India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின் நிறைவடைந்த நிலையில், இன்று அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைகிறார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21இல் அவர் கைது செய்யப்பட்ட அவர், மக்களவைத் தேர்தலைக் காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தில் ஜாமின் பெற்றிருந்தார். தொடர்ந்து, ஜாமின் நீட்டிப்பு கோரி டெல்லி ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த மனு ஜூன் 5க்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால், இன்று அவர் சிறை செல்கிறார்.
1980, 1990களில் கொடி கட்டி பறந்த நடிகர்களில் மோகனும் ஒருவர். பிறகு பட வாய்ப்பு இல்லாமல் ஒதுங்கியிருந்த மோகன், அண்மையில் ஹரா படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுகுறித்து பேட்டியளித்த மோகன், விஜய் அமைதியானவர். அந்த குணத்தை அவரிடம் இருந்து கற்க வேண்டுமென புகழ்ந்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. சென்னை புறநகரில் உள்ள பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வு அமலாகிறது. குறைந்த பட்சம் ₹5 முதல் அதிகபட்சமாக ₹20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட வேண்டிய சுங்க கட்டணம், தேர்தல் காரணமாக உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்ததும் அமல்படுத்தப்படுகிறது.
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கி நடந்து வருகிறது. அருணாச்சலில், பாஜக 60 தொகுதிகளிலும், காங்., 34 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அதில், அம்மாநில முதல்வர் பெமா காண்டு உட்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சியுள்ள 50 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தபால் வாக்கு எண்ணிக்கையில், பாஜகவே முன்னிலையில் உள்ளது.
INDIA கூட்டணியைச் அரசியல் கட்சிகளின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கையின்போது, எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார். வாக்கு வித்தியாசம் நிலவும் தொகுதிகளில், வெற்றி பெற தகிடுதத்தங்களை செயல்படுத்த பாஜக முனையலாம் எனக் குற்றம்சாட்டிய அவர், INDIA கூட்டணி முகவர்கள் 17-சி படிவத்தை கவனமாக பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மே மாதத்தில் ஜிஎஸ்டி ₹1.73 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது முந்தைய நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் வசூலானதை விட 10% அதிகமாகும். மத்திய ஜிஎஸ்டியாக ₹32,409 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ₹40,265 கோடியும் வசூலாகியுள்ளது. மே மாதத்தில் இறக்குமதி குறைந்த போதிலும், உள்நாட்டு பரிவர்த்தனைகள் 15.3% வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் தமிழக கோழிப் பண்ணைகளில் தீவிர கண்காணிப்புப் பணிகள் நடந்து வருகிறது. கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் அதிகம் பரவுவதால் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை கடிதம் அனுப்பியிருந்தது. இதை தொடர்ந்து, தமிழக கோழிப் பண்ணைகளில் கோழிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
தேர்தல் பிரசாரத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜுன் 4 வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு டிடிவி தினகரன் வசம் அதிமுக செல்லும் எனக் கூறியிருந்தார். இன்னும் 2 நாள்களே வாக்கு எண்ணிக்கைக்கு உள்ள நிலையில், அண்ணாமலை சொன்னது போல அதிமுக டிடிவி தினகரன் வசம் செல்லுமா, செல்லாதா? அதற்கான முயற்சி நடந்தால், இபிஎஸ் எப்படி தடுத்து நிறுத்துவார் என்ற கலக்கத்தில் அவருடைய ஆதரவாளர்கள் உள்ளனர்.
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அச்சமின்றி விளையாட வேண்டும் என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி அறிவுரை கூறியுள்ளார். அமெரிக்காவில் அமைக்கப்பட்டு இருக்கும் செயற்கை ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருக்கும் எனக் கூறிய அவர், அபாரமான ஃபார்மில் உள்ள இந்திய அணி, டி20 உலகக் கோப்பை தொடரில் வெற்றி, தோல்வியை பற்றி சிந்திக்காமல் விளையாட வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்திய வம்சாவளி அமெரிக்க வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்பட 2 பேர் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் கடைசி 3 நிமிடங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது. இன்று மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனிதா 2 முறை விண்வெளி சென்று 322 நாள்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கிய அனுபவம் பெற்றவராவார்.
Sorry, no posts matched your criteria.