News June 4, 2024

மோடியின் வியூகம் தமிழகத்தில் பலிக்கவில்லையா?

image

மக்களவைத் தேர்தலுக்காக, தமிழகத்தில் மட்டும் பிரதமர் மோடி 8 முறை சுற்றுப்பயணம் செய்தார். குறிப்பாக, சென்னை & கோவையில் சாலைப் பேரணி போன்ற பிரசாரங்களை மேற்கொண்டார். ஆனாலும், தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறவில்லை. மேலும், பல தொகுதிகளில் பாஜக 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதன் மூலம், பாஜகவை தமிழக மக்கள் ஏற்கவில்லை என்பது தெளிவாக புரிவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

News June 4, 2024

வாரணாசியில் சரிந்த மோடியின் செல்வாக்கு

image

வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட மோடி, 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில் 3ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அதே நேரம், 2014 மக்களவைத் தேர்தலில் 3,71,784 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற அவர், 2019 மக்களவைத் தேர்தலில் 4,79,505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அடுத்தடுத்த தேர்தலில் அவருக்கான வாக்குகள் அதிகரித்த நிலையில், தற்போது கணிசமாக குறைந்துள்ளது.

News June 4, 2024

K.N.நேரு மகன் அருண் வெற்றி

image

பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், அமைச்சர் கே.என்.நேருவின் மகனுமான அருண் நேரு, 3.95 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 2ஆவது இடத்தையும், பாஜக சின்னத்தில் போட்டியிட்ட பாரிவேந்தர் 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் தேன்மொழி 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

News June 4, 2024

பாஜக 291, INDIA கூட்டணி 233 தொகுதிகளில் வெற்றி

image

மக்களவைத் தேர்தலில் பாஜக 291 தொகுதிகளில் வெற்றி பெற்று, 2 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜகவுக்கு கடும் நெருக்கடி கொடுத்த INDIA கூட்டணி 233 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மற்றவை 17 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது.

News June 4, 2024

வாய்ப்பை தவறவிட்ட அதிமுக, பாஜக

image

கடந்த தேர்தலில் ஒரே கூட்டணியில் இருந்த அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் இரு அணிகளாக பிரிந்து, இந்த தேர்தலை எதிர்கொண்டன. ஆனால், அவர்களால் 2ஆவது, 3ஆவது இடங்களையே பிடிக்க முடிந்தது. பல தொகுதிகளில் இந்த இரு அணிகளுக்கும் கிடைத்த வாக்குகளை கூட்டினால், திமுக கூட்டணியை விட அதிகமாக வருகிறது. ஒருவேளை இந்த கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால் சில தொகுதிகளில் வென்றிருக்க வாய்ப்புள்ளது.

News June 4, 2024

கோவையில் அதிமுக தோல்விக்கு என்ன காரணம்?

image

கோவையில் கிங் மேக்கராக இருந்த இபிஎஸ்ஸின் வலது கையான வேலுமணி, பாஜகவில் இணைவதாகவும், தேர்தல் பணியில் சுனக்கம் காட்டியதாகவும் தகவல் பரவியது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய முடிவு அதிமுகவிற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. குறிப்பாக, அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரனை பின்னுக்கு தள்ளி, அண்ணாமலை 2வது இடத்தை பிடித்தது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

News June 4, 2024

நீண்ட இழுபறிக்கு பின் விஜய பிரபாகரன் தோல்வி

image

விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் நீண்ட இழுபறிக்கு பிறகு, சுமார் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காலையில் இருந்து மாறிமாறி முன்னிலை பெற்று வந்த நிலையில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தோல்வி அடைந்தார். 40 தொகுதிகளில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்த தொகுதியில் தான்.

News June 4, 2024

இந்தியாவுக்கு வழியும், ஒளியும் காட்டும் வெற்றி: கமல்

image

மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆட்சியை மக்கள் ஆதரிப்பதற்கு இந்த தேர்தலே சாட்சி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கமல், முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், இந்த வெற்றி இந்தியாவுக்கு வழியும், ஒளியும் காட்டக்கூடியவை. இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க எனக் கூறியுள்ளார்.

News June 4, 2024

ராகுல் காந்தியின் நண்பரிடம் ஸ்மிருதி ரானி தோல்வி

image

ராகுல் காந்தியை வெற்றிக்கொண்ட ஸ்மிருதி ரானி, ராகுலின் குடும்ப நண்பரான கிஷன் லாலிடம் தோல்வியை தழுவியுள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில், அமேதி தொகுதியில் ராகுலை வென்று, மத்திய அமைச்சரானார் ஸ்மிருதி. இம்முறையும் அவர், அதே தொகுதியில் களம் கண்ட நிலையில், அவரை எதிர்த்து கிஷன் லால் சர்மா போட்டியிட்டார். இதில், கிஷன் லால் 1 லட்சத்து 67 ஆயிரத்து 196 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

News June 4, 2024

சந்திரபாபு நாயுடுவுக்கு நடிகர் விஜய் வாழ்த்து

image

ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு, நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தீர்க்கமான வெற்றியை தெலுங்கு தேசம் கட்சி பதிவு செய்துள்ளதாக வாழ்த்தியுள்ளார். மேலும், சந்திரபாபு நாயுடு தலைமையின் கீழ் ஆந்திர மக்கள் பெரும் முன்னேற்றத்தை அடைய வேண்டும் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!