India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அயர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி போட்டியில், இலங்கை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 163/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, மேத்யூஸ்-32 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி, 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. அபாரமாக பந்துவீசிய தசுன் ஷனகா, 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர்களுக்கு ₹25,000 அபராதம் விதிக்கப்படும் என்னும் விதிமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. சிறார்கள் வாகனம் ஓட்டினால், அவர்கள் ஓட்டிய வாகனத்தின் RC உடனடியாக ரத்து செய்யப்படுவதுடன், அவர்களுக்கு 25 வயது ஆகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது. சிறார்கள் வாகனம் ஓட்டுவதாலேயே அதிகமாக விபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி மக்களவைத் தொகுதியிலும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. அந்தத் தொகுதியில் 2014ஆம் ஆண்டு, 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு மோடி வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக வாரணாசி தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் போட்டியிடுகிறார். மோடியை எதிர்த்து, அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுகிறார்.
மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 3ஆம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக நடிகை அபிராமி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு திரும்பியுள்ளதாகவும், இந்தாண்டு கமல் & ரஜினி இருவருடனும் நடிப்பதாகவும் கூறினார். மேலும், இந்தாண்டு தனக்கு மிகவும் சிறப்புமிக்க ஆண்டாக அமையும் எனக் குறிப்பிட்டார்.
மக்களவைத் தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு 57 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, நடிகை கங்கனா ரனாவத், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், லாலு மகள் மிசா பாரதி, மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் களம் காணுகின்றனர். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு மேல் வெளியாகும் EXIT POLLS கருத்துக்கணிப்பு முடிவுகளை உடனுக்குடன் அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.
நியூயார்க்கில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்காக, விராட் கோலி இந்திய அணியுடன் இணைந்துள்ளார். சற்று தாமதமாக அணியுடன் இணைந்துள்ள அவர், வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்பாரா? என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. பெரும்பாலான வீரர்கள் ஏற்கெனவே பயிற்சியைத் தொடங்கியதால், இப்போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. வங்கதேசத்தை வீழ்த்துமா இந்திய அணி?
வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹70.50 குறைந்துள்ளது. சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை ₹1,840.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே 1ம் தேதி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ₹1,911க்கு விற்பனையானது. வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ₹818.50க்கு விற்பனையாகிறது. சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன.
நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 8 மாநிலங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும் மாலை 6 மணிக்குப் பின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகும். ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போதைப் பொருள்கள், துப்பாக்கிகள் ஆகியவை ட்ரோன்கள் மூலமாக கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தது முதல் தற்போது வரை சுமார் 60 ட்ரோன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதில் பெரும்பாலான ட்ரோன்கள் பஞ்சாப் எல்லையிலும், மற்றவை ராஜஸ்தான், குஜராத் எல்லையிலும் கைப்பற்றப்பட்டுள்ளன.
* காவலர்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு பேருந்துகளில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
* உயர் கல்வியில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது – முதல்வர் ஸ்டாலின்
* ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெப்பம் காரணமாக ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு.
* ஆபாச வீடியோ வழக்கில் எம்பி பிரஜ்வால் ரேவண்ணா நேற்று நள்ளிரவில் கைது
Sorry, no posts matched your criteria.