News June 2, 2024

ஜூன் 2: வரலாற்றில் இன்று

image

*1896 – கம்பியில்லாத் தந்தியை கண்டுபிடித்ததற்கான காப்புரிமத்தை மார்க்கோனி பெற்றார்.
*1964 – பாலஸ்தீன விடுதலை இயக்கம் அமைக்கபட்டது.
*1966 – நாசாவின் சர்வெயர் 1 விண்கலம் சந்திரனில் இறங்கியது.
*1999 – பூட்டானில் முதல் முறையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
*2014 – இந்தியாவின் 29-வது மாநிலமாக தெலங்கானா அறிவிக்கப்பட்டது.

News June 2, 2024

தலைநகரை தவறவிட்டதா AAP-காங்கிரஸ் கூட்டணி?

image

டெல்லியிலுள்ள 7 தொகுதிகளில் 6இல் பாஜக வெல்லும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் ஊழல் புகாரில் கைதானது, காங்கிரஸை எதிர்த்த ஆம் ஆத்மி, தற்போது அதனுடன் கூட்டணி அமைத்துள்ளது போன்றவை, INDIA கூட்டணி தோல்வியடைய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும், டெல்லியில் நடைபெற்ற G20 உச்சி மாநாடு போன்ற நடவடிக்கைகள், பாஜகவுக்கு வாக்கு கிடைக்க உதவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News June 2, 2024

ராகுலுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்

image

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியானது. இதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணி 350 தொகுதிகளில் வெல்லும் என தெரிவித்துள்ளன. ஒருவேளை பாஜக மீண்டும் 3ஆவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தால் காங்கிரஸின் இளந்தலைவர் ராகுல்காந்தியின் அரசியல் வாழ்க்கைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

News June 2, 2024

எதிர்க்கட்சிகள் சேர்ந்து என்ன செய்தன?

image

பாஜக கூட்டணியை வீழ்த்த, காங்., ஆம் ஆத்மி உள்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்து INDIA கூட்டணியை உருவாக்கின. ஆனாலும், 3ஆவது முறையாக பாஜக ஆட்சி அமையும் என கருத்துக்கணிப்புகள் வெளிவந்துள்ளன. இதற்கு, எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்படாததே காரணம் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். மேலும், சில மாநிலங்களில் INDIA கூட்டணியில் உள்ள கட்சிகளே தனித்து போட்டியிட்டதும் காரணமாக கூறப்படுகிறது.

News June 2, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: நட்பியல்
▶அதிகாரம்: பெண்வழிச்சேறல்
▶குறள்: மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.
▶பொருள்: கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.

News June 2, 2024

பாஜக வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்?

image

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, பாஜக மீண்டும் வென்றால் அது மோடி அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படும். குறிப்பாக, உலகளவில் இந்தியா, 5ஆவது பெரிய பொருளாதார நாடு, டிஜிட்டல் பரிவர்த்தனையில் முதலிடம், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு காரணங்களால் வெற்றி வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளதாக பார்க்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

News June 2, 2024

எதிர்க்கட்சிகளின் பிரசாரம் எடுபடவில்லையா?

image

3வது முறையாக பாஜக ஆட்சி அமையும் என கருத்துக்கணிப்புகள் கூறியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, தேர்தல் பத்திரம் மூலம் ஊழல், பெரு முதலாளிகளுக்கு பாஜக உதவுகிறது, CBI, EDஐ வைத்து மிரட்டுகிறது போன்ற பல்வேறு புகார்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால் அது எதுவுமே எதிர்க்கட்சிகளுக்கு கை கொடுக்கவில்லை என்கிறது கருத்துக்கணிப்பு முடிவுகள்.

News June 2, 2024

திராவிடக் கட்சிகளுக்கு மாற்று இல்லையா?

image

இந்தியாவை பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி செய்து வருவதைப்போல, தமிழகத்தில் திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்த 2 திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக தமிழகத்தில் வேறெந்த கட்சியும் வளரவில்லை. இதற்கு MGR, கருணாநிதி, ஜெயலலிதா போன்ற, மறைந்த மூத்த தலைவர்கள் காரணம் என்றாலும், தங்களது தேவைகளை திமுக, அதிமுக நிறைவேற்றுவதாக மக்கள் கருதுவதே முக்கிய காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News June 2, 2024

ஹாட்ரிக் வெற்றியா? ஹாட்ரிக் தோல்வியா?

image

கருத்துக்கணிப்பு அடிப்படையில் பாஜக வெற்றி பெற்றால், தொடர்ந்து 3 முறை வென்ற கட்சியாக உருவெடுக்கும். அதே சமயத்தில், இதுவரை 10 மக்களவைத் தேர்தலில் வென்று சுமார் 45 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுக்கு, ஹாட்ரிக் தோல்வியுடன் பெரும் பின்னடைவாகவும் அமையும். அது மட்டுமின்றி தொடர்ந்து 3 முறை பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவின் சாதனையை, பிரதமர் மோடி சமன் செய்யவும் வாய்ப்புள்ளது.

News June 2, 2024

பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி

image

வங்கதேசம் அணிக்கு எதிரான உலகக் கோப்பை T20 பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. நியூ யார்க்கில் நடைபெற்ற போட்டியில், முதலில் விளையாடிய இந்திய அணி 182/5 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் (53 ரன்கள்), ஹர்திக் (40 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 183 ரன்கள் இலக்குடன் விளையாடிய வங்கதேசம் அணி, 20 ஓவர்களில் 122/9 ரன்கள் மட்டுமே எடுத்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

error: Content is protected !!