News June 1, 2024

ஜனநாயகத்தை மேலும் துடிப்பானதாக மாற்றுவோம்

image

7ஆவது கட்டத் தேர்தலையொட்டி, எக்ஸ் பக்கத்தில் மோடி பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், 7ஆவது கட்டத் தேர்தலில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும், இளைஞர்களும், பெண் வாக்காளர்களுக்கும் தங்களது வாக்கை சாதனை அளவில் பதிவு செய்வார்கள் என நம்புவதாகவும் கூறியுள்ளார். தேர்தலில் பங்கேற்று ஜனநாயகத்தை மேலும் துடிப்புடையதாக மாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News June 1, 2024

டி20 WC: இந்தியா-பாகிஸ்தான் மோதலில் யார் அதிகம் வெற்றி?

image

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் வருகிற 9ம் தேதி மோதவுள்ளன. 2 அணிகளும் டி20 உலகக் கோப்பையில் இதுவரை 8 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 6, பாகிஸ்தான் 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2 அணிகளும் பன்னிரெண்டு டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 8, பாகிஸ்தான் 3 போட்டிகளில் வென்றுள்ளன. ஒரு போட்டி டிரா ஆகியுள்ளது.

News June 1, 2024

திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

image

திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, காலை 11 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில், வாக்கு எண்ணிக்கையின்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிகிறது.

News June 1, 2024

அதிபர் பலியான ஹெலிகாப்டர் விபத்தில் சதி இல்லை: ஈரான்

image

ஈரான் அதிபர் ரைசி, அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் உசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்டோர் கடந்த மாதம் 19ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகினர். இந்த விபத்தின் பின்னணியில் இஸ்ரேல், அமெரிக்க சதி இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், ஹெலிகாப்டர் சிதைவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த ஈரான், விபத்திற்கு நாசவேலையோ, குண்டுவெடிப்போ காரணமில்லை எனத் தெரிவித்துள்ளது.

News June 1, 2024

மாவட்டத்திற்கு 20 மக்கள் மருந்தகம் திறக்க உத்தரவு

image

கூட்டுறவு சங்கங்கள் சார்பில், சிந்தாமணி, காமதேனு உள்ளிட்ட வணிக பெயர்களில், 380 மருந்தகங்கள் செயல்படுகின்றன. அவற்றில், 20% வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்கப்படுகின்றன. மத்திய அரசு ‘ஜன் அவ்ஷாதி’ என்ற பிரதமரின் மக்கள் மருந்தகங்களைத் தொடங்கி வருகிறது. இந்த மருந்தகங்களை தமிழகத்தில் மாவட்டத்திற்கு தலா 20 தொடங்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான இட வசதிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

News June 1, 2024

இன்று மாலை 6.30 மணிக்கு கருத்து கணிப்புகள்

image

மக்களவையில் உள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் 7ஆவது கட்டத் தேர்தல் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, கருத்து கணிப்பு வெளியிட EC விதித்த தடை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. மேலும் மாலை 6.30 மணி முதல் கருத்து கணிப்பு வெளியிட EC அனுமதி அளித்துள்ளது. இந்த கருத்து கணிப்புகளை உடனுக்குடன் Way2newstamil Appஇல் படித்து தெரிந்து கொள்ளலாம்.

News June 1, 2024

விஜய், அஜித்தை இயக்குவது இலக்கு அல்ல

image

ரஜினி விரும்பினால், மீண்டும் அவருடன் இணைவேன் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ரஜினியிடம் நிறைய கதை சொன்னதாகவும், ஆனால், அவை சரியாக அமையவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களை இயக்குவது இயக்குநர்களுக்கு இலக்காக இருக்க கூடாது என்றும், தான் அவற்றை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார்.

News June 1, 2024

55 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி

image

ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி போட்டியில், 55 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆப்கன் அணி, 20 ஓவர்கள் முடிவில் 178/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, குல்பாதின்-69 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி, 123/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இப்போட்டியில், ஆப்கன் வீரர்கள் 9 பேர் பந்துவீசியுள்ளனர்.

News June 1, 2024

ஆதாரில் இலவசமாக மாற்றம் செய்ய ஜூன் 14 வரை கெடு

image

ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை இலவசமாக மாற்றம் செய்துகொள்ள அனுமதிக்கும் இறுதி காலக்கெடு ஜூன் 14ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதில், ஆதாரில் உள்ள புகைப்படம், பெயர், முகவரி, மொபைல் எண், பிறந்த தேதி, உறவு நிலை, கைரேகை, கண் கருவிழி உள்ளிட்ட தகவல்களை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம். ஜூன் 14க்கு பிறகு இந்த மாற்றங்களை செய்ய ஒவ்வொரு திருத்தத்திற்கும் ₹50 வீதம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 1, 2024

வில்லனாக நடிக்க ₹200 கோடி சம்பளம்

image

ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிப்பில் ₹835 கோடி பட்ஜெட்டில் ராமாயண் படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் கேஜிஎப் நாயகன் யாஷ், ராவணன் கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்கிறார். இதற்கு அவர் தயாரிப்பாளர்களுடன் பார்ட்னர்ஷிப் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அதன்படி ₹200 கோடி பெறுவார் எனவும் தெரிகிறது. இது பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான ஷாருக் கான், சல்மான் கானின் சம்பளத்தை விட அதிகம் என்று கூறப்படுகிறது.

error: Content is protected !!