News June 2, 2024

சரித்திரம் படைத்த அமெரிக்க வீரர்

image

டி20 உலகக் கோப்பை தொடரில் கனடா அணிக்கு எதிரான போட்டியில் அமெரிக்க வீரர் ஆரோன் ஜோன்ஸ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, இன்றைய போட்டியில் ஜோன்ஸ் 10 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதன் மூலம், டி20 போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த 2ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அத்துடன், ஜாம்பவான் கிறிஸ் கெய்லின் (10 Vs SA) சாதனையையும் சமன் செய்துள்ளார்.

News June 2, 2024

தருமபுரியில் வெற்றி யாருக்கு?

image

தந்தி தொலைக்காட்சியின் EXITPOLLS கருத்து கணிப்பு முடிவில், நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்கிய தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.மணி ஜெயிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆ.மணி 34%, பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி 32% வாக்குகள், அதிமுக வேட்பாளர் அசோக் 26% வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

News June 2, 2024

₹25,000 கோடி வெளியே எடுக்கப்பட்டது

image

மே மாதத்தில் மட்டும் சுமார் ₹25,586 கோடியை இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எடுத்துள்ளனர். தேர்தல் நடைபெற்று வந்ததால், அடுத்தது யார் ஆட்சியமைக்கப் போகின்றனர் என்ற சந்தேகத்தில் முதலீடு வெளியே எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், உள்நாட்டு முதலீட்டாளர்களால் பங்குச்சந்தை தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

News June 2, 2024

இயக்குநர் மணிரத்னம் பிறந்த நாள் இன்று!

image

காலத்துக்கு ஏற்ப தனது திரைமொழியை மாற்றிக் கொண்டு படைப்புகளைத் தருபவர் இயக்குநர் மணிரத்னம். வசனம், ஒளி அமைப்பு, ஒலிப் பயன்பாடு, நிறங்களுக்கு முக்கியத்துவம் தரும் அதேநேரம் ஆழமான உள்ளடக்கத்திற்கு பெயர் பெற்ற ‘மௌன ராகம்’, ‘இருவர்’ போன்ற அவரது படைப்புகள் காலம் கடந்து ரசிக்கப்படுகிறது. அவரின் வற்றாத படைப்பாளுமை இன்னும் பல ஆண்டுகளுக்கு இதே
உற்சாகத்துடன் தொடர இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறோம்.

News June 2, 2024

தமிழகத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழைப் பதிவு

image

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 10 செ.மீ., மழை பதிவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டம் வால்பாறை, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ., மழையும் ஓசூர், விராலிமலை, ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

News June 2, 2024

டி.ராஜேந்தர் என்னை கட்டித்தழுவி அழுதார்: கமல்

image

திரையுலகில் இன்று தான் நிற்பதற்கு காரணமானவர்களில் டி.ராஜேந்தரும் ஒருவர் என்று நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்தியன் 2 பாடல் வெளியிட்டு விழாவில் பேசிய அவர், நான் நடித்த திரைப்படம் ஒன்று பல பிரச்னைகளைச் சந்தித்தபோது, மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். அப்போது என்னைச் சந்தித்த ராஜேந்திரன், ‘நீங்கள் சினிமாவை விட்டு போகக்கூடாது’ எனக் கூறி கட்டித்தழுவி அழுதார் என்றார்.

News June 2, 2024

ஆம் ஆத்மி தலைவர்களை நம்பவில்லையா கெஜ்ரிவால்?

image

மதுபான கொள்கை வழக்கில் இடைக்கால ஜாமின் நிறைவடைந்ததால் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று சரணடையவுள்ளார். பொதுவாக, ஊழல் புகார் எழுந்ததும் பதவியை ராஜினாமா செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் கெஜ்ரிவால் ராஜினாமா செய்யாமல் முதல்வர் பதவியில் நீடிக்கிறார். இதைக்கண்ட பாஜகவினர், ஆம் ஆத்மி தலைவர்கள் மீது நம்பிக்கை இல்லாததால், பதவியை ஒப்படைக்க கெஜ்ரிவால் தயங்குவதாக விமர்சிக்கின்றனர்.

News June 2, 2024

விருதுநகர் தொகுதியில் வெல்லப்போவது யார்?

image

தந்தி தொலைக்காட்சியின் EXITPOLLS கருத்து கணிப்பு முடிவில், நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்கிய விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஜெயிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மாணிக்கம் தாகூர் 36%, அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் 32%, பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் 21% வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

News June 2, 2024

இந்தியன் படத்தில் சிவாஜி அறிவுரைப்படி நடித்தேன்

image

இந்தியன் 2 திரைப்பட இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன், இந்தியன் ஒரு மிகப்பெரிய கதை என்றும் இதுபோன்ற படத்தை சிவாஜியை வைத்து இயக்க நினைத்ததாகவும் கூறினார். சிவாஜிதான் இந்தியன் 1 படத்தில் அப்பா – மகன் என 2 கதாபாத்திரங்களில் நடிக்க அறிவுரை வழங்கினார் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டார். பிரமாண்டத்துக்கு உதாரணம் என்றால், சங்கர்தான் என்றும் அவர் பாராட்டினார்.

News June 2, 2024

தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

image

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4இல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழகத்தில் அன்றைய தினம் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் தலா 1,000 போலீசார் வீதம் 39,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அத்துடன், கட்சி அலுவலகங்கள், பொது இடங்களில் சுமார் 60,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

error: Content is protected !!