India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சையாக ஓபிஎஸ் போட்டியிட்டார். அவரது மகன் ரவீந்திரநாத், மத்தியில் மீண்டும் பாஜக அரசு அமைந்தால் தனது தந்தைக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என்றும், மத்திய அமைச்சரவையில் கனரகத் தொழில்துறை, நிலக்கரி ஆகிய இலாகாக்களில் ஒரு இலாகா அளிக்கப்படலாம் என ஆதரவாளர்களிடம் நம்பிக்கையுடன் பேசி வருவதாக சொல்லப்படுகிறது.
சென்னை கே.கே.நகரில் ப்ளஸ் 2 படிக்கும் மாணவனை வளர்ப்பு நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதியில் நடந்து சென்ற மாணவனை மோகன் என்பவரது நாய் கடித்ததில் மாணவனின் கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சிறுவனின் தந்தை துரைராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
50 வயதைத் தாண்டினாலும், ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று நடிகை வாணி போஜன் கூறியுள்ளார். நடிகையாக இருப்பவர்களுக்கு எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கும் துணிச்சல் இருக்க வேண்டும் என்ற அவர், வித்தியாசமான கதைக்களங்களில் நடிக்க தயக்கம் கூடாது என்றார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் விரும்பி, ரசித்து நடித்து வருகிறேன் எனவும் அவர் கூறினார்.
மே மாதத்தில் 84 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி இருப்பதாக CMRL நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் பதிவான 81 லட்சம் என்ற எண்ணிக்கையை விட 4% அதிகம். கடுமையான வெப்பம் காரணமாக மக்கள் இருசக்கர வாகனம் மற்றும் பேருந்தினை தவிர்த்து மெட்ரோவில் பயணித்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். மே 10ஆம் தேதி மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மெட்ரோவில் பயணித்துள்ளனர்.
இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 304 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. AFCAT 02/2024 பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு (Physics & Maths). வயது வரம்பு: 20 – 24. சம்பள வரம்பு: ₹ 56,100/ – ₹.1,77,500/- விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 28. விண்ணப்பக் கட்டணம்: ₹550+ GST வரி மேலும் தகவல்களுக்கு <
மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் 3ஆவது முறையாக மீண்டும் என்டிஏ கூட்டணி வெல்லும் என கணித்துள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் காங்., கட்சிக்கு 13 – 15 இடங்களில் வெற்றி கிடைக்கும் என AAJ TAK நிறுவனம் கணித்திருந்தது. இதனை காங்., எம்.பி ஜோதிமணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்., 9 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜுன் 4 வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, தமிழக பாஜகவில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை பதவியைக் குறிவைத்து மூத்த தலைவர் ஒருவர் காய் நகர்த்தி வருவதாகவும், இதன் காரணமாகவே அண்மையில் சென்னையில் அண்ணாமலை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றும், இது அவருக்கும் தெரியும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
சென்னை விமான நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர். நந்தனம் YMCA வளாகம், பூக்கடை NSC போஸ் சாலை, YMCA கட்டிடம் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தொடர்ந்து, 3 இடங்களிலும் சோதனை நடத்தியதில் இந்த மிரட்டல் புரளி என தெரியவந்தது. மிரட்டல் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் 81ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது ‘இளையராஜா’ படக்குழு. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் அவரது பெயரிலேயே உருவாகி வருகிறது. தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் இருந்து சென்னைக்கு கனவுகளுடன் வரும் இளைஞனின் வெற்றிக் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
ஒடிசாவில் பாலசோர் ரயில் விபத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது ஜூன் 2, 2023 அன்று இரவு, பாலசோர் மாவட்டத்தின் பஹானாகா பஜார் ஸ்டேஷன் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி, பெங்களூரு-ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு, விபத்துக்குள்ளாகியது. இந்த சம்பவத்தில் சுமார் 293 பேர் உயிரிழந்தனர். 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.