News June 2, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜூன் – 2 ▶வைகாசி – 20 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM, மாலை 4:30 PM – 5:30 PM வரை ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM, 01:30 PM – 02:30 PM வரை ▶ராகு காலம்: 4:30 PM – 06:00 PM வரை ▶எமகண்டம்: 12:00 PM – 01:30 PM வரை ▶குளிகை: 03:00 PM – 4:30 PM வரை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶ திதி: ஏகாதசி

News June 2, 2024

மேற்கு வங்கம்: 3இல் 2 பங்கு பாஜகவுக்கு

image

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 3இல் 2 பங்கு இடங்களில் பாஜக வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மம்தா அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. குறிப்பாக சந்தேஷ்காலி விவகாரம், மோடி, அமித்ஷாவின் பிரசார யுக்தி ஆகியவை காரணமாக பார்க்கப்படுகிறது. இதனிடையே, INDIA கூட்டணியில் TMC, காங்கிரஸ் உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் 2 கட்சிகளும் தனித்தே போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

News June 2, 2024

பாஜக வெற்றிக்கு ராமர் கோயில் காரணமா?

image

பாஜக 3ஆவது முறையாக வெற்றி பெறும் எனத் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. இதற்கு, அயோத்தி ராமர் கோயில், வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலயம் புதுப்பிப்பு, இந்து-முஸ்லீம் தொடர்பான பிரசாரம் போன்ற காரணங்கள் கூறப்படுகிறது. மேலும், INDIA கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும், அவர்களிடம் ஒற்றுமை இல்லை என மக்கள் மத்தியில் தோன்றிய எண்ணமும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

News June 2, 2024

ராகுல் யாத்திரையால் கிடைத்தது என்ன?

image

2024 மக்களவைத் தேர்தலுக்காக நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்ட ராகுல், ஒவ்வொரு மாநில மக்களையும் சந்தித்து, காங்கிரஸ் ஆட்சியில் நீதி கிடைக்கும் என வாக்குறுதி அளித்தார். ஆனாலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிய வந்துள்ளது. இதனால், ராகுல் யாத்திரை எடுபடவில்லையா? அல்லது INDIA கூட்டணி மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News June 2, 2024

தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால்?

image

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில், பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை NDA, INDIA என 2 கூட்டணிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தொங்கு நாடாளுமன்றம் அமையும். அப்போது, வெற்றி பெற்ற சிறிய கட்சிகள், சுயேச்சைகளை தங்கள் கூட்டணிக்கு இழுக்க பாஜக, காங்., முயற்சிக்கும். மேலும், அமைச்சரவையில் இடம் போன்ற சலுகைகளும் அறிவிக்கப்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News June 2, 2024

அதிகாலையில் தினமும் இதை செய்யுங்கள்

image

அதிகாலை எழுவதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கியங்கள் கிடைக்கும். அந்த வகையில், நாள்தோறும் அதிகாலை 4 மணிக்கு கண் விழிப்பவர்கள், எழுந்தவுடன் சிறிது நேரம் அமைதியாக தியானம் செய்யலாம். அதன் பிறகு, முடிந்த வரை 1 லிட்டர் அளவுக்கு சிறிது சிறிதாக தண்ணீரை பருகவும். பிறகு 10 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து அன்றாட செயல்களை செய்ய ஆரம்பித்தால் அன்றைய நாள் முழுவதும் ஆரோக்கியம் மேலோங்கும்.

News June 2, 2024

உ.பி-யில் எடுபடவில்லையா ராகுல், பிரியங்கா பிரசாரம்?

image

மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில், பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் அங்கு ராகுல், பிரியங்கா போன்றோரின் பிரசாரம் எடுபடவில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக, அரசியல் ஆதாயத்திற்காக ராமர் கோயில் கட்டப்பட்டது போன்ற பிரசாரங்களை முன்வைத்தபோதும், ஆளுங்கட்சியான பாஜக தனது கட்டுப்பாட்டில் உ.பி., இருப்பதை உறுதி செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

News June 2, 2024

பிரதமர் மோடியை மகிழ்விக்க கருத்துக்கணிப்பு

image

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பிரதமர் மோடியை மகிழ்விப்பதற்கான அரசாங்க கருத்துக்கணிப்பு என காங்., நிர்வாகி சுப்ரியா ஸ்ரீநாத் கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலில், INDIA கூட்டணி 295 தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதை ஏற்கெனவே உறுதி செய்துவிட்டதாகக் கூறிய அவர், மக்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளதால் தேர்தல் முடிவு INDIA கூட்டணிக்கு சாதகமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News June 2, 2024

பிரஜ்வால் ரேவண்ணாவால் தாக்கம் இல்லை?

image

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால், நூற்றுக்கணக்கான பெண்களுடன் தொடர்பில் இருந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், கர்நாடகாவில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதனால், பிரஜ்வால் விவகாரம் கர்நாடக தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனத் தெரிகிறது. கர்நாடகாவில் பாஜக-மஜத இணைந்து போட்டியிட்டது.

News June 2, 2024

கர்நாடகாவில் கோட்டை விட்டதா காங்கிரஸ்?

image

கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் NDA (பாஜக) கூட்டணி 26 தொகுதிகள் வரை வெல்லும் என கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. இதற்கு பெங்களூருவில் நிலவும் தண்ணீர் பஞ்சம், காங்கிரஸ் அமைச்சர்கள் சிலர் மீதான ஊழல் புகார் போன்றவை காரணமாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

error: Content is protected !!