News June 1, 2024

அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர்கள்

image

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக முறை ஆட்டநாயகன் (POTM) விருதைப் பெற்ற வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். கோலி இதுவரை 7 முறை ஆட்டநாயகன் விருதைப் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து, மஹேல ஜெயவர்த்தனே (5), கிறிஸ் கெய்ல் (5), ஷேன் வாட்சன் (5), ஷாகித் அப்ரிடி (4), திலகரத்னே தில்ஷன் (4), டி வில்லியர்ஸ் (4), ஷகிப் அல் ஹசன் (3) ஆகியோர் உள்ளனர்.

News June 1, 2024

வதந்திகளை தடுக்க செபி அதிரடி நடவடிக்கை

image

முதலீட்டாளர்களை பாதுகாக்க செபி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், வதந்திகள் மூலம் சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் ஏற்படுவதை தடுக்க முயன்று வருகிறது. இந்நிலையில், மூலதன மதிப்பு அடிப்படையிலான டாப் 100 நிறுவனங்கள், இன்று முதல் எந்தவொரு ஊடகத் தகவல்களையும் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிச.1 முதல் இந்த விதி டாப் 250 நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

News June 1, 2024

எந்த கருத்துக் கணிப்பையும் நான் நம்புவதில்லை: DKS

image

கர்நாடகாவில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “எந்தவொரு கருத்துக் கணிப்பையும் நான் நம்புவதில்லை. காங்கிரஸ் வெல்வதை பொறுத்திருந்து பாருங்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சொல்லப்படும் கணிப்பை INDIA கூட்டணி பொய்யாக்கும்” என்றார்.

News June 1, 2024

பிற்போக்கு அரசியலை மக்கள் நிராகரிப்பு: மோடி

image

பாஜக அரசை மீண்டும் தேர்ந்தெடுக்க மக்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளதாக பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பாஜக ஆட்சியில் ஏழை மக்களுக்கான ஒவ்வொரு திட்டமும் சார்பில்லாமல் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அதே நேரம், சந்தர்ப்பவாத INDIA கூட்டணியின் பிற்போக்கு அரசியலை மக்கள் நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

News June 1, 2024

பாஜகவுக்கு 700 இடங்கள் கூட கிடைக்கும்: சஞ்சய் சிங்

image

பிரிக்கப்படாத இந்தியாவில் பாஜகவுக்கு 700 இடங்கள் கிடைக்கும் என்று AAP எம்.பி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா 200, பாகிஸ்தான் 100, ஆப்கான் 70, வங்க தேசம் 70, பூட்டான் 50, நேபாளம் 50, தாய்லாந்து 50, இந்தோனேஷியா 30, ஈரான் 30 என பாஜக எம்.பிக்களை பெறும் என அவர் கிண்டலடித்துள்ளார். 2004இல் காங்கிரஸ் வெற்றி பெறாது என்ற கருத்துக்கணிப்புக்களை மீறி, அக்கட்சி ஆட்சியை பிடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

News June 1, 2024

காரில் போகும்போது வாந்தி வருதா? இதைச் செய்யுங்க!

image

கார்களில் செல்லும்போது, சிலருக்கு வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படும். உடலில் பித்த நீர் அதிகம் இருந்தாலோ, நுரையீரல் ஆக்ஸிஜனை இழுக்கும் ஆற்றலை இழந்தாலோ இந்த பிரச்னை வரலாம். எனவே, பயணத்தின்போது, வாந்தி உணர்வு வந்தால், உடனடியாக புளிய மரத்தின் இளந்தளிரை உருவி நன்றாக மென்று, சாறை விழுங்கி, சக்கையைத் மட்டும் துப்பி விடுங்கள். இது பித்தத்தைக் காலி செய்வதோடு உடலுக்கு ஆற்றலும் அளிக்கும்.

News June 1, 2024

ருச்சக யோகத்தால் பணம் கொட்டப் போகும் ராசிகள்

image

செவ்வாய் பகவான், தனது சொந்த ராசியான மேஷ ராசியில் தற்போது நுழைந்துள்ளதால் ருச்சக யோகம் உருவாகியுள்ளது. இதனால் விருச்சிகம், தனுசு, கடகம், துலாம் ராசியினருக்கு பண மழை கொட்டப் போகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை, திடீர் பண வரவு, உறவினர்களிடம் நீடித்துவந்த சிக்கல் விலகுவது, நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடிவது போன்ற பல்வேறு சுப பலன்களை மேற்கண்ட ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.

News June 1, 2024

INDIA TODAY: உ.பி.யில் பாஜக 67 தொகுதிகள் வெல்லும்

image

INDIA TODAY செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, உத்தர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில்,

பாஜக : 64 – 67 தொகுதிகள்
காங்கிரஸ் : 8 -12 தொகுதிகள்
மற்றவை : 0 – 1 தொகுதி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

பல நிலநடுக்கங்களில் இருந்து விடுதலை: அகிலேஷ்

image

உத்தர பிரதேசத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெல்லாது என, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். INDIA கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேசிய அவர், உத்தர பிரதேசத்தில் பெரும்பாலான தொகுதிகளில் INDIA கூட்டணி வெல்லும் என்றார். வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி, சிபிஐ, ஐடி உள்ளிட்ட பல்வேறு நிலநடுக்கங்களில் இருந்து இந்தியா விடுபடவுள்ளதாக கூறினார்.

News June 1, 2024

INDIA TODAY: பாஜக 401 தொகுதிகளில் வெல்லும்

image

INDIA TODAY செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, மொத்தமுள்ள 543 தொகுதிகளில், பாஜக கூட்டணி : 361 – 401 தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணி : 131 – 166 தொகுதிகள் மற்றவை : 8 – 20 தொகுதிகள் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என INDIA TODAY கணித்துள்ளது.

error: Content is protected !!