India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 14,896 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். முன்னிலையில் இருந்த பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், 12,956 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் 1996 முதல் திமுகவின் ஆதிக்கம் தான். முரசொலி மாறன் 1996, 1998, 2001 என தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்ற தொகுதி இது. முரசொலி மாறன் மறைவுக்குப் பின்னர் திமுக சார்பில் தயாநிதி மாறன் 2006, 2009, 2019 தேர்தல்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். 2014ஆம் ஆண்டு மட்டுமே இங்கு அதிமுக வெற்றி பெற்றது. மீண்டும் 2019இல் தயாநிதி வெற்றிபெற்றார். இந்த முறை எப்படி?
ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் 12 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சற்றுமுன் கிடைத்த தகவலின் படி, ஆளும் கட்சியான YSR காங்., 3 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜன சேனா 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. பாஜக ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை. தேர்தல் முடிவுகளை WAY2NEWS செயலியில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ்நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சையில், திமுக வேட்பாளர் முரசொலி முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் முருகானந்தம் பின்னடைவை சந்தித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில், பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 53 தொகுதிகளிலும், காங்கிரஸ் + சமாஜ்வாடி தலைமையிலான INDIA கூட்டணி 24 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன. பகுஜன் சமாஜ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
ஈரோடு தொகுதியில் நடைபெற்று வரும் தபால் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் முன்னிலை வகிக்கிறார். ஈரோடு மக்களவைத் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. திமுக சார்பில் பிரகாஷ், தமிழ் மாநில காங்கிரஸ் (பாஜக கூட்டணி) சார்பில் விஜயகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஒடிஷா சட்டசபை தேர்தலில் பாஜக 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சற்றுமுன் கிடைத்த தகவலின் படி, ஆளும் கட்சியான ஜனதா தளம் ஒரு இடத்திலும், காங்., ஒரு தொகுதியிலும், பாஜக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.
சிவகங்கையில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். மற்ற கட்சி வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில், பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன. பகுஜன் சமாஜ் கட்சி, கோண்ட்வானா கணதந்திர கட்சி ஆகிய இரு கட்சிகளும் அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. . INDIA கூட்டணி 4 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
Sorry, no posts matched your criteria.