News June 1, 2024

மீண்டும் படம் இயக்கும் விஜய் ஆதிராஜ்

image

சின்னத்திரையில் பிரபலமாக இருப்பவர் விஜய் ஆதிராஜ். இவர் ஆர்யா தம்பி சத்யா நடிப்பில் 2013இல் வெளியான ‘புத்தகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் சரியாகப் போகாததால் மீண்டும் சின்னத்திரைக்கே சென்ற அவர் தற்போது 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சினிமா இயக்குகிறார். ‘நொடிக்கு நொடி’ என பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் அஷ்வின் குமார் நாயகனாக நடிக்கிறார்.

News June 1, 2024

ஏசியில் இருந்து சூடான காற்று வருகிறதா?

image

வெயில் காலங்களில் நாம் அதிகமாக ஏசியை பயன்படுத்தும்போது குறிப்பிட்ட நாள்களுக்குப் பின் அதிலிருந்து சூடான காற்று வெளியே வரலாம். அதைத் தவிர்க்க சீரான இடைவெளியில் ஏசியை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். ஏசியின் வெளிப்புற பகுதியில் இருக்கும் ஃபேனில் இலையோ, தூசிகளோ இருந்தால், அவை கூலிங் கண்டன்சரை அடைத்து குளிர்ந்த காற்று வெளியே வருவது தடுக்கப்பட்டு, சூடான காற்று வெளியேற்றப்படும்.

News June 1, 2024

T20 WC: அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

image

T20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் (63) தன வசம் வைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து ரோஹித் ஷர்மா (35), பட்டர் (33), யுவராஜ் (33), வார்னர் (31), ஷேன் வாட்சன்(31), டி வில்லியர்ஸ்(30), விராட் கோலி(28) ஆகியோர் உள்ளனர். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் கெயிலின் சாதனையை முறியடிக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

News June 1, 2024

மூன்றாம் நாளாக பிரதமர் மோடி தியானம்

image

விவேகானந்தர் பாறையில் நேற்று முன்தினம் தனது தியானத்தை தொடங்கிய பிரதமர் மோடி, இரண்டு நாள் தியானத்தை முடித்துள்ளார். பிரதமர் காவி உடை அணிந்து, கையில் ருத்ராட்ச மாலையும் வேத மந்திரங்கள் கூறியபடி தியானம் செய்தார். இன்று மூன்றாம் நாள் தியானத்தில் ஈடுபடும் அவர், பிற்பகலில் தியானத்தை முடித்துவிட்டு திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர் திருவனந்தபுரம் வழியாக டெல்லி திரும்புகிறார்.

News June 1, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜூன் – 1 ▶வைகாசி – 19 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 07:00 AM – 08:30 AM வரை, 4:30 PM – 5:30 PM வரை ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM வரை, 9:30 PM – 10:30 PM வரை ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM வரை ▶எமகண்டம்: 01:30 PM – 03:00 PM வரை ▶குளிகை: 6:00 AM – 7:30 AM வரை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶ திதி: தசமி ▶ பிறை: தேய்பிறை

News June 1, 2024

இந்தியன் -2 பாடல் டிராக் லிஸ்ட் வெளியிட்ட அனிருத்

image

ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள ‘இந்தியன்-2’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது, அதற்கு முன்பாக இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களின் டிராக் லிஸ்ட்டை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். அதில், பாரா, காலண்டர் சாங், நீளோற்பம், ஜகாஜகா, கம்பேக் இந்தியன், கதரல்ஸ் உள்ளிட்ட 6 பாடல்கள் அடங்கியுள்ளன.

News June 1, 2024

இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்தியா

image

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய பயிற்சிப் போட்டியில் விராட் கோலி பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. பயிற்சிப் போட்டிகள் முடிந்தபின் நாளை முதல் லீக் போட்டிகள் தொடங்குகிறது.

News June 1, 2024

தோல்வியை ஒப்புக்கொண்டு ஓடும் காங்கிரஸ்

image

எதிர்க்கட்சிகள் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளதாக அமித்ஷா கூறியுள்ளார். இதன் காரணமாகவே காங்., தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கலந்துகொள்ளாமல் ஓடுவதாக அவர் விமர்சித்துள்ளார். இது குறித்து X தளத்தில், காங்., தோல்வியை சந்திக்க உள்ளது அவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்துள்ளது. இதனால்தான் மக்களையும், ஊடகத்தையும் சந்திக்க தைரியமின்றி அவர்கள் வெளிநாடு செல்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.

News June 1, 2024

தினம் ஒரு பொன்மொழி!

image

* விரக்தி என்ற மலையிலிருந்து நம்பிக்கை என்ற கல்லை நாம் வெட்டியெடுக்க முடியும்.
* ஒரு எதிரியை நண்பனாக மாற்றக்கூடிய ஒரே சக்தி அன்பு மட்டுமே.
* நாங்கள் நினைவில் வைத்திருப்பது எங்கள் எதிரிகளின் வார்த்தைகளை அல்ல, எங்கள் நண்பர்களின் மெளனத்தை தான்.
* நாம் வரையறுக்கப்பட்ட ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால், நம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடக்கூடாது. – மார்ட்டின் லூதர் கிங்

News June 1, 2024

விரைவில் ரேவண்ணாவின் மனைவி கைது?

image

பெண் கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அவரது மனைவி பவானிக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அவர் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து விரைவில் அவரும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!