India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
INDIA TODAY செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, பஞ்சாப்பில் உள்ள 13 தொகுதிகளில்,
பாஜக : 2 – 4 தொகுதிகள்
ஆம் ஆத்மி : 0 – 2 தொகுதிகள்
காங்கிரஸ் : 7 – 9 தொகுதிகள்
SAD : 2 – 3 தொகுதிகள்
மற்றவை : 0 – 1 தொகுதி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் கே.சி.ஆரின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி அம்மாநிலத்தில் 3 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாக REPUBLIC வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 17 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் நான்கு முனை போட்டி (INDIA கூட்டணி, BRS, AIMIM, NDA கூட்டணி) நிலவுகிறது. INDIA கூட்டணி 5-8, NDA கூட்டணி 6-9, AIMIM -1 இடத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் பாஜக தலைமையிலான தேஜ கூட்டணி 5 முதல் 7 இடங்களில் வெல்லும் என்று நியூஸ் 18 செய்தி நிறுவனம் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி, அதிகபட்சம் 2 இடங்களை மட்டுமே வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NDA: 5 – 7
INDIA: 0 – 2
தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் மற்றும் சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆகிய இரண்டு சுங்கச்சாவடிகளிலும் இன்றிரவு முதல் கட்டணம் உயரவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்டிருந்த கட்டண உயர்வு, இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது. குறைந்த பட்சம் 5 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 20 ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 371 இடங்களை வெல்லும் என்று இந்தியா நியூஸ் நிறுவனம் கணித்துள்ளது. அவர்களும் D-Dynamics நிறுவனமும் சேர்ந்து நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி 125 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று தெரிய வந்துள்ளது. மற்ற கட்சிகள் 47 இடங்களை வெல்லக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TIMES NOW செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, அசாமில் உள்ள 14 தொகுதிகளில்,
பாஜக : 12 தொகுதிகள்
காங்கிரஸ் : 1 தொகுதி
AIUDF : 1 தொகுதியில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
TIMES NOW செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில்,
பாஜக : 23 தொகுதிகள்
காங்கிரஸ் : 5 தொகுதிகள் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி 16-18 இடங்களில் வெற்றி பெறும் என REPUBLIC வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 20 தொகுதிகளில் இடதுசாரிகளின் LDF கூட்டணி (சிபிஐ., சிபிஎம்., சி.பி.ஐ.எம்.எல், கேரள காங்கிரஸ், ரெவல்யூஷனரி சோசியலிஸ்ட் கட்சி) 2-7 இடங்களையும், பாஜகவின் NDA கூட்டணி 0-1 இடத்தையும் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
INDIA TODAY செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, அரியானா உள்ள 10 தொகுதிகளில்,
பாஜக : 6 – 8 தொகுதிகள்
காங்கிரஸ் : 2 – 4 தொகுதிகள் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
TIMES NOW செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, ஒடிஷாவில் உள்ள 21 தொகுதிகளில்,
பாஜக : 13 தொகுதிகள்
காங்கிரஸ் : 0
பிஜேடி : 8 தொகுதிகள் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.