News June 4, 2024

சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி

image

திமுக கூட்டணியில், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரஹாசன் 2ஆவது இடத்தையும், பாஜக வேட்பாளர் கார்த்திகாயினி 3ஆவது இடத்தையும் பிடித்தனர். சிதம்பரம் தொகுதியில், தொடர்ந்து 2ஆவது முறையாக திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்.

News June 4, 2024

என்ன செய்யப்போகிறது தமிழக வெற்றிக் கழகம்?

image

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்று, எதிர்க்கட்சிகளை கலங்கடித்துள்ளது. அதுமட்டுமின்றி, பெரும்பாலான வேட்பாளர்கள் 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் களம் இறங்கவுள்ள தவெக, ஆலமரமாக வளர்ந்து நிற்கும் திமுகவை வீழ்த்த எந்த மாதிரியான வியூகத்தை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News June 4, 2024

140 கோடி மக்களுக்கு கிடைத்த வெற்றி: மோடி

image

தேர்தல் சிறப்பாக நடைபெற உதவியவர்களுக்கும், பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தவர்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். டெல்லி பாஜக தலைமையகத்தில் பேசிய அவர், இது 140 கோடி மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். அத்துடன், மக்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதால் தான் 3ஆவது முறையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

News June 4, 2024

லட்சிய பயணம் தொடரும்: தினகரன்

image

தற்காலிக தடைகளைத் தாண்டி, லட்சிய பயணம் தொடரும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பணம், பரிசுப் பொருட்கள், அதிகார துஷ்பிரயோகம், அவதூறுகளை கடந்து அமமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தேனி மக்கள் மீதான அன்பு சாம்ராஜ்ஜியம் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

News June 4, 2024

தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

image

மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்ற திமுக கூட்டணி வேட்பாளர்கள்: T.R.பாலு, ஆ.ராசா, கதிர் ஆனந்த், கலாநிதி வீராசாமி, கனிமொழி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கார்த்தி சிதம்பரம், நவாஸ் கனி, சு.வெங்கடேசன், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், ரவிக்குமார், சுப்பராயன், திருமாவளவன், வசந்தகுமார், விஷ்ணு பிரசாத் ஆகியோர் 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றுள்ளனர்.

News June 4, 2024

நேருவின் சாதனையை சமன் செய்த மோடி

image

இந்திய சுதந்திர வரலாற்றில் மூன்று தேர்தல்களில் தொடர் வெற்றிகண்டு மூன்று முறை பிரதமராக பதவி வகித்தவர் நேரு. 1951, 1957, 1962 என தொடர்ச்சியாக மக்களவைத் தேர்தல்களில் அவர் வெற்றிபெற்றார். இந்நிலையில், சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் மோடி இந்த சாதனையை சமன் செய்துள்ளார். 2014, 2019 மற்றும் 2024 என மூன்று தேர்தல்களில் தொடர் வெற்றிகண்டுள்ளார் மோடி.

News June 4, 2024

கோட்டை விட்ட ஷிண்டே; கொடியை ஏற்றிய உத்தவ்

image

மகாராஷ்டிராவில் சிவசேனா ஷிண்டே அணியை பின்னுக்குத் தள்ளி உத்தவ் தாக்கரே அணியினர் தங்களது பலத்தை நிரூபித்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தில் போட்டியிட்ட ஏக்நாத் ஷிண்டே அணியினர் 6 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளனர். அதே நேரத்தில், மத்திய பாஜக அரசு கொடுத்த நெருக்கடிக்கு மத்தியில் உத்தவ் அணி மும்பையில் 3 தொகுதிகள் உள்பட 10 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது.

News June 4, 2024

டெல்லி செல்கிறார் ஸ்டாலின்

image

டெல்லியில் நாளை கூட இருக்கும் INDIA கூட்டணித் தலைவர்களின் அலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க செல்வதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், அவரிடம் இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கருணாநிதி பாணியில் ‘என் உயரம் எனக்கு தெரியும்’ என பதிலளித்தார்.

News June 4, 2024

மூன்று மாநிலங்களில் கோட்டை விட்ட காங்கிரஸ்

image

மக்களவைத் தேர்தலில் நிகழ்ந்த முக்கிய ஆச்சரியம் என்னவென்றால், குஜராத்தில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு காங்., ஒரு தொகுதியில் வெற்றியை ருசித்துள்ளது. இது அக்கட்சிக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. பாஜகவுக்கு கடும் நெருக்கடி அளித்த INDIA கூட்டணி, ம.பி.யிலும், ஆளும் கர்நாடகா, தெலங்கானாவிலும் கோட்டை விட்டுள்ளது. அங்கு சிறப்பாக பணியாற்றியிருந்தால், நிலைமை தலைகீழாக மாறியிருக்க வாய்ப்புள்ளது.

News June 4, 2024

நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற மன்சூர்

image

வேலூர் தொகுதியில் நோட்டாவை விட மன்சூர் அலிகான் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற கட்சியை தொடங்கிய அவர், பலாப்பழம் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டார். இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நோட்டாவுக்கு 6,695 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், மன்சூர் அலிகான் 2,181 வாக்குகளையே பெற்றுள்ளார். இதையடுத்து, சமூக வலைதளங்களில் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

error: Content is protected !!