News June 1, 2024

‘இந்தியன் 2’ பாடல்கள் 3 மணிக்கு வெளியீடு

image

கமல் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு நேரு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பாகவே பாடல்கள் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. அதாவது இன்று மதியம் 3 மணிக்கே பாடல்கள் அனைத்தும் வெளியாகும் என லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

News June 1, 2024

ரயிலில் எவற்றை கொண்டு செல்ல தடை தெரியுமா?

image

ரயில் பயணிகள் பாதுகாப்பு கருதி ரசாயன பொருள், பட்டாசு, கேஸ் சிலிண்டர், ஆசிட், எண்ணெய், கிரீஸ், நெய், தோள் உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல தடை உள்ளது. இவை தீப்பிடித்தாலோ, உடைந்தாலோ உயிர்ச் சேதம் ஏற்படும் என்பதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி அவற்றை ரயில் பயணத்தில் எடுத்து செல்வோருக்கு ரயில்வே சட்டம் 164 பிரிவின்கீழ் ரூ.1,000 அபராதம், 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

News June 1, 2024

2019 தேர்தல்: கருத்துக் கணிப்புகள் VS முடிவுகள்

image

மக்களவைத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாக உள்ளன. எந்தக் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதை அறிய மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2019 EXITPOLLஇல் INDIA TODAY, AXIS MY INDIA- NDAக்கு 339-365, UPAக்கு 77-108 இடங்களும், INDIA NEWS- NDAக்கு 287, UPAக்கு 128 இடங்களும் கிடைக்கும் என கணித்தன. தேர்தல் முடிவுகளில் NDA 353 இடங்களையும் UPA 91 இடங்களையும் பெற்றன.

News June 1, 2024

இளையராஜாவுக்கு ரசிகரின் வித்தியாசமான அன்பளிப்பு

image

இசைஞானி இளையராஜா, வரும் ஜூன் 3ஆம் தேதி தனது 81ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, ரசிகர் ஒருவர் அவருக்கு பரிசளிக்க வித்தியாசமான ஓவியத்தை வரைந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த அன்புச்செல்வன் என்பவர், இளையராஜாவின் முதல் படமான ‘அன்னக்கிளி’ முதல் தற்போது வரை இசையமைத்த அனைத்து படங்களின் பெயர்களை கொண்டு இளையராஜாவின் முகத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார்.

News June 1, 2024

இதயமே இல்லாத உயிரினங்கள்

image

கடலில் வாழும் சில உயிரினங்களுக்கு, இதயம் இல்லை என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஆம், ஜெல்லி மீன், ஸ்டார் மீன், கடற்பாசி, பவளம், கடல் வெள்ளரிக்காய், தட்டைப் புழுக்கள் போன்றவற்றிற்கு இதயம் கிடையாது. அதேபோல், ‘ஆக்டோபஸ்’ எனப்படும் கணவாய் மீனுக்கு 3 இதயங்களும், ‘ஹாக்’ எனப்படும் கடலுக்கு அடியில் வாழும் மீனுக்கு 4 இதயங்களும், திமிங்கிலம் சுமார் 400 கிராம் எடை கொண்ட இதயத்தையும் கொண்டிருக்கின்றன.

News June 1, 2024

கலைஞர் இருக்கும் வரை எவரும் வாலாட்ட முடியவில்லை

image

கலைஞர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியமே இல்லை என நடிகர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த அவர், கலைஞர் இருக்கும் வரை எவரும் வாலாட்ட முடியவில்லை என்றும், அவர் கொள்கையை வைத்து அரசியல் செய்தவர் என்றும் கூறினார். மேலும், கலைஞர் இருந்தார் என்ற செய்தியைவிட அவர் ஏன் கலைஞர் ஆனார் என்ற செய்திதான் முக்கியம் எனக் குறிப்பிட்டார்.

News June 1, 2024

தொடர் மழையால் பலாப்பழம் விலை சரிவு

image

இந்த ஆண்டுக்கான பலாப்பழ சீசன் கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கியது. அப்போது, ஒரு பலாப்பழம் ₹150இல் இருந்து தொடங்கி ₹500 வரை விற்பனையானது. இதனிடையே, கோடையில் பெய்த தொடர் கனமழை காரணமாக பலாப்பழங்கள் சீக்கிரம் அழுகி விடுவதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால், தற்போது ₹20-30 வரை விற்பனையாவதாகவும், சில நேரங்களில் ₹10க்கு கொடுத்தால் கூட வாங்குவதற்கு யாரும் முன்வருவதில்லை என்கின்றனர்.

News June 1, 2024

₹130 கோடிக்கு புஷ்பா-2 திரைப்பட சேட்டிலைட் உரிமை

image

அல்லு அர்ஜுன், ரஷ்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான புஷ்பா-1 படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து ₹440 கோடி பட்ஜெட்டில் புஷ்பா-2 திரைப்படம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. அந்த படம் திரையரங்கில் வெளியாகும் முன்னரே ₹250 கோடிக்கு ஓடிடி உரிமை போனதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ₹130 கோடிக்கு தொலைக்காட்சி ஒன்று சேட்டிலைட் உரிமம் பெற்றிருப்பதாக புதுத் தகவல் வெளியாகியுள்ளது.

News June 1, 2024

சுங்கச்சாவடி கட்டண உயர்வும், பின்னணியும்

image

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி கட்டணம் உயர்த்தப்பட இருந்தது. ஆனால், மக்களவைத் தேர்தல் காரணமாக அக்கட்டண உயர்வு 2 மாதங்களுக்கு தேர்தல் ஆணைய ஒப்புதலுடன் நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தல் இன்று மாலையுடன் முடிவடைவதால் நாளை நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

News June 1, 2024

11 மணி நிலவரப்படி 26.30% வாக்குகள் பதிவு

image

மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 57 தொகுதிகளில் காலை தொடங்கி நடந்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 26.30% வாக்குகள் பதிவாகியுள்ளன. பிஹார்- 24.25%, சண்டிகர்- 25.03%, இமாச்சலப் பிரதேசம்- 31.92%, ஜார்கண்ட்- 29.55%, ஒடிஷா- 22.64%, பஞ்சாப்- 23.91%, உத்தரப் பிரதேசம்- 28.02%, மேற்குவங்கம்- 28.10% வாக்குகளும், ஒடிஷா சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவில் 22.97% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

error: Content is protected !!