India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனை வீழ்த்தி, திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி பெற்றுள்ளார். 2009 தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா, 2ஜி பிரச்னையால் 2014 தேர்தலில் அத்தொகுதியில் தோற்றார். அதனைத் தொடர்ந்து 2019, 2024 தேர்தகளில் வெற்றி பெற்றுள்ளார். எல்.முருகன் கடும் போட்டியளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆ.ராசா வென்றுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் தனது தாயுமான சோனியா காந்தி ரேபரேலியில் பெற்றிருந்த வாக்குகளைக் காட்டிலும் ராகுல் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். 2019இல் சோனியா 1.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார். இந்நிலையில், 2024 தேர்தலில் 6,84,261 வாக்குகளைப் பெற்ற ராகுல், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் தினேஷ் பிரதாப் சிங்கை 3,88,615 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.
பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் நிச்சயம் நிறைவேற்றும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தல் முடிவானது பிரதமர் மோடிக்கு விடுக்கப்பட்ட மிகப் பெரிய எச்சரிக்கை என்றார். தேர்தல் களத்தில் இருந்தது போலவே, தற்போதும் INDIA கூட்டணி ஒற்றுமையுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மத்திய பிரதேசம் குணா மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜோதிராதித்யா சிந்தியா வெற்றி பெற்றார். அங்கு, அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் யாத்வேந்திர ராவை விட 5,40,929 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி வாகை சூடியுள்ளார்.
ம.பி இந்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சங்கர் லால்வானி 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அங்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்சய் காந்தி கடைசி நேரத்தில் பாஜகவில் இணைந்தார். இதனால், அங்கு நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு காங்கிரஸ் தீவிர பிரசாரம் மேற்கொண்டது. இதன் காரணமாக சங்கர் லால்வானி 12,26,751 வாக்குகளும் நோட்டாவுக்கு
2,18,674 வாக்குகளும் பதிவானது.
மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவின் வாக்கு வாங்கி சரிந்துள்ளது. கடந்த தேர்தலில் 18 தொகுதிகளில் வெற்றிபெற்ற பாஜக, தற்போது 12 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. ஆளும் திரிணாமுல் காங்., கடந்த தேர்தலில் பெற்ற தொகுதிகளை விட, 7 இடங்கள் கூடுதலாக பெற்று, 29 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மோடி, அமித் ஷாவின் பிரசாரங்கள் அங்கு எடுபடவில்லை என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
பாஜக பெரும்பான்மை பெறாததால் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருந்து மோடி விலக வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடியை மையப்படுத்தியே பிரசாரத்தில் ஈடுபட்டNDA கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பில்லை எனக் கூறிய அவர், பாஜக அறுதி பெரும்பான்மை பெறாததற்கு பணவீக்கம், வேலையின்மை & சமூக பதற்றம் ஆகியவையே காரணம் என்றார்.
மக்களவைத் தேர்தலில் பாமக படுதோல்வி அடைந்துள்ளது. பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி, 9 தொகுதிகளில் மூன்றாம் இடத்தையும், தருமபுரியில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தல் முதல், பாமக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. 2009, 2019 மற்றும் 2024இல் படுதோல்வியை சந்தித்துள்ள அக்கட்சி, 2014இல் மட்டும் தருமபுரியில் வென்றது.
ஆந்திர சட்டமன்றத்தில் 2021இல் தனது குடும்பத்தினர் குறித்த விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த சந்திரபாபு நாயுடு, முதல்வராகத் தான் திரும்பி வருவேன் என சபதம் செய்தார். இதையடுத்து பாஜக, ஜனசேனா கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம், சபதத்தை அவர் வென்று காட்டியுள்ளார். ஏற்கெனவே 3 முறை ஆந்திர முதல்வராக அவர் பதவி வகித்துள்ளார்.
கடந்த முறை தென்னிந்தியாவில் 29 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்த பாஜக, இந்த முறையும் அதே அளவிலான தொகுதிகளில் வெற்றி முகம் காட்டுகிறது. தெலங்கானாவில் 8, ஆந்திராவில் 3, கேரளாவில் 1 தொகுதி என அக்கட்சி முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றிபெறாத நிலையில், கர்நாடகாவில் கடந்த தேர்தலைக் காட்டிலும் 8 தொகுதிகள் குறைந்து 17 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
Sorry, no posts matched your criteria.