India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஓபிஎஸ்ஸின் சொந்த ஊரான தேனியில், டிடிவியை அவரால் வெற்றிபெற வைக்க முடியவில்லை. தேனியில் பிரசாரம் மேற்கொண்டபோது தான், தேர்தலுக்கு பின் டிடிவி வசம் அதிமுக வரும் என அண்ணாமலை சூளுரைத்தார். ஆனால், அந்த கூட்டணி 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மாறாக, இபிஎஸ் தலைமையிலான அதிமுக 2வது இடத்தை பிடித்துள்ளது. இதன்மூலம், ஓபிஎஸ்ஸை சொந்த ஊர் மக்கள் புறக்கணித்து விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.
இந்த தேர்தல் முடிவின் மூலம் அரசியலமைப்பை ஏழை மக்கள் காப்பாற்றியுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலானது அரசியல் ரீதியிலான தேர்தல் அல்ல என்றும், பாஜகவால் சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்பட்டதற்கு எதிரான தேர்தல் என்றும், அவர் தெரிவித்தார். பாஜகவை மட்டுமல்லாது சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளையும் INDIA கூட்டணி வென்றுள்ளதாக அவர் கூறினார்.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கார்கே, மக்களவைத் தேர்தலின் முடிவின் மூலம் மோடிக்கு எதிராக மக்கள் தீர்ப்பளித்துள்ளதாகவும், இந்தத் தேர்தல் முடிவானது மக்கள் அளித்த முடிவு என்றும் தெரிவித்தார். மோடி தார்மிக ரீதியிலும், அரசியல் ரீதியிலும் தோல்வியடைந்து விட்டார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், முதல்வராக பதவியேற்ற இபிஎஸ், அதன் பிறகு, அதிமுகவின் ஒற்றை தலைமையானார். ஆனால், தேர்தலில் அவரது தலைமை, இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. இந்நிலையில், 2026இல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்தத் தேர்தலையும் இபிஎஸ் தலைமையில் அதிமுக சந்திக்குமா? அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் தற்போதுவரை நாதக 8% வாக்குகள் வாங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் மாநில அந்தஸ்து பெற்ற கட்சியாக நாதக உருவெடுத்துள்ளது. பல தொகுதிகளில் அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி 3ஆவது, 4ஆவது இடங்களை அக்கட்சி பிடித்துள்ளது. குறிப்பாக பாஜக, அதிமுக கூட்டணிக்கு செல்ல வேண்டிய வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு சென்றதால் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளது.
பிரதமர் மோடி தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என சிவசேனா உத்தவ் அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 240 இடங்களுக்கும் குறைவாகவே பெறும் எனக் கூறியுள்ள அவர், எதேச்சதிகாரத்தில் ஜனநாயக விரோதமாக செயல்பட்ட மோடியை மக்கள் நிராகரித்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிராவில் INDIA கூட்டணி 29 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
பிஹாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஜேடியூ 14 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் 16 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து, இரு கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்கும் முனைப்பில் INDIA கூட்டணியினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில், பாட்னாவில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் அக்கட்சியினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 3,73,991 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி 2ஆவது இடத்தையும், பாஜக கூட்டணி வேட்பாளரான ஜான்பாண்டியன் 3வது இடத்தையும், நாம் தமிழர் கட்சி 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் களம் கண்டன. அதேபோல அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம் கட்சிக் தேர்தலை சந்தித்தன. ஆனால், எந்தக் கட்சியும் வெற்றி பெறவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இக்கட்சிகள் தோல்வியை சந்தித்துள்ளன. அதேநேரம் திமுக கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் இத்தேர்தலில் வெற்றிவாகை சூடியுள்ளன.
பாஜக ஓபிசி அணியின் துணை தலைவராக இருந்த வித்யா வீரப்பன், நாம் தமிழர் கட்சியில் இணைந்து கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டார். வீரப்பனின் மகள் என்பதால் வித்யா குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் 61,728 வாக்குகள் பெற்று 4ஆவது இடத்தை பிடித்தார் வித்யா வீரப்பன். 2.88 லட்சம் வாக்குகளுடன் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் முதலிடத்தில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.