News June 1, 2024

மோடி பிரதமரானால் மொட்டை அடித்துக் கொள்வேன்

image

கருத்துக் கணிப்புகள் அனைத்தையும் பொய்யாக்கும் வகையில் I.N.D.I.A கூட்டணி மெகா வெற்றி பெறும் என்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சோம்நாத் பாரதி தெரிவித்துள்ளார். மீறி, மோடி மீண்டும் பிரதமரானால் “நான் மொட்டையடித்துக் கொள்கிறேன்” என்றும் அவர் சவால் விட்டுள்ளார். அனைத்து செய்தி நிறுவனங்களும் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்திருக்கும் நிலையில் சோம்நாத் பாரதி இவ்வாறு பேசியிருக்கிறார்.

News June 1, 2024

முதல் ஆளாக சென்று கடைசியாக வர வேண்டும்

image

திமுக முகவர்கள் வாக்கு எண்ணிக்கையின் போது கவனமாக செயல்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு முதல் ஆளாக சென்று, கடைசி ஆளாக வெளியேற வேண்டும் என்ற அவர், தபால் வாக்குகளை எண்ணும் போது கவனத்தோடு இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். EVM இயந்திர வாக்குகளும், 17C படிவத்தில் உள்ள பதிவான வாக்குகளுடன் ஒன்றாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

News June 1, 2024

TIMES NOW: உ.பி.யில் பாஜக 69 தொகுதிகள் வெல்லும்

image

TIMES NOW செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, உத்தர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில்,

பாஜக : 69 தொகுதிகள்
சமாஜ்வாதி கட்சி : 11 தொகுதிகள் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

C VOTER: குஜராத்தில் ஹாட்ரிக் அடிக்கும் பாஜக

image

குஜராத்தில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 25-26 இடங்களை பெறும் என சி வோட்டர் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. INDIA கூட்டணி 0-1 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 2014 மற்றும் 2019இல் பாஜக 26 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

News June 1, 2024

TIMES NOW: பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும்

image

TIMES NOW செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, மொத்தமுள்ள 543 தொகுதிகளில்,

பாஜக கூட்டணி : 358 தொகுதிகள்
காங்கிரஸ் கூட்டணி : 152 தொகுதிகள்
மற்றவை : 33 தொகுதிகள் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என TIMES NOW கணித்துள்ளது.

News June 1, 2024

C VOTER: மீண்டும் பாஜக ஆட்சி உறுதி

image

பாஜக தலைமையிலான NDA கூட்டணி 353-383 இடங்களை பெறும் என சி வோட்டர் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. INDIA கூட்டணி 152-182 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மற்ற கட்சிகள் 4 முதல் 12 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

News June 1, 2024

‘பகவதி’ ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு

image

நடிகர் விஜய் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த பகவதி திரைப்படம் ஜூன் 21ஆம் தேதி ரீ-ரிலீஸாக உள்ளது. இதனை அப்படத்தின் இயக்குநர் ஏ. வெங்கடேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய இந்தப் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் விரைவில் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, கில்லி படம் ரீ-ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

News June 1, 2024

NEWS 18: பிஹாரில் தொகுதிகளை அள்ளும் பாஜக

image

மக்களவைத் தேர்தலில் பிஹாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 31 முதல் 34 தொகுதிகளை வெல்லும் என்று நியூஸ் 18 நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி 6 முதல் 9 தொகுதிகளை மட்டுமே வெல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News June 1, 2024

இரவில் மழை கொட்டும்

image

தமிழகத்தில் இரவு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, காஞ்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தஞ்சை, கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, திண்டுக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

C VOTER: மே.வங்கத்தில் 27 இடங்களில் பாஜக வெற்றி

image

மே.வங்கத்தில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 23-27 இடங்களை பெறும் என சி வோட்டர் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 13-17 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 1-3 இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!