India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், பாஜக இரட்டை இலக்கத்தில் வெற்றிபெறும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் பிரதமர் மோடிக்கு ஆதரவான அலை வீசுகிறது எனக் கூறிய அவர், 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்பார் என்றார். இன்னும் 3 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் 3ஆவது இடத்துக்கு உயர்வோம் என்ற கேரண்டியை பாஜக காப்பாற்றும் எனத் தெரிவித்தார்.
சர்வதேச ஓபன் தடகள கான்டினென்டல் போட்டியில், இந்திய வீரர் டி.பி.மானு (24) தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தைவானில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில், இந்தியா சார்பில் பங்கேற்ற
கர்நாடகாவைச் சேர்ந்த மானு 81.58 மீட்டர் தூரம் எறிந்து, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இருப்பினும், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கை (85.50 மீட்டர்) எட்டிப்பிடிக்காததால், அவரால் அப்போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை.
Matrize- Republic bharat வெளியிட்ட கருத்து கணிப்பில் திமுக கூட்டணி 35-38 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 0-3 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 0-1 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சாணக்யா – நியூஸ் 24 வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகளில் திமுக கூட்டணி 24-33 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 6-14 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 0-2 தொகுதிகளிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
சி-வோட்டர்-ஏபிபி கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 0-2 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், பிற கட்சிகள் எந்தத் தொகுதிகளிலும் வெற்றி பெறாது எனவும் கூறப்பட்டுள்ளது. ETG-Times now வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில், திமுக கூட்டணி 34 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி 3 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Axis-India Today ஆகியவை வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகளில், திமுக கூட்டணி தமிழகத்தில் 33-37 வரையிலான இடங்களை வெல்லக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. பாஜக கூட்டணி 2-4 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 0-2 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. சி-வோட்டர்-ஏபிபி வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகளில் திமுக கூட்டணி 37-39 தொகுதிகளை கைப்பற்றும் எனக் கூறியுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரின் அமெரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் கனடா அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால், கனடா அணி முதலில் களமிறங்கியது. நவ்நீத் தலிவால்(61), நிக்கோலஸ் கிர்டன் (51) அரைசதம் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தனர். அமெரிக்க பந்துவீச்சாளர்களில் அலிகான், ஹர்மீத், கோரி ஆண்டர்சன் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தமிழக அரசியல் என்றாலே திமுக, அதிமுகதான் என்ற கருத்து சுமார் 50 ஆண்டுகளாகவே உள்ளது. ஆனால் மக்களவைத் தேர்தல் கருத்து கணிப்புகள், திமுக கூட்டணி, பாஜக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கின்றன. இதுபோல நடந்தால் இனி திமுக Vs அதிமுக அரசியல் என்ற நிலை மாறி, திமுக Vs பாஜக அரசியல் என்ற நிலை உருவாகக்கூடும், அந்த 2 கட்சிகளுடன் பிற கட்சிகள் கூட்டணி வைக்கும் நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இதில் 32 தொகுதிகள் கொண்ட அம்மாநிலத்தில், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 26 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை. பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிப்பதன் மூலம் எஸ்.கே.எம் தலைவர் பிரேம் சிங் தமாங் மீண்டும் ஆட்சியமைக்கிறார்.
பாஜக தோற்பதற்கான அனைத்து வேலைகளையும் பிரதமர் மோடி ஏற்கெனவே சிறப்பாக செய்துவிட்டதாக
நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். ஜூன் 4இல் பாஜக அரசை மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள் என்று தான் உறுதியாக நம்புவதாகக் கூறிய அவர், சினிமா சூட்டிங் போல நாடு முழுவதும் பாஜக நடத்தும் அரசியல் சூட்டிங் இனி எடுபடாது என்றார். பெரியார் போன்ற தலைவர்கள் விதைத்த கொள்கையும், சிந்தனையும் நம்மை வழிநடத்தும் என்று தெரிவித்தார்.
2024 மக்களவைத் தேர்தல் குறித்து நேற்று வெளியான பெரும்பாலான கருத்து கணிப்புகளிலும், அதிமுகவுக்கு சாதகமாக எதுவும் தெரிவிக்கவில்லை. திமுக, பாஜக கூட்டணிகளை முன்னிறுத்தியே அனைத்து கருத்து கணிப்புகளும் இருந்தன. குறிப்பாக, Republic bharat, Chanakya ஆகியவை பிற கட்சிகள் என அதிமுகவை குறிப்பிட்டு 0-1, 0-2 இடங்களே கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளன. இதை நினைத்து அதிமுக தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.