India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெற்றி பெறாவிட்டாலும், நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்துள்ளதால், அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பல இடங்களில் நாம் தமிழர் கட்சி 3வது இடத்தை பிடித்திருப்பது அக்கட்சியின் வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. அதே நேரம், வெற்றி என்ற இலக்கை நோக்கி நகர, கூட்டணி என்ற யோசனையை சீமான் பரிசீலிக்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும், வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிமுகவின் வீழ்ச்சியே என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஜெயலலிதாவின் வாக்கு வங்கியை பாஜக சிறுக சிறுக அறுவடை செய்து வருவதாகவும், அதிமுகவின் பலவீனம் பாஜகவின் பலமாக மாறுவதாகவும் கூறுகின்றனர். அதிமுக மீண்டும் பலம் பெறாவிட்டால், பாஜகவின் எழுச்சியைத் தடுப்பது கடினம் என கூறப்படுகிறது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 3ஆவது முறையாக வெற்றி வாகை சூடினார். அங்கு அவரை எதிர்த்து களம் கண்ட அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய்யை விட 1.39 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்து வந்த மோடி, இடையே 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் ரஜோரி தொகுதியில் பிடிபி கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி போட்டியிட்டார். அங்கு அவர், தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளர் மியான் அல்டாப் அகமதிடம் தோல்வியடைந்தார். அத்தொகுதியில் அல்டாப் அகமது 5.14 லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மெஹபூபா முப்தி கட்சி போட்டியிட்ட 4 மக்களவைத் தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக Xஇல் பதிவிட்டுள்ள அவர், ஆந்திராவில் முன்னேற்றம், செழிப்பை சந்திரபாபு நாயுடு ஏற்படுத்த வேண்டும் எனக் பதிவிட்டுள்ளார். மேலும், ஆந்திர மக்களின் கனவையும், நம்பிக்கைகளையும் சந்திரபாபு நாயுடு நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக 35க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற உள்ளது. கடந்த 2019 தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் 38 இடங்களில் வென்றது. 75 வருட திமுக அரசியல் வரலாற்றில் இது புதிய சாதனையாக பதிவாக உள்ளது. ஆனால், அதிமுக 35 தொகுதிகளுக்கு மேல் தொடர்ந்து 3 முறை வென்றுள்ளது. 1984, 1989 மற்றும் 1991 தேர்தல்களில் அதிமுக கூட்டணி முறையே, 37, 38 மற்றும் 39 இடங்களில் வென்றுள்ளது.
திருவனந்தபுரம் தொகுதியில் கடும் போட்டிக்கு பிறகு காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் 14,926 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகருக்கும், அவருக்கும் இடையே காலை முதல் கடும் போட்டி நிலவியது. முன்னிலை நிலவரங்கள் அவ்வபோது மாறி வந்தன. இருப்பினும், இறுதியில் சசி தரூர் வெற்றி வாகை சூடினார்.
மக்களவைத் தேர்தலில் இதுவரை நடந்து முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையின்படி அதிமுக ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை. இந்த மோசமான வீழ்ச்சிக்கு டிடிவி, ஓபிஎஸ், சசிகலா நீக்கம் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மூன்று பேரும் நீக்கப்பட்டதால், அவர்களைச் சார்ந்த சமூக வாக்குகள் அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. அதேபோல், கொங்கு மண்டலத்தில் உள்கட்சி பிரச்னையால் வெற்றி பெறமுடியவில்லை.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் வெற்றி பெற்றுள்ளார். விளவங்கோடு MLA விஜயதாரணி, சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இதனால் அந்தத் தொகுதி காலியான நிலையில், மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில், பாஜக – நந்தினி, நாம் தமிழர் – ஜெமினி, அதிமுக – ராணி உள்ளிட்டோர் போட்டியிட்ட நிலையில், தாரகை கத்பட் வெற்றி பெற்றுள்ளார்.
இபிஎஸ் தலைமையின் கீழ் அதிமுக வந்ததில் இருந்து ஒரு தேர்தலில் கூட வெற்றிபெறவில்லை. இது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால், அதிமுக மேலும் பலவீனமடையும். எனவே, இந்த தேர்தலில் இருந்து அவர் பாடம் கற்றுக்கொண்டு, பிரிந்து சென்றவர்களை இணைக்கும் பணிகளில் இறங்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.