India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளித்திருக்கும் பரிசாகவே இந்த வெற்றி கருதப்படுகிறது. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட திட்டங்கள் சாமானிய மக்களை வெகுவாகச் சென்றடைந்துள்ளது. அதன் காரணமாகவே 20 ஆண்டுகளுக்கு (2004) பிறகு, 39 தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றியைக் கொடுத்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்தத் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை மற்றும் நியாய யாத்திரைகளை மேற்கொண்டார். அப்போது மக்கள் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் அதன் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதை முன்னிறுத்தியே காங்கிரஸ் பிரசாரம் செய்தது. தற்போது அக்கட்சி அதிக இடங்களில் வென்றிருப்பது, ராகுலின் யாத்திரைகளுக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
மோடியை முன்னிறுத்தி கடந்த 2 தேர்தல்களில் போட்டியிட்டு பாஜக வென்றது. இந்தத் தேர்தலிலும் மோடியை முன்னிறுத்தியே பாஜக களமிறங்கியது. இதனால் 400க்கும் மேல் வெல்வோம் என மோடி துணிச்சலாக கூறி வந்தார். இதைகேட்ட மக்களும், உண்மையாக இருக்குமோ என நினைத்தனர். ஆனால், 293 தொகுதிகளில் மட்டுமே பாஜக கூட்டணி முன்னிலை வகிப்பதால், மோடி மீதான இமேஜ் சரிந்து விட்டதா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்திய பங்குச்சந்தைகள் தேர்தல் முடிவுகள் காரணமாக இன்று கடுமையான சரிவை சந்தித்தன. இதனால், சுமார் ₹36 லட்சம் கோடி மதிப்பினை இந்திய பங்குச்சந்தைகள் இழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. வர்த்தக நேர முடிவில் தேசிய பங்குச்சந்தைகள் நிஃப்டி 1,379 புள்ளிகளை இழந்து 21,884 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. சென்செக்ஸ் 4,389 புள்ளிகளை இழந்து 72,079க்கு வர்த்தகத்தை நிறைவடைந்தது.
8 வடகிழக்கு மாநிலங்களில் சிக்கிம், மிஸோரம், மேகாலயா ஆகிய 3 மாநிலங்களில் அம்மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன. சிக்கிமில் உள்ள ஒரு தொகுதியில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும், மிசோரமில் உள்ள ஒரு தொகுதியில் ஜோரம் மக்கள் இயக்கமும் முன்னிலை வகித்து வருகின்றன. மேகாலயாவில் உள்ள இரு தொகுதிகளில் ஒன்றில் மக்கள் குரல் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
பிஹார் முன்னாள் முதல்வர் நிதிஷ்குமாருக்கு துணை பிரதமர் பதவியை வழங்க INDIA கூட்டணி முன் வந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவரது தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 14 எம்பிக்களை வென்றுள்ளது. ஆகையால், அவரையும் சந்திரபாபு நாயுடுவையும் கூட்டணிக்குள் இழுக்க INDIA திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்பிக்கள் உள்ளனர்.
காங்கிரஸ் கோட்டையாக கருதப்பட்ட உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி முதல்முறையாக போட்டியிட்டார். அத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது முதல் ராகுல் காந்தி தொடர்ந்து முன்னிலை வகித்தார். முடிவில் 6.60 லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று ராகுல் காந்தி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங் தோல்வியடைந்தார்.
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் 3,91,636 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனால், மதுரை எம்.பியாக அவர் தொடர்ந்து 2ஆவது முறையாக பதவி ஏற்கவுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் 2,01,682 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சரவணன் 1,84,971 வாக்குகளும் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளனர்.
அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காந்தி குடும்பத்தின் விசுவாசியான காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் ஷர்மா 50,758 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் ராகுலை வீழ்த்தி ஸ்மிருதி இரானி வெற்றி வாகை சூடியிருந்தார். இந்நிலையில், தற்போது ஷர்மாவின் வெற்றியின் மூலம் அமேதியில் இழந்த செல்வாக்கை காங்கிரஸ் மீட்டுள்ளது.
INDIA கூட்டணி சார்பில் பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமாருடன், மூத்த தலைவர் சரத் பவார் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது துணை பிரதமர் பதவியை தர முன் வந்ததாகவும் பரவலாக தகவல் வெளி வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தாம் நிதிஷ் குமார் உள்ளிட்ட யாருடனும் இதுவரை பேசவில்லை என்று பதிலளித்தார்.
Sorry, no posts matched your criteria.