News June 2, 2024

பிரிட்டன், பிரான்சை அழித்துவிடுவோம்: ரஷ்யா

image

3ஆம் உலகப் போர் தொடர்பாக புதின் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஒருவேளை அதுபோன்ற போர் மூண்டால் பிரிட்டன், பிரான்சை ஒரே நாளில் அழிப்போம் என அந்நாட்டின் ராணுவ நிபுணர் தற்போது மிரட்டல் விடுத்துள்ளார். உக்ரைனுக்கு நேட்டோ உதவுவதால் ரஷ்யா கடும் அதிருப்தியில் உள்ளது. இந்நிலையில் ரஷ்ய ராணுவ நிபுணர் யுரி பரன்சிக் அளித்த பேட்டியில், ரஷ்யாவின் பதிலடி கடுமையாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

News June 2, 2024

350 சிசி ராயல் என்பீல்ட் வாகன விற்பனை 13% சரிவு

image

350 சிசி ராயல் என்பீல்ட் வாகனங்கள், 2023 மே மாதம் 69,038 விற்பனையான நிலையில், 2024 மே மாதம் 59,852 மட்டும் விற்பனையாகியுள்ளன. இது 13% சரிவாகும். அதேநேரத்தில் 350 சிசிக்கும் மேல் திறன் கொண்ட வாகன விற்பனை 32% , வெளிநாட்டு ஏற்றுமதி 12% அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் 2023 மே மாதம் 77,461 வாகனங்கள் விற்பனையான நிலையில், 2024 மே மாதம் 71,010ஆக குறைந்துள்ளது. இது 8% வீழ்ச்சியாகும்.

News June 2, 2024

தேர்தல் கருத்துக்கணிப்புகளை நம்பலாமா?

image

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான கருத்துக்கணிப்புகள் வெளியாகி, அனைத்து தளத்திலும் பேசுபொருளாகியுள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என கணித்துள்ளதால், கருத்துக்கணிப்பின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. இந்நிலையில், கருத்துக்கணிப்புகளை நம்பலாமா? வேண்டாமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

News June 2, 2024

தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே இல்லை

image

ஜூன் 4இல் இந்தியாவை சூழ்ந்த இருள் அகலும், புதிய வெளிச்சம் பிறக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்கும் புதிய விடியலாக அந்நாள் இருக்கும் என்று கூறிய அவர், 10 ஆண்டுகால இருண்ட ஆட்சி, இந்தியாவை அதளபாதாளத்தில் தள்ளியதாகவும் கூறினார். மேலும், தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே இல்லை என்றும், 40க்கு 40 என திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

News June 2, 2024

ஜுன் 4இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் முறை (3/4)

image

வாக்கு எண்ணும் முகவர்கள், அப்பணி முடிந்து ரிசல்ட் வெளிவரும் வரை வெளியே செல்ல அனுமதி கிடையாது. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் உரிய ஒப்புதல் பெற்று அங்குள்ள போர்டில் முகவர்கள் எழுதுவர். இதுபோல் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு, வெற்றி பெற்றோரின் விவரம் படிவம் 40இல் எழுதப்படும். அதற்கு கண்காணிப்பாளர் ஆட்சேபனை இல்லை (NoC) என்ற சான்று அளித்ததும் முடிவு சத்தமாக அறிவிக்கப்படும்.

News June 2, 2024

ஜுன் 4இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் முறை (2/4)

image

வாக்கு எண்ணும் மையத்தில் 7-14 மேஜைகள் அமைக்கப்பட்டு, அங்கு வாக்கு எண்ணும் முகவர்கள் மூலம் எண்ணிக்கை நடைபெறும். சிறிது தூர இடைவெளியில் தடுப்புக்கு அப்பால் வேட்பாளர்களின் முகவர்கள் நின்று இதை பார்க்க அனுமதிக்கப்படுவர். முதலில் தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு எண்ணப்படும். அதன்பிறகு அரை மணி நேரம் கழித்து EVM இயந்திரம் சீல் திறக்கப்பட்டு, வேட்பாளர்களின் முகவர்களிடம் காட்டியபிறகு வாக்குகள் எண்ணப்படும்.

News June 2, 2024

ஜுன் 4இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் முறை (1/4)

image

மக்களவைத் தேர்தல் வாக்குகள் வரும் 4ஆம் தேதி எண்ணப்படவுள்ளது. அந்த எண்ணிக்கை எப்படி நடைபெறும், ஒவ்வொரு சுற்று முடிவும் எப்படி வெளியிடப்படும் என்பதை தெரிந்து கொள்வோம். தொகுதியில் உள்ள EVM இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் ஒரே மையத்துக்கு எடுத்து வரப்பட்டு காலை 8 மணி முதல் வாக்குகள் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட ரிடர்னிங் ஆபிசர், துணை ரிடர்னிங் ஆபிசர் மேற்பார்வையில் எண்ணப்படும்.

News June 2, 2024

ஜுன் 4இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் முறை (4/4)

image

வாக்கு எண்ணிக்கை முழுவதும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும். EVM வாக்குகளும் VVPAT சீட்டுகளும் அதற்கென உள்ள விதிப்படி ஒப்பிட்டு சரி பார்க்கப்படும். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும், EVM இயந்திரங்கள், VVPAT இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் பாதுகாப்பாக வைக்கப்படும். யாரேனும் சந்தேகம் எழுப்பினாலோ, வழக்குத் தொடுத்தாலோ, இதை வைத்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்.

News June 2, 2024

தவறான கருத்துக்கணிப்புகள்: ஜெய்ராம் ரமேஷ்

image

கருத்துக்கணிப்புகள் தவறானவை, INDIA கூட்டணி 295 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். உளவியல் ரீதியில் எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையம், வாக்கு எண்ணும் முகவர்கள், ரிடர்னிங் அதிகாரிகள் ஆகியோருக்கு தாங்கள் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வருவோம் என போலி கருத்துக்கணிப்பு மூலம் மோடி, அமித் ஷா அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

News June 2, 2024

EXITPOLLS: INDIA கூட்டணி வெல்லும் என கணிப்பு

image

INDIA கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தேசபந்து நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் கூறியுள்ளது. INDIA கூட்டணிக்கு 255 – 290 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. NDA கூட்டணி 207 – 241 தொகுதிகளை கைப்பற்றக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் NDA கூட்டணி ஆட்சி அமைக்கும் எனக் கூறிய நிலையில், தேசபந்து INDIA கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளது.

error: Content is protected !!