.பி., பிரியா சரோஜ் & கவுசம்பி தொகுதி எம்.பி., புஷ்பேந்திர சரோஜ் (சமாஜ்வாதி).

error: Content is protected !!