News June 2, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூன் 2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News June 2, 2024

அண்ணாமலை தோல்வி அடைவார்: இந்தியா டுடே

image

கோவை தொகுதியில் அண்ணாமலை தோல்வியடைவார், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றியை பதிவு செய்வார் என ‘இந்தியா டுடே’ நாளிதழ் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. இதற்கு விளக்கமளித்துள்ள அண்ணாமலை, கோவையில் நிச்சயம் வெற்றி பெறுவேன் எனக் கூறியுள்ளார். முன்னதாக, கோவை தொகுதியில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கிவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

News June 2, 2024

தலைமையைத் தக்க வைப்பாரா இபிஎஸ்?

image

பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் அதிமுக (0-2) படுதோல்வியை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவின் ஒற்றை தலைமையாக உருவெடுக்க நினைத்த இபிஎஸ்ஸின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். உட்கட்சி பூசல், ஆளுமையின்மை போன்றவற்றைக் கூறி மாற்றுத் தலைவரை தேர்வு செய்யக் கோரும் குரல்கள் கட்சிக்குள் எழலாம் என்றும் கூறப்படுகிறது.

News June 2, 2024

தமிழகத்தில் பாஜக காலூன்றிவிட்டது?

image

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 2-4 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இதற்கு, திமுக அரசு மீதான அண்ணாமலையின் விமர்சனம், அதிமுகவின் பலவீனம் ஆகியவை காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அண்ணாமலை மேற்கொண்ட ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை மூலம் பாஜக அரசின் திட்டங்களை தெரியப்படுத்தியதால், மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

News June 2, 2024

அதிமுக ஆட்டம் காணுவது ஏன்?

image

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி, தமிழகத்தில் 38 இடங்களில் வென்றது. இதேபோல 2024 தேர்தலிலும் 33-37 தொகுதிகளை, திமுக கூட்டணி கைப்பற்றும் எனத் தெரிய வந்துள்ளது. இதற்கு, ஒற்றைத் தலைமை ஆசையால் ஓபிஎஸ், சசிகலாவை இபிஎஸ் வெளியேற்றியதே காரணம் எனக் கூறப்படுகிறது. அனைவரையும் அரவணைத்து சென்றிருந்தால் அதிமுக வாக்கு வங்கி சரிந்திருக்காது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

News June 2, 2024

அதிமுக உள்கட்சி பிரச்னையால் திமுகவுக்கு பெரும்பான்மை?

image

மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இதற்கு, அதிமுகவில் நிலவிவரும் உள்கட்சி பூசல்களே காரணம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, அதிமுக தற்போது இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா என 3 அணியாக பிரிந்துள்ளதால் அந்தக் கட்சியின் வாக்கு வங்கி சிதறி பிறக் கட்சிகளுக்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News June 2, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூன் 2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News June 2, 2024

பயிற்சியாளர் பதவிக்கு கம்பீர் சரியானவர்: கங்குலி

image

கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவது நல்ல முடிவு என கங்குலி தெரிவித்துள்ளார். இந்தியாவில் திறமையான பயிற்சியாளர்கள் இருக்கும் நிலையில், வெளிநாட்டு பயிற்சியாளரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்ற அவர், டிராவிட்டுக்கு பதிலாக கம்பீர் தேர்வானால் அது இந்திய அணிக்கு உதவும் என்றார். பயிற்சியாளர் பதவிக்கு கம்பீர் விண்ணப்பித்துள்ளாரா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

News June 2, 2024

ரைட் ஆஃப், தள்ளுபடி என்ன வித்தியாசம்?

image

ரைட் ஆஃப், தள்ளுபடி ஆகிய இரண்டும் வெவ்வேறு. Waiver என்றால் தள்ளுபடி செய்வது, ரைட் ஆஃப் என்றால் தள்ளிவைப்பது. வங்கிகளில் வாராக் கடன்கள் அதிகமாகும் போது, பல சிக்கல்கள் ஏற்படுவதால், அக்கடன்களை ரைட் ஆஃப் செய்வார்கள். அதே நேரம், அவை கடன் புத்தகத்தில் இடம் பெறும். ஆனால், நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாது. அந்த கடன்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் நடக்கும். ஆனால், அவ்வாறு மீட்கப்பட்ட கடன்கள் குறைவுதான்.

News June 2, 2024

பாண்டியாவுக்கு முன்னுரிமை: சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

image

உலகக் கோப்பை போட்டிகளில் ஷிவம் துபேவை விட ஹர்திக் பாண்டியாவிற்கு முன்னுரிமை அளிப்பேன் என முன்னாள் வீரர் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இந்தியா, இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய கடைசி டி20 உலகக் கோப்பையில் போட்டியில், 30 பந்துகளில் 60 ரன்களை பாண்டியா எடுத்ததாக கூறிய அவர், பெரிய தொடர்களில் பாண்டியா முதல்தர தேர்வாக இருப்பார் என்றார். பாண்டியாவை முழு நேர பௌலராக கருத கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!