India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கர்நாடகாவில் பாஜக, மஜத ஆகியவை கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதில் காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக, மஜத கூட்டணி 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. அவர்களில் மஜத வேட்பாளர் பிரஜ்வாலும் ஒருவர்.
பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 301 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. INDIA கூட்டணி 137 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் முன்னிலையில், இருந்து வந்த பாஜக தற்போது 300க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை பெற்றுள்ளார். தபால் வாக்குகளில் எப்போதும், திமுக ஆதிக்கம் செலுத்தும். ஆனால், நெல்லையில், முதல்முறையாக பாஜகவின் கை ஓங்கியுள்ளது. 23 தொகுதிகளில் பாஜக போட்டியிட்ட நிலையில் எல்.முருகன், தமிழிசை, பின்னடைவை சந்தித்துள்ளனர். ஆனால், நயினார் நாகேந்திரன் மட்டும் முன்னிலையில் இருக்கிறார்.
ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சற்றுமுன் கிடைத்த தகவலின் படி, ஆளும் கட்சியான YSR காங்., மற்றும் பாஜக ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை. இதுவரை எண்ணப்பட்ட தபால் வாக்குகளில், தெலுங்கு தேசம் 4 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜன சேனா 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 27 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கூட்டணி 18 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. விழுப்புரம் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில், விசிக வேட்பாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்து வருகிறார். பாமக வேட்பாளர் முரளி சங்கர் 2ஆவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
மதுரையில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன், அதிமுக வேட்பாளர் சரவணன் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
பஞ்சாப்பில் மொத்தமுள்ள 13 மக்களவைத் தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணி 2 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 13 தொகுதியிலும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
கரூர் மக்களவைத் தொகுதி தபால் வாக்குகள் எண்ணும் பணி உறுதிமொழியுடன் துவங்கியது. மொத்தம் பதிவான தபால் வாக்குகள் 7708, 8 மேஜைகளில், ஒரு சுற்றுக்கு 500 வாக்குகள் வீதத்தில் எண்ணுவதற்கான பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்., வேட்பாளர் ஜோதிமணி முன்னிலையில் இருக்கிறார்.
ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான சந்திரபாபு நாயுடு 1,549 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்க உள்ளது.
Sorry, no posts matched your criteria.